Tamil Online Jobs : Designer களுக்கான Freelance தளங்கள் (5)

Spread the love

தமிழ் ஆன்லைன் ஜாப் (Job) தொடர்பான சென்ற தொடர்களின் நீட்சியாக, இத்தொடர் ஐந்தாவதாக வருகின்றது. இதற்கு முன்பய தொடர் நான்கில் நாம் Freelance தளங்கள் தொடர்பில் பார்த்திருந்தோம். அதற்கு முன்பு தொடர் – 01 , தொடர் – 02 . தொடர் – 03 என்பவற்றில், Tamil Online Jobs என்பதைத் தாண்டி நமது திறமைக்கு முன்னுரிமை அளிக்கும் பல தளங்கள் தொடர்பாக முன்னய தொடரில் பார்த்தோம். அவற்றின்மிகுதியினை இப்போது காணலாம்.

தொடர் – 01 : ONLINE JOBS TAMIL : இணையம் மூலம் சம்பாதிக்கலாம் வழிகாட்டி தொடர் – 01

தொடர் – 02 : HOW TO EARN MONEY ONLINE IN TAMIL: ஆன்லைனில் பணம் உழைப்பது எப்படி (02)

தொடர் – 03 : FREELANCE IN TAMIL : ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?  (03)

தொடர் – 04 : DATA ENTRY JOBS TAMIL எனத் தேடி வெல்லமுடியாது : ONLINE JOBS வழங்கும் தளங்களின் விபரங்கள் (4)

மொழி அவசியமா?

 

முன்னய பாகத்தில் குறிப்பிட்டது போல, நமது திறமைக்கு ஏற்ப வேலையினை பெற்றுக் கொள்ள பல்வேறு தளங்கள் மூலம் Freelance வேலைகளைப் பெற முடியும். இதற்கு Tamil அவசியமா? எனக்கேட்டால், சிலவற்றிற்கு அவசியம். பலவற்றிற்கு அவசியமில்லை என்றே கூறலாம். நீங்கள் Graphic Design இல் ஒரு விற்பன்னர் என்றால், Tamil Online Jobs எனத் தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. Client இற்கும் Freelancer இற்குமிடையிலான தொடர்பினை வினைத்திறன் மிக்கதாக பேணினால் போதுமானது.

சரி! சென்ற பதிவின் தொடர்ச்சியாக ஏனைய பிரிவுகளில் கீழே குறிப்பிட்டுள்ள மூன்று பிரிவுகளில் வேலைகளைப் பெறக்கூடிய Freelance இணையத்தளங்களை பார்ப்போம்.

  • Design and Developer Jobs (Websites)
  • Freelance Design Jobs (Websites)
  • Developer Jobs (Websites)

இணைய வடிவமைப்பில் Graphic Design களுக்கு முக்கிய இடமுண்டு, இணைய வடிவமைப்பாளர் ஒருவருக்கு இருக்க வேண்டிய மிக அவசியமான திறன்களில் இது முதலிடம் பெறுகின்றது. இணைய வடிவமைப்பும் Graphice Design உம் சரியாக தெரிந்த ஒருவருக்கு Freelance மூலமாக நிறைய உழைக்க கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

இணையம் பரவலாக்கப்பட்ட தன் பின்னர், இணையப்பக்கங்களும் தளங்களும் ஒவ்வொருநாளும் வெளியிடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதிலும் புதிதுபுனைதல், புத்தாக்கம் போன்றவற்றிற்கு உலகம் முழுவதும் பரவலான வரவேற்புள்ளது. அதனை சரியாக, பிரயோகித்துக் கொள்பவர், இத்துறையில் வெற்றியினைப் பெறுவார். அவருக்கு, Tamil Online Jobs எனத் தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

இனி, இப்பிரிவுகளில் Freelance துறைக்கென பணிகளைத் தருகின்ற தளங்களை நாம் காணலாம்.

 

Web Design and Developer Jobs (Websites)

 

இணையத்தள வடிவமைப்பும் Design பணிகளும் வேறு வேறு என்றாலும், இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பவை. இரண்டிலும் Creativity மற்றும் Innovative காணப்படுமானால் மொழி ஒரு தடையாகவே இருக்காது. Tamil தொடர்பில் நாம் அலட்ட வேண்டிய அவசியமே இருக்காது. Online Jobs கள் நம்மை தேடி வரும். இவை இரண்டும் ஒருங்கே பெற்ற Freelancer களுக்கு ஏக கிராக்கி உள்ளதோடு, அவர்களுக்கான கொடுப்பனவும் கணிசமான அளவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டிலும் தமது திறன்களை வளர்த்துக் கொள்வதால், இணையவடிவமைப்பில் ஏற்படுகின்ற தேர்ச்சி, பலவழிகளில் நமக்கு பணத்தினை தேடித்தரும் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை. திறமை இருக்கும் பட்சத்தில் Tamil, English என மொழி தொடர்பில் யாரும் கவலை கொள்ளப்போவதில்லை. Online மூலமாக நமது jobs இனை சரியான நபர் மூலமாக முடித்தால் போதும் என்றே எண்ணுவர்.

இனி, இத்துறையில் பணி வழங்குகின்ற இணையத்தளங்களை காணலாம்.

 

Smashing Magazine

how to earn money online without investment in tamil,how to make money in tamil

 

இந்த இணையத்தளமானது, UX designers, web designers, JavaScript developers, Java developers, Mobile app developers என மற்றும் பல பணிகளை வழங்குகின்றது. முழுநேரம் மற்றும் பகுதிநேரத்திற்கான வேலைகளை பெற்றுக் கொள்வதுடன், ஐரோப்பிய நாடுகளில் இருந்து Client களை பெறவும் இத்தளம் உதவுகின்றது.

சாதாரண வேலைவாய்ப்புக்களை ஒத்த வேலைவாய்ப்புக்களையும் இத்தளம் வழங்குவது இன்னொரு அம்சமாகும். அதாவது, உரிய இடத்தில் வசிக்கின்றவர்களுக்கான வேலைவாய்ப்புக்கள். Online Jobs களாக Remote  மூலமான தொழில் வாய்ப்புக்களை இத்தளம் வழங்குகின்றது.

https://www.smashingmagazine.com/jobs/

 

Solidgigs

how to earn money online without investment in tamil,how to make money in tamil,தமிழ் ஆன்லைன் ஜாப்,home based jobs in tamil language

 

Fiverr போன்ற ஒரு தளம்! ஆனால், இவர்கள் கட்டண சேவையினை வழங்குகின்றனர். அதாவது, நமது திறன்கள் மற்றும் தேர்ச்சி தொடர்பான விபரங்களை அளிக்கின்ற போது, நமக்கான வேலைகளை தேடித் தருகின்றனர். இது கட்டணச் சேவை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

கட்டண சேவை என்பதால், உங்களது பணிகளுக்கு தேவையான Tools மற்றும் Apps களையும் அவர்கள் வழங்குகின்றனர். இலகுவாக இத்துறையில் உள்நுழைய எண்ணி Tamil Online Jobs எனத் தேடுபவர்கள் இத்தளம் பற்றி கொஞ்சம் பரிசீலித்துப் பார்க்கலாம். இத்தளம் மூலம், Freelance வாய்ப்புக்களை இலகுவாக பெறலாம்.

முதல் முப்பது நாட்களுக்குள் $2 இற்கான பெறுமதியினை நமக்கு அளிப்பதன் மூலம், அவர்களது சேவை தொடர்பாக நாம் அனுமானிக்க இயலும். இச்சேவையில் உங்களைப்பதிவு செய்ய வேண்டும் எனில் உங்களிடம் கடன் அட்டையோ ATM அட்டையோ இருக்க வேண்டியது அவசியமாகின்றது.

https://solidgigs.com/

 

10x Management

how to earn money online without investment in tamil,how to make money in tamil,தமிழ் ஆன்லைன் ஜாப்,home based jobs in tamil language

 

10X தளமானது, Full Stack Developers எனப்படும் Front and Back End என இரு முனைகளிலும் பணியாற்றக் கூடிய இணைய வடிவமைப்பாளர்களுக்கான தேவையினை அதிகம் கோருகின்றது. அது தவிர, Smartphone App கள் கூட வடிவமைக்க தெரிந்திருந்தால் இத்தளம் மூலம் சம்பாதிக்க முடியும்.

Tamil இல் ஒரு App Developer ஆக நீங்கள் இருப்பீர்கள் என்றால், உங்களுக்கு Tamil மூலமான App ஒன்றினை நிறுவ வேண்டி யாரும் அணுகக் கூடும். Tamil online Jobs என இந்நோக்கத்திற்காக கூகிளுடுவதன் மூலம் நீங்கள் Client களை பெறவும் சாத்தியமுள்ளது.

https://www.10xmanagement.com/

 

WebDesign Jobs (Websites)

 

தமிழ் ஆன்லைன் ஜாப் (Job) தொடர்பாக நாம் பார்த்துக் கொண்டிருக்கின்ற இத்தொடரில் Freelance job களுக்கான இணையத்தளங்கள் தொடர்பில் இனிப்பார்க்க இருப்பது, இணைய வடிவமைப்பாளர்களை மட்டும் இலக்கு வைத்து தொழில் வழங்குகின்ற Freelance தளங்கள் தொடர்பில்.

 

99designs

how to earn money online without investment in tamil,how to make money in tamil,தமிழ் ஆன்லைன் ஜாப்,home based jobs in tamil language

 

Graphic Designer களையும் Client களையும் இணைக்கும் ஒரு தளம். Logo Desigining தொடங்கி அனைத்து விதமான வடிவமைப்பு வேலைகளுக்குமான திறமைகளை இங்குதான் தேடுகின்றனர். Designer களின் திறமைக்கு ஏற்ற வகையில் அவர்களை தரம் பிரித்து Freelancer களால் பெறப்படும் வேலைகளுக்கான கட்டணங்களை இத்தளம் அறவிடுகின்றது.

இது நேரடியாக வேலை வழங்குகின்ற ஏனைய தளங்கள் போல் வேலைகளை வழங்குவதுடன், இன்னொரு முறையாக, Client கள் தங்களது தேவைகளை போட்டிகளாக நடாத்த, Graphic Designer கள் தங்களது கற்பனா வளங்களுக்கு ஏற்றவாறு வடிவமைப்புக்களை செய்து சமர்ப்பிக்க வேண்டும். Client இன் தேவைக்கு ஏற்றவாறும், அவர்களுக்கு பிடித்தவாறும் எந்தப்படைப்பு உள்ளதோ அதனை தெரிந்தெடுத்துக் கொள்வர். எனவே, இதில் Online Jobs களுக்கான வழி அனைவருக்கும் பகிரப்பட்டிருப்பதைக் காணலாம்.

https://99designs.com/

 

Envato Studio

how to earn money online without investment in tamil,how to make money in tamil,தமிழ் ஆன்லைன் ஜாப்,home based jobs in tamil language

 

இதுவும் Designer களுக்கான ஒரு பாரிய தளம். ஒரு Marketplace போல Designer கள் மற்றும் Developer கள் இத்தளத்தினை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

உங்களது Design மற்றும் Web Themes களை உருவாக்கி, இத்தளத்தில் சந்தைப்படுத்தலாம். உங்களது வடிவமைப்பு பிடித்த வாடிக்கையாளர்கள் அதனை வாங்கிக் கொள்வார்கள்.

https://studio.envato.com/

 

dribbble

 

home based jobs in tamil language

முன்னர் குறிப்பிட்ட தளங்கள் போன்றே இதுவும் Designer களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்ற தளமாக உள்ளது. இத்தளம் மூலம் Designing தொடர்பான பல வேலைகளை பெறக்கூடியதாக இருக்கும். இத்தளத்தின் இன்னொரு விஷேடம் – Tamil Online Designer கள்! ஆமாம்! நிறைய Tamil வடிவமைப்பாளர்கள் இத்தளத்தில் உள்ளனர். கண்ணைக்கவரும் தமிழில் அவர்களது Poster கள் மற்றும் இன்ன பிற வடிவமைப்புக்களில் தமிழ் மின்னுகின்றது.

https://dribbble.com/

 

coroflot

how to earn money online without investment in tamil,how to make money in tamil,தமிழ் ஆன்லைன் ஜாப்,home based jobs in tamil language

இத்தளமானது, மிகத்தேர்ச்சி பெற்ற Designer கள் மற்றும் வடிவமைப்பில் அனுபவமுள்ள தொழில் தேர்ச்சியாளர்களுக்கான ஒரு தளமாகும். டீசேர்ட் தொடங்கி வியாபாரங்களுக்கு தேவையான லேபல்கள் மற்றும் அனிமேசன் திரைப்படங்கள் என பல்வேறு உயர்ரக Designing பணிகளுக்கான தொழில் தேர்ச்சியாளர்களை இத்தளத்தில் மிக இலகுவாக பெற்றுக் கொள்ளலாம். இத்துறையில் நீங்கள் பாண்டித்தியம் பெற்றவராக இருந்தால், இங்கு Freelancer களை தேடும் பல்வேறு பன்னாட்டு நிறுவன ங்களுக்கு Remote மூலமாக பணியாற்ற வாய்ப்புக்கள் கிடைக்கும்.

https://www.coroflot.com/

 

Web Developer Jobs (Websites)

 

மேலே Designer களுக்கான Freelancing வேலைகளைப்பார்த்தோம். அதிலும் Tamil இல் online jobs களைப்பெறக் கூடிய சாத்தியங்களும் காணப்படுவதை மறுப்பதற்கில்லை என்பதும் புரிந்திருக்கும். இதன் படி, அடுத்தபடியாக, இணைய வடிவமைப்பாளர்களுக்கு முன்னுரிமை அளித்து வேலை வழங்குகின்ற தளங்களை இனிப் பார்ப்போம்.

 

Angel List

how to earn money online without investment in tamil,

இணையம் மற்றும் கணினித்துறையில், வெற்றிகரமாக தொடங்கப்படுகின்ற தொழில் முயற்சிகளுக்கு (startups) ஊழியத்தினை சிறப்பானதாக வழங்க இத்தளம் உதவுகின்றது.

நிறுவனம் ஒன்றின் வெற்றி, அங்கு பணிபுரிகின்ற ஊழியர்களின் செய்ற்றிறனில் தங்கியுள்ளது. அந்த வகையில், அமெரிக்காவின் Silicon valley இல் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி சார்ந்த தொழில்முயற்சிகளுக்கான முதலீட்டு ஊக்குவிப்பு வழங்குவதோடு, அவ்வாறான தொழில்முயற்சி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றவும் Freelancer களை ஊக்குவிக்கின்றது,

இவ்வாறான வெற்றிகர தொழில்முயற்சியாளர்களுடன் ஆரம்பகட்டத்தில் இணகின்ற போது, அதன் வளர்ச்சி மூலம் கிடைக்கின்ற பலன்களில் உங்களுக்கான முக்கியத்துவம் எப்போதும் வலியுறுத்தப்படும். எனவே, இது போன்ற தொழில்முயற்சியாளர்களுடன் இணைந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்தில் நிச்சயமாக நாம் இணைந்து கொள்வதே அறிவுடமை.

https://angel.co/jobs

 

gun.io

how to make money in tamil,தமிழ் ஆன்லைன் ஜாப்

இதுவும் இணைய வடிவமைப்பாளர்கள் மற்றும் App Developer களுக்கான Freelancing தொழில்களை வழங்குகின்ற தளமாகும். இத்தளத்தில் Freelancer ஆக நீங்கள் பதிவு செய்து, உங்களது திறமை மற்றும் தகுதிகள், உங்களது வேலை தொடர்பான முன்னய அனுபவங்கள் போன்றவற்றை இற்றைப்படுத்துவதன் மூலம் Client களைப் பெறக்கூடிய சாத்தியம் ஏற்படும். இதனை தொடர்ந்து freelancer மற்றும் Client னை தொடர்புபடுத்தும் வேலையினை gun.io தளமானது மேற்கொள்கின்றது.

https://www.gun.io/

 

Storetasker / Lorem

how to earn money online without investment in tamil

இத்தளமானது, Ecommerce தளங்களை வடிவமைக்கும் Developers களை இலக்காக கொண்ட தளமாகும். அதிலும் குறிப்பாக Shopify தளவடிவமைப்பிற்கான தேர்ச்சி பெற்ற Developer கள் பலர் இத்தளத்தில் காணப்படுகின்றனர். Shopify தளம் தொடர்பான அனைத்து வகையான பணிகளையும் வழங்க Freelancer கள் இத்தளத்தில் காணப்படுகின்றனர்.

மின்வணிகத்தில் முக்கிய பங்கினை வகிக்கும் Shopify யானது, தற்போது மின்வணிகத்தில் மிக முக்கியமான ஒரு Marketplace ஆகும், அதன் பிரத்தியேக இணைய வடிவத்தினை தங்களுக்கு ஏற்றவாறு வடிவமைத்து எடுக்க அது தொடர்பில் தெளிவுள்ள இணைய வடிவமைப்பாளர்கள் தேவை. அவர்களை பெற இத்தளத்திற்கு மின்வணிகத்தில் ஈடுபடுகின்ற விற்பனையாளர்கள் வருகை தருகின்றனர்.

Woocommerce, Shopify போன்ற மின்வணிகம் சார் இணையத்தள வடிவமைப்பு தொடர்பில் இலகுவாக கற்க முடியும். இது தொடர்பில் ஒரு சில வருடங்களுக்கு முன் Sri lanka வினைச் சேர்ந்த ஒரு இளைஞன் யூடியூப் மூலமாக இதை கற்று Shopify Develop தொடர்பில் Expert Level வரை சென்றிருந்தான். யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி? என்ற கேள்விக்கு இதையும் பதிலாக எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் அந்த இளைஞனின் நோக்கம் உயர்வானதாக இருந்திருக்கின்றது. மொழி ஒரு தடை என எண்ணிக் கொண்டு, Tamil Jobs online என தேடிக் கொண்டும் இருந்திருப்பானானால், சாதித்திருக்க வாய்ப்பிருந்திருக்காது. இதைப்பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம்.

https://www.storetasker.com/

 

Codeable

தமிழ் ஆன்லைன் ஜாப்

மேலே கூறிய Freelance தளம் போல இதுவும், WordPress தள வடிவமைப்பாளர்களை இலக்காக கொண்டு Freelance பணிகளை வழங்குகின்ற தளமாகும்.

ஒரு Developer, சராசரியாக ஒரு மணித்தியாலத்திற்கு 70 தொடக்கம் 120 டொலர்கள் வரை கட்டணமாக அறவிடமுடியும் என உறுதியளிக்கின்றது இத்தளம்.

https://codeable.io/freelancers/

 

Gigster

யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி

இதுவும் இணையப்பக்க வடிவமைப்பு மற்றும் வேலைத்திட்ட முகாமை (Project Management) தொடர்பான Freelance பணிகளை வழங்கும் தளமாகும். உங்களது திறமைகளை உரிய இட த்திற்கு கொண்டு செல்லும் பணி மற்றும் விற்பனை போன்றவற்றை தளமே கவனித்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள Freelancer களுக்கு இது சௌகரியமான விடயமாகும்.

https://gigster.com/

 

மொழி தொடர்பான கவலை வேண்டாம்

 

மேலே கூறியது போல, மொழி தொடர்பான கவலைகள் அவசியமற்றது. Tamil மொழியானது, தற்போது இணையத்திலும், அது தொடர்பான ஏனைய வேலைகளிலும் கணிசமான அளவுக்கு உள்ளீர்க்கப்பட்டும், அவதானத்திற்குட்பட்டும் வருகின்றதே. Online Jobs களை தருகின்ற மேற்கூறியுள்ள இணையத்தளங்களிலும் தமிழ் தொடர்பான வேலைகளுக்கு Freelancer களைத் தேடுகின்ற சந்தர்ப்பங்களைக் கூட நீங்கள் காண்பீர்கள்.

 

எனவே, மொழி என்பது தடையல்ல. தடை – உங்கள் மனநிலை மட்டுமே! தொடர்ச்சியான முயற்சி மட்டும் இருந்தால், இத்துறை மட்டுமல்ல. எத்துறையிலும் நீங்கள் ஜெயிக்கலாம்.

 

அடுத்த பகுதியில் சந்திப்போம்! 

பகிர:

Leave a Reply