சென்ற தொடர்களில் பார்த்துக் கொண்டு வருகின்ற Freelancing விடயங்களின் தொடர்ச்சியாகவே இத்தொடரும் வருகின்றது. ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி என்ற கேள்விக்கு விடைதேடும் நமது பயணத்தில் இது இன்னொரு தரிப்பிடம். நமது இத்தொடர் – தமிழில் இது தொடர்பாக இணையவெளிகளில் தகவல்களைத் தேடிக் கொண்டிருக்கின்ற பலருக்கும் உதவும் என்பதில் ஐயமில்லை. Online Jobs in Tamil எனத் தேடத் தொடங்கி, நம்மவர்கள் தற்போது, panam sambathika vali tamil எனக்கூட தேடி தகவல்களைப் பெற முயல்கின்றனர். அவ்வாறனவர்களையும் ஊக்குவிக்க எடுக்கப்படும் முயற்சியே இது. Panam sambathika vali பல உள்ளன. இணையத்தில் அவற்றிற்கான வழிகளை கீழுள்ள சுட்டிகளின் மூலம் நீங்கள் அடையலாம்.
முன்பய தொடர்களை காண :
ONLINE JOBS TAMIL : இணையம் மூலம் சம்பாதிக்கலாம் வழிகாட்டி தொடர் – 01
HOW TO EARN MONEY ONLINE IN TAMIL : ஆன்லைனில் பணம் உழைப்பது எப்படி (02)
FREELANCE IN TAMIL : ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? (03)
DATA ENTRY JOBS TAMIL எனத் தேடி வெல்லமுடியாது : ONLINE JOBS வழங்கும் தளங்களின் விபரங்கள் (4)
Freelancer கள் தங்களின் திறமைக்கு ஏற்ற வகையில் பல்வேறு Freelancing தளங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இந்தக் கட்டுரையில்,
- Video Editors Jobs (Websites)
- Freelance Marketing Jobs (Websites)
- SEO Jobs (Websites)
- Virtual Assistant Jobs (Websites)
- Testing Jobs (Websites)
ஆகியவற்றினை வழங்குகின்ற இணையத்தளங்களை பார்க்கலாம்.
Video Editors Jobs (Websites)
முன்பு நோக்கியது போல, Graphic Designing இற்கு உள்ள அதே அளவான தேவை Video Editing இற்கும் உள்ளது. Video களை திறமையாக மெருகூட்ட தெரிந்த எடிட்டர்களுக்கு தேவையான இடம் எப்போதும் Online Jobs களை பொறுத்தவரையில் காணப்பட்டுக் கொண்டே உள்ளது. இச்சேவையினை வழங்கும் Freelancer களை இணைக்கும் வகையில் பல இணையத்தளங்கள் இருந்தாலும், கீழே குறிப்பிடப்படுகின்ற தளங்கள் இச்சேவையினை வழங்குவதில் முன்னணியில் நிற்கின்றன.
ProductionHUB
இத்தளமானது, Freelancer களின் படைப்புக்களை காட்சிப்படுத்த உதவுகின்றதுடன், Client களின் எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்ப Freelancer கள் தங்களது கற்பனாதிறனை உபயோகித்து படைப்புக்களை மேற்கொள்ளவும் உதவுகின்றது.
https://www.productionhub.com/jobs
Media Bistro
இத்தளமானது வீடியோ எடிட்டிங்க் மாத்திரமல்லாது, தொடர்பூடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் போன்றவற்றிலும் Content களை உருவாக்கல் மற்றும் அவற்றை திருத்தல் போன்ற வேலைகளையும் பெறக் கூடியதாக இருக்கும். எடிட்டிங்க் இல் அனுபவம் உள்ள Freelancer களுக்கு panam sambathika vali இத்தளத்தின் மூலம் கிடைக்கும்.
https://www.mediabistro.com/
Mandy
இத்தளமானது, சினித்துறையுடன் தொடர்பான அனைத்து பணிகளுக்கும் Freelancer களை தேடுகின்ற ஒரு தளமாகும், வீடியோ எடிட்டிங்க் மட்டுமல்லாது,திரைக்கதை தொடங்கி நடிகர்கள் வரை சினிமா தொடர்பான அனைத்து துறைகளுக்குமான வேலைகளை இங்கு நாம் பெறலாம்.
Stage 32
இத்தளமானது அமெரிக்க தளம் ஒன்றாகும். இதில், இலத்திரனியல் ஊடகத் துறை சார்ந்த பல்வேறுபட்ட Frelaancing பணிகள் காணப்படுகின்றன. குறும்படங்கள், ஆவணப்படங்கள் போன்றவற்றினை படைக்கின்ற படைப்பாளர்கள் தங்களது நிதியினை வினைத்திறனுடன் பயன்படுத்தும் பொருட்டு, இத்தளத்தின் மூலம் Freelancer களின் சேவையினை பெற்றுக் கொள்கின்றனர். Panam sambathika vali tamil எனத் தகவல் வேண்டுகின்றவர்கள் இத்தளத்தினை சென்று பார்க்கலாம்.
https://www.stage32.com/welcome/
Assemble
இதுவும் மேற்குறிப்பிட்ட தளங்கள் போலவே காட்சி ஊடகங்களுடன் தொடர்புடைய பணிகளை வழங்குகின்றது. இத்துறையுடன் தொடர்புடைய பலரும் தங்களுக்கு தேவையான பணிகளை கோர அப்பணிகளை பூரணப்படுத்தும் திறனுள்ள Freelancer கள் அப்பணிகளை மேற்கொண்டு panam sambathika vali தேடுகின்றனர்.
Marketing Jobs (Websites)
அடுத்த பிரதான பகுதி சந்தைப்படுத்தல் தொடர்பான பணிகளுக்கு Freelancer களை தேடுகின்ற இணையத்தளங்களாகும். ஆன்லைன் மூலமான வேலைகளில் சந்தைப்படுத்தலும் ஒரு பகுதியாக இருந்தாலும், அது மரபுரீதியான சந்தைப்படுத்தல் முறையாக இருக்காது. அனேகமான முறைகள் இணையத்தளங்களுடன் ஒட்டியதாகாவே இருக்கும்.
இச்சந்தைப்படுத்தல் வேலைகள் Freelancing என்பதையும் தாண்டி பல்வேறு வடிவங்களில் online இல் காணப்படுகின்றன. அவ்வாறான பணிகளை வழங்குகின்ற தளங்கள் தொடர்பில் நாம் இனி காண்போம்.
Zirtual
இந்த வகையறா Freelancing பணிகளைத் தருகின்ற தளங்களுள் இத்தளமானது முக்கியமான ஒன்று. தொலைதூரத்திலிருந்தும் முழு நேர வேலையாக இதனை மேற்கொள்ள இத்தளமானது அனுமதிக்கின்றது.
மின்னஞ்சல் மூலமான சந்தைப்படுத்தல் பணிகள், அது போல, Web page Research என பலவகையானபணிகளை இத்தளம் மூலம் நாம் பெறலாம். இத்தளத்தில் உள்ள ஒரு குறை – இத்தளமானது அமெரிக்காவில் வதிவோர்களுக்கு மட்டுமே சேவையினை வழங்குகின்ற ஒரு தளமாகும்.
Clickworker
இத்தளமானது, நுகர்வோரின் நடத்தைகள் மற்றும் கொள்வனவில் அவர்களது செயற்பாடுகள் போன்றவற்றைப்பற்றி ஆய்வு செய்து பெரு நிறுவனங்களுக்கு அவர்களது சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளின் போது உதவுகின்ற பணியினை மேற்கொள்கின்றது.
இத்தளம் மூலம் சந்தைப்படுத்தலுடன் தொடர்புபட்ட பல்வேறு வேலைகளை மேற்கொள்ளலாம். இது பல நாடுகளிலும் செயற்பட்டாலும் ஒரு சில நாடுகளுக்கான சேவையினை இன்னும் வழங்க ஆரம்பிக்கவில்லை.
இந்தியாவில் இத்தளத்தின் மூலம் ஒரு Freelancer வேலைகளைப் பெறமுடியும் அதே வேளை, இலங்கையில் உள்ள ஒரு Freelancer இத்தளத்தில் தன்னை இணைக்கமுடியாது.
இவ்விரு தளங்கள் மூலமாக சந்தைப்படுத்தல் துறையில் உள்ளவர்கள் இலகுவாக Panam sambathika முடியும்.
SEO Jobs (Websites)
அடுத்த பிரதான துறையாக காணப்படுவது SEO எனப்படும் Search Engine Optimization எனப்படும் இணையத்துடன் தொடர்பான பணியாகும்.
இது ஏனைய இணைய வழி தொழில்கள் போல அல்லாமல், தொழில்நுட்பரீதியிலும் SEO சார்ந்த அறிவிலும் அனுபவத்திலும் சிறப்புத் தேர்ச்சியினை கொண்டவர்களினாலேயே முடியும்.
SEO என்பது – தேடுபொறிகளில், குறிப்பாக கூகிள் தேடு பொறியில் நமது இணையத்தளத்தினை முன்னிலைப்படுத்த பிரயோகிக்கப்படும் ஒரு பொறிமுறையாகும். இதனை ஒரு துறையாக விருத்தி செய்து அதில் பல யுக்திகளை கையாண்டு, இதன் மூலம் panam sambathika vali செய்துள்ள பலரும் உள்ளனர். Tamil இல் நாமும் கிடைக்கின்ற தகவல்களைக் கொண்டு முயன்றால் நாமும் வெற்றி பெறமுடியும்.
இனி SEO இற்கான Freelancing பணிகளை அளிக்கின்ற இணையத்தளங்களை பார்ப்போம்.
Konker
இத்தளமானது, SEO வுடன் தொடர்பான பல்வேறுபட்ட பணிகளுக்கான Freelancing இனைத் தருகின்றது. Backlink களை உருவாக்குதல், Keyword Research, Site Optimization போன்ற விடயங்களில் தேர்ச்சி உள்ளவராக நீங்கள் இருந்தால், இத்தளத்தில் பணிகளை பெற்று உழைக்கலாம்.
SEOclerk
SEO தொடர்பான வேலைகளுக்கு Freelancer களை அவர்களது திறன் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் வேறாக்கி வழங்குகின்றது. இத்தளத்தின் மூலம், Freelancing பணிகளை பெறுகின்ற போது, உங்களின் Rank அதிகரிப்பதுடன் அதிகமான பணிகளைப் பெறக்கூடிய வாய்ப்பும் ஏற்படும்.
Virtual Assistant Jobs (Websites)
ஆன்லைனில் தொழில்முயற்சிகளை மேற்கொள்ளும் தொழில்முயற்சியாளர்கள் தங்களது நிர்வாக வேலைகள் மற்றும் நிதி தொடர்பான வேலைகள் போன்ற இன்னோரன்ன அலுவலக பணிகளை Online மூலமாக மேற்கொள்ள நிர்வகிக்க Freelancer களை பணிக்கு அமர்த்துவார்கள்.
இவர்கள், அத்தொழில் முயற்சியாளர்களின் அலுவலக பணிகளை நிர்வகிப்பதனால், அவர்களுக்கான பணிச்சுமை குறைவதுடன் சரியான நேரத்திற்கு அனைத்து வேலைகளும் நடக்கவும் ஏதுவாகின்றது.
இதனையே Virtual Assistant எனச் சொல்கின்றனர். இப்பணிக்கு, பொதுவான கணினி அறிவு, மின்னஞ்சல் அனுப்ப பெற தேவையான அடிப்படை, கடிதங்களை வரையக்கூடிய இயலுமை போன்ற அலுவலக காரியதரிசி ஒருவருக்கு இருக்க வேண்டிய விடயங்கள் இருக்கும் எனில், இதனை, Freelancing முறையில் மேற்கொண்டு panam sambathika லாம்.
இதற்கான வேலைகளை முன்பய பகுதிகளில் குறிப்பிட்ட சில தளங்கள் வழங்குகின்ற அதேநேரம், கீழே குறிப்பிடுகின்ற தளம் பிரத்தியேகமாக இவ்வாறான வேலைகளை தரவென வடிவமைக்கப்பட்டு உள்ளது.
Fancy Hands
நேரடியாக Virtual Assistant களுக்கு வேலைகளை வழங்குகின்ற இவ் இணயத்தளமானது, Data Entry தொடங்கி சந்திப்புக்களை அட்டவணைப்படுத்தல், மின்ன ஞ்சல்களுக்கு பதிலனுப்புதல் வரை பல்வேறு பணிகளை தருகின்றது. ஆனால், இத்தளமானது – அமெரிக்காவில் மட்டுமே Virtual Assistant களை மட்டுமே பதிவு செய்து, அமெரிக்காவிற்குள் மட்டுமே தனது சேவையினை செய்கின்றது. மேலும். இத்தளத்தினால், வழங்கப்படும் சேவைகளை வழங்குகின்ற Freelancer கள் ஒரு பணிக்கு 3 தொடக்கம் 7 டொலர்களை வழங்குகின்றது.
https://www.fancyhands.com/job/apply
அடுத்த தொடர்
Freelancing துறையில் panam smbathika பல வழிகள் உள்ளன. அவற்றினை வழங்குகின்ற இணையத்தளங்களை தொடர்ச்சியாக வழங்கிக் கொண்டு வருகின்றேன். உங்களிடம் என்ன திறமைகள் இருந்தாலும், அதற்கேற்ற தொழில்களை செய்யலாம் என்பது ஓரளவுக்கு உங்களிற்கு புரிந்திருக்கும்.
Freelancing தளங்களை அறிமுகம் செய்து இதுவரை வெளியிட்ட தொடர்களில் இறுதித் தொடராக இதற்கு அடுத்த தொடர் வரவிருக்கின்றது. அதில் – எழுத்துப்பணிகளை வழங்குகின்ற Freelancing தளங்கள் தொடர்பில் பார்க்கலாம்.
இன்னும் வரும்…