Share Market in Tamil : முதலீடும் சேமிப்பும்

Spread the love

பங்குச்சந்தையில் முதலீடு செய்வது எப்படி? என்பது தொடர்பில் நாம் தொடங்கியுள்ள இத்தொடரில் பங்கு என்றால் என்ன? என்பது பற்றி முன்பய பதிவில் நாம் பார்த்தோம். அதன் அறிமுகம் ஓரளவுக்கு உங்களுக்கு பங்குச்சந்தை தொடர்பான ஒரு புரிதலை தந்து இருக்கும். பங்குச்சந்தையில் உள்ள அபாயங்கள் தொடர்பிலும் நமது அவதானம் இருக்க வேண்டும் என்பதை அண்மைய அமெரிக்கப் பங்குச்சந்தையில் நடந்த நிகழ்வினையும் விளக்கி இருந்தேன். ஆனால், அபாயங்களைத் தாண்டி, பங்குச்சந்தை முதலீடு தொடர்பில் பலரும் Share Market in Tamil என அறிய ஆர்வம் காட்டுவதை காணமுடிகின்றது.

பங்குச்சந்தையில் ஏன் முதலிட வேண்டும்?

உண்மையில் இக்கேள்வி எழுகின்றமைக்கு முக்கிய காரணம், Share Market தொடர்பான தெளிவின்மையே! வியாபாரம் ஒன்றிற்கான முதலீடு எதற்காக என்பது வெளிப்படை. இலாபம் முன்னிலைப்படுத்தப்பட்டு காணப்படும்.

அதே போன்றுதான் பங்குச்சந்தையில் முதலீடும். இந்த வியாபாரத்தில் நமது முதல் ஈட்டித் தருகின்ற இலாபத்தை அனுபவிக்க, நாம் கொஞ்சம் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

ஆனால், அந்த உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை நாம் பெறக்கூடியதாகவும் இருக்கும்.

முதலீட்டாளருக்கு என்ன கிடைக்கும்?

Share Market in Tamil எனக் கூகிளிடுகின்றவர்களுக்கு ஏற்படுகின்ற சந்தேகங்களில் இதுவும் முக்கியமான ஒன்று! மேலே நான் குறிப்பிட்ட து போல, பங்குச்சந்தையில் முதலீடு என்பது இலாப நோக்கத்தை அடிப்படையாக கொண்ட வழமையான வியாபார நடவடிக்கை போன்ற ஒன்று. Share Market in Tamil,

அதில் முதலிடுகின்ற முதலீட்டாளருக்கு கிடைக்க கூடியது அல்லது கிடைக்க வேண்டியது. பங்கு உழைத்து தருகின்ற – இலாபம் அல்லது நட்டம்.

ஒரு பங்கினது உரிமையாளர் என்பவர், குறித்த நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவர் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். எனவே, நிறுவனம் உழைக்கின்ற வருமானத்தில் அவருக்கும் உரித்துள்ளது. சாதாரணமான வியாபாரம் ஒன்றில் நேரடியாக பெறப்படுகின்ற பண இலாபம் போன்றே Share Market இலும் இலாபமானது காணப்படுகின்றது.

இருந்தும், பங்குகளின் தன்மைகளுக்கு ஏற்ற வகையிலும், நிறுவனத்திற்கும் பங்குதாரர்களுக்குமிடையிலான ஒப்பந்தத்திற்கு அமைவாகவும் இலாபத்தின் தன்மை மற்றும் விடய தானங்கள் இரு வகையாக மாறுபடுகின்றன.

  1. Capital Gain (முதலீட்டு வருமானம்)
  2. Dividends ( ஈவுத் தொகை)

என்பனவே அவை.

Capital Gain (முதலீட்டு வருமானம்)

முதலீட்டு வருமானம் எனும் போது, நேரடியாக உங்களது பங்கினை இலாபத்திற்கு விற்றலைக் குறிக்கும். அதாவது, குறிப்பிட்ட நிறுவனம் ஒன்றின் பங்கினை 100 ரூபாய்க்கு நீங்கள் வாங்கி, அப்பங்கு 125 ஆக உயருகின்ற போது விற்பனை செய்வதால் உங்களுக்கு 25 ரூபாய்கள் இலாபமாக கிடைக்கின்றது. இதனையே Share Market இல் Capital Gain எனக் குறிப்பிடுகின்றனர் Tamil இல் முதலீட்டு வருமானம் எனக் கூறலாம்.

Dividends ( ஈவுத் தொகை)

இது மேற்குறிப்பிட்ட விடயம் போன்றல்லாமல் சிறிது வேறுபட்டது. நீங்கள் பங்கினை வாங்கிய நிறுவனமானது இலாபம் உழைக்கின்ற போது, பங்குரிமையாளர்களுக்கும் அந்த இலாபத்தினை பகிரும். அப்பகிரப்படும் தொகையே Dividends எனப்படுகின்றது.

நிறுவனத்தின் இலாப பகிர்வு தொடர்பான முடிவினை நிறுவன முகாமைத்துவமே மேற்கொள்கின்றது. சில நிறுவனங்கள் இந்த ஈவுத் தொகையினை பங்குதார ர்களிடையே பகிராமல் நிறுவனத்தின் வளர்ச்சிக்கென மீள் முதலீடு செய்கின்ற நிலையும் காணப்படும். 

இவ்விரண்டு முறை மூலமும் பங்குகள் இலாபத்தை ஈட்டித் தருகின்றன. முதலீட்டின் நோக்கம் இலாபம் உழைத்தலே! அதனைக் கருத்தில் கொண்டே Share Market in Tamil என தேடிக் கொண்டிருக்கின்றோம்.

சேமிப்பு VS முதலீடு.

பங்குச்சந்தை என்றில்லாமல் வேறு ஒரு வியாபாரத்தில் கூட முதலீடு செய்வது தொடர்பில் நமக்குள்ள தயக்கம் – முதலீடானது நமக்கு இலாபத்தினை கொண்டு வருமா என்ற கேள்வியே! நஷ்டமடைந்தால், நமது முதலீட்டின் அளவு சுருங்குவதோடு, நமது சொத்தின் அளவும் குறைய வாய்ப்பாகின்றது. இதனால், இலாபகரமான முதலீடு தொடர்பில் நமக்கு எப்போதும் ஒரு தேடல் இருந்து கொண்டே இருக்கின்றது. அதேநேரத்தில், நஷ்டமடைந்தால் என்ற கேள்வி – பலரது முதலீடு தொடர்பான ஆரம்ப ஆசையிலேயே மண்ணள்ளிப் போட்டு விடுகின்றது.

இலாபம் என்பது எப்போதும் எதிர்வுகூறக்கூடியதாகவும் அனுமானிக்க வேண்டியதாகவும் இருப்பதால் வியாபாரத்தில் முதலீடு செய்வது அனைவராலும் முடியுமான ஒன்றாக இருந்ததில்லை. எப்போதும் தன்னை சௌகரியமான Comfort Zone இற்குள் வைத்திருந்து பழகிய நம்மில் பலருக்கு Risk எடுப்பதில் தயக்கம் காணப்படுகின்றது.

எனவே பணத்தினை பெருக்குவதில் மந்தமாக தொழிற்படும் சேமிப்பினை பலரும் தெரிந்தெடுக்கின்றனர். ஏனெனில் அதில் தனது பணம் இழக்கப்படுவதற்கான வாய்ப்புக்களற்ற Risk Free உள்ளதால். முதலிடுவதில் காணப்படும் செல்வ இழப்பினை மட்டும் கவனத்தில் எடுத்து, அதை தவிர்ப்பதற்கான மாற்று வழியாக சேமிப்பினை தொடங்குகின்றனர். ஆனால், சேமிப்பானது வழங்குகின்ற பணத்தின் வளார்ச்சி விகிதமானது ஒப்பீட்டளவில் முதலீட்டின் மூலம் கிடைக்கின்ற வருமான அதிகரிப்பினை விட மிக மிக குறைவு. முதலீட்டின் காணப்படும் Risk இனை எதிர்கொள்ள தயாராகின்ற முதலீட்டாளனுக்கு வழங்கப்படுகின்ற Reward ஆக முதலீட்டின் மூலம் கிடைக்கின்ற இலாபம் காணப்படுகின்றது.

சேமிப்பு பொருளாதார அனுகூலமுள்ளதா?

நிறையப் பேரின் பதில், ஆம் என்றே இருக்கும். ஏனெனில், தனது பணத்திற்கு எந்தவொரு Risk உம் இல்லை என்ற உறுதியே அது. அதன் காரணமாக சேமிப்பினை அனைத்து தரப்பும் ஊக்கப்படுத்துகின்றது. அதுவும் நம்மைப் போன்ற கீழைத்தேய நாட்டவர்கள், சேமிப்பு தொடர்பில் கொண்டுள்ள நேர் மனநிலை அபரிதமானது.

எதிர்கால நிச்சயமற்ற தன்மையினை கருத்தில் கொண்டு, சேமிக்க வேண்டியது அனைவருக்கும் கட்டாயமானது என்ற பொதுக்கருத்து அனைவரிடமும் காணப்படுவதை காண முடியும்.

நாம், நமது ஓய்வு தொடர்பில் பெரிதாக அலட்டிக் கொள்ளாத ஒரு சமூகம். ஓய்வென்பது, சம்பளப்பணி

யில் ஈடுபடுகின்ற ஒருத்தரைப் பொறுத்தவரையில். 60 வயதினை அடைந்ததும் இயல்பாகவே நிகழ்கின்ற ஒன்று என்ற மனநிலையே காணப்படுகின்றது.

அதன் பின்னரான தனது பொருளாதார தேவைகளுக்காக, ஓய்வூதியத்தினையோ அல்லது தனது வாரிசுகளினையோ தங்கி இருப்பதுதான் பொதுவான நடைமுறைய அவ்வாறில்லாவிட்டால் சேமிப்பின் மூலம் கிடைக்கின்ற வட்டி வருமானம் அல்லது உரிய சேமிப்பு! இதையும் தாண்டி, நிலையான சொத்துக்கள் மூலமாக பெறப்படுகின்ற வாடகை,குத்தகை போன்ற வருமானங்கள் போன்றவையே உச்சபட்சமான ஓய்வின் பின்னர் அனுபவிக்க இருக்கின்ற வருமான வாய்ப்புகளாக காணப்படுகின்றன.

ஆனால், முதுமையின் பின்னரான ஓய்வு மூலம் கிடைக்கின்ற இது போன்ற வருமான வழிகளுக்கு நாம் எமது இளமைக்காலத்தை ஓய்வின்றி கழிக்க வேண்டி இருக்கின்றது. அவ்வாறு கழித்தாலும் நமது சேமிப்பு மூலம் கிடைக்கின்ற பொருளாதார அனுகூலங்கள், நாம் எதிர்பார்த்த மாதிரி இருப்பதில்லை.

இதில் சோகம் என்னவென்றால், இதனை பலர் உணர்வதே இல்லை.

சேமிப்பும் பங்குச்சந்தை முதலீடும்.

மேற்கூறிய விடயம் தொடர்பில் நாம் ஒரு உதாரணம் மூலம் விளக்கலாம்.

5% பணவீக்கத்தை கொண்டுள்ள ஒரு நாட்டில், சேமிப்பாக 1000 ரூபாய்களை வைத்துள்ள ஒருவரின் பணப்பெறுமதி 10 ஆண்டுகளின் பின்னர் என்னவாக இருக்கும்?

முகப்பெறுமதி 1000 ரூபாவாகவே இருந்தாலும், உண்மையான கொள்வனவுப் பெறுமதி குறைந்தே காணப்படும். அதனை கணிப்பீட்டின்படி நோக்கினால்,

1000.00 ரூபாய்கள் X (10 ஆண்டு X 5% பணவீக்கம்) = 500.00 ரூபாய்கள்

அதாவது, சேமிப்பு பணவீக்கத்தினால் நலிவுறுகின்ற நிலையே உள்ளது.

இதுவே, 1000.00 ரூபாய்களை பங்குச் சந்தையில் முதலீடு செய்கின்ற ஒருவரது நிலை வேறானதாக காணப்படும்.

உதாரணமாக, ஒருவர் 1000 ரூபாய்களை 15% வீத வளர்ச்சியுள்ள ஒரு நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்வீர்கள் எனில், உங்களது 1000.0 ரூபாய்கள் 10 வருடங்களில் மொத்தமாக (Accumulative) 4045.00 ரூபாவாக மாறி இருக்கும்.

P [(1 + i)n – 1]  ,

1000[(1+0.15)10-1] = 4044.60 ரூபாய்கள்

இதோடு சேர்த்து, உரிய நிறுவனமானது வருடத்திற்கு 2% இனை Dividend ஆக வழங்கும் எனில், மேற்கூறிய உதாரணத்தையே எடுத்துக் கொண்டால்,

முதல் வருடத்தில் உங்களின் Dividend ஆக 20.00 ரூபாய்களும், அதனைத் தொடர்ந்து பங்கின் அதிகரிப்புக்கு ஏற்ப Dividend தொகையும் கூடி 10 ஆவது வருடத்தில் Dividend தொகையானது 81.00 ரூபாய்களாக இருந்திருக்கும்.

இப்படியான நிலையில், இந்த பங்கினை இன்னுமொரு 10 வருடத்திற்கு வைத்திருப்பீர்கள் என்றால், பங்கின் பெறுமதி 16366.00 ரூபாய்களாகவும், Dividend 327.00 ரூபாவாகவும் காணப்படும்.

இந்த உதாரணங்கள் அனைத்தும் முதலீட்டின் நன்மைகள் தொடர்பாக உங்களுக்கு விளங்க வைக்கவே என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். Share Market தொடர்பாக Tamil இல் புரியவைக்கவே இதனை எடுத்துக் காட்டியுள்ளேன். உண்மையில், சந்தையானது, மேலே கூறியுள்ளது போல எப்போதும் போல அதிகரிப்பினையே காட்டாது. அதிலுள்ள அபாயம் இடர்கள் என்பவனவற்றை அனுமானித்து வெல்ல வேண்டியுள்ளது.

ஆனாலும், அதன் மூலம் கிடைக்கின்ற வருமானமானது, சேமிப்பின் மூலம் கிடைக்கின்றதை விட அதிகமானதாகவே இருக்கும் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

சும்மா இருக்கும் பணம் ஒன்றும் செய்யாது

சேமிப்பு என்பது பணத்தின் பெறுமதியினை இழக்கச் செய்யும் என்பதை மேலே கவனித்திருப்பீர்கள். முதலீட்டின் மூலம் பணத்தினை பெருக்கும் சந்தர்ப்பம் அதிகமாக உள்ளது. அதிலும், நீண்ட கால முதலீடானது – பணத்தினை பெருக்குவதில் அதிக செல்வாக்கினைச் செலுத்துகின்றது. ஈவுத்தொகை வழங்கும் நிறுவன ங்களில் பங்குக முதலீடுகள் நடைபெறுமாயின், பங்கின் பெறுமதியினைக் கூட்டுவதுடன், Dividend இனையும் நமக்கு அளிக்கின்றது.

இளமையில் முதலிடு

உண்மையில் இந்த நெடுங்கால முதலீடு உங்களின் இளைமைப்பருவத்தில் நிகழுமாயின், அதிலும் Share Market in Tamil எனத்தேடிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞராக நீங்கள் இருப்பின் நீங்கள் ஒரு அதிஸ்டசாலியே! முதலீட்டிற்கு தேவையான விடயங்களை தெரிந்து கொள்ளவும், அதில் நேரத்தை செலவழிக்கவும் இளமைப்பருவத்தில் அதிக நேரம் உங்களிடம் உள்ளது.Share Market in Tamil

இளமைப்பருவத்தில், High Income Skill ஒன்றை அபிவிருத்தி செய்து அதில் முதலீடு செய்து அதில் நேரத்தை அதிகளவு செலவழித்தால் வெற்றி பெற முடியும். இந்நிலையில் நீங்கள் சரியான முதலீடொன்றினை மேற்கொண்டு அதனை மறந்து விட்டீர்களென்றால், அது உங்களுக்கு நீண்டகாலத்தில் அதாவது ஒரு 20 வருடத்தில் உங்களிடம் கணிசமான அளவு முதலீடும் இருக்கும், Dividend மூலமாக ஒரு நிலையான வருமானமும் கிடைத்துக் கொண்டிருக்கும்.

எனவே, இங்கு இளமையில் இம்முதலீடுகளில் ஈடுபடுவதன் மூலம், இளம் வயதிலேயே Financial Freedom கிடைக்கவும் செய்யும். உதாரணமாக, தனது 18 வயதில் சிறிய ஒரு தொகையினை தனது அறிவு மற்றும் நேரம் என்பவனவற்றைக் கொண்டு சரியான நிறுவனம் ஒன்றில் தனது முதலீட்டினை மேற்கொள்கின்ற போது, அவனுக்கான, நீண்டகால வருமதிகள் மற்றும் கணிசமான முதலீடுகள் 38 வயதிலேயே அவனிடம் இருக்கும்.

இளைஞர்களை ஊக்குவிப்போம்.

எனவே, இளைஞர்களுக்கு இவ்வாறான விடயங்கள் தொடர்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் அவசியமாகின்றது. அதனோடு சேர்ந்தவாறு, பங்குச்சந்தை மற்றும் அதன் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான சந்தேகங்களுக்கும் சரியான பதில்களை வழங்க கூடிய வளங்கள் அவசியம். தமிழ் மூலமாக, Share Market தொடர்பில் இன்னும் பலரும் பல்வேறு விடயங்களை தொட்டுப் பேச வேண்டும். அப்போதுதான், இதற்கான சரியான ஒரு மேடை கிடைக்கும்.

இளைஞர்களும், இப்போது இவை தொடர்பில் தேடாமல் இல்லை. Share Market in Tamil என அறியும் ஆர்வத்துடன் தேடிக் கொண்டுதான் இருக்கின்றனர். எனவே தொடர்ச்சியாக நம்மையும் நமது இளைஞர்களையும் ஊக்குவிப்போம்.

சரி! அடுத்த பகுதியில் இன்னொரு பங்குச்சந்தை தொடர்பான விபரத்துடன் சந்திக்கலாம்…!

 

பகிர:

Leave a Reply