Data Entry Jobs Tamil எனத் தேடி வெல்லமுடியாது : Online Jobs வழங்கும் தளங்களின் விபரங்கள் (4)

Spread the love

ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிப்பது தொடர்பான முன்பய தொடர்களை வாசித்திருப்பீர்கள். online data entry jobs என்பதை தவறாக ஒரு சிறு வரையறைக்குள் எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு இத்தொடர் ஒரு வெளிச்சத்தினை கொடுக்கும் என எண்ணுகின்றேன். அதுவும் Online Data Entry Jobs Tamil என தேடி அயர்ந்துள்ள நம்மவர்களுக்கு இது ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதற்கு முன்புள்ள தொடர்களை வாசிக்காதவர்கள் , அந்தத்தொடர்களுக்கான சுட்டி கீழே தரப்பட்டுள்ளது. அவற்றினை வாசிப்பதன் மூலம் இத்தொடரினை முழுதாக பின் தொடர சுலபமாக இருக்கும் என எண்ணுகின்றேன்.

ONLINE JOBS TAMIL : இணையம் மூலம் சம்பாதிக்கலாம் வழிகாட்டி தொடர் – 01

HOW TO EARN MONEY ONLINE IN TAMIL : ஆன்லைனில் பணம் உழைப்பது எப்படி (02)

FREELANCE IN TAMIL : ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?  (03)

இறுதியாக Freelance in Tamil பதிவின் இறுதியில் குறிப்பிட்டிருந்த online jobs களை பெறுவதற்கான இணையத்தளங்கள் தொடர்பில் நாம் நோக்கலாம்.

முன்பே கூறியது போல, இணையத்தில் பொருளீட்ட தனிப்பட்டவகையில் தேவையானது, பொறுமையும், தொடர்ச்சியான முயற்சியும். அவை இரண்டுடன், தொழில்தருனரையும் பணியாளரையும் இணைக்கின்ற ஒரு ஊடகமும் அவசியமாகின்றது. அந்தப்பணியினை மேற்கொள்வதற்கென பல இணையத்தளங்கள் காணப்படுகின்றன.

 

போலியான இணையத்தளங்கள் தொடர்பில் அவதானம் தேவை

 

Freelance வேலைகள் தொடர்பாக இணையத்தில் பரவலாக தேடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனாலும், சரியான, சட்டரீதியான தொழில் வழங்குகின்ற இணையத்தளங்கள் தொடர்பான தெளிவூட்டல்கள் பலரிடமும் குறைவு. ஏனெனில், ஆங்கிலத்தில் Online Jobs தொடர்பாக கிடைக்கின்ற தகவல்களை Tamil உடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு. அதிலும், நம்மவர்கள் தமிழில் அதிகம் தேடுவது online data entry jobs tamil மட்டுமே.  

அதுவும் எந்தவொரு முதலீடும் இன்றி ( Without investment) எப்படி இணையத்தில் தொழில் செய்வது என தேடுகின்றனர். இவ்வாறு கூகிளிடும் போது கிடைக்கின்ற பெறுபேறுகள் ஏமாற்றத்தினையே தரலாம். ஏனெனில், இத்துறையில் காணப்படுகின்ற இணையத்தளங்களில் போலியானவையும் உள்ளன. எனவே அது தொடர்பில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

 

Online Jobs வழங்குகின்ற சரியான தளங்களை எப்படி அடையாளம் காண்பது?

 

இது தொடர்பில், நாம் அவதானமாக இருக்க வேண்டியது அவசியம்!  பணம் உழைக்கப் போய் நமது பணத்தை இழக்காமல் இருப்பது மிக முக்கியமானது அல்லவா? ஆன்லைனில் உழைப்பது தொடர்பான முயற்சியினை தொடங்கு முன்னர், இந்த விடயங்களில் தெளிவினைப் பெறுவது – நாம் பின்னர் ஏமாறாமல் இருக்க உதவும். சரியான Freelance தளங்களை கண்டு கொள்ள கீழ்வரும் விடயங்களை எப்போதும் கவனத்தில் கொள்ளுங்கள்.

  • Online Data Entry என எந்தவொரு இலகுவான வேலை மூலமும் நீங்கள் பணம் உழைக்கமுடியாது. Online data Entry jobs Tamil எனத் தேடுகின்ற போது கிடைக்கும்
  • உரிய தளம் உங்களை அங்கத்தவராக சேர்க்க பணம் கோரினால், அது போலியானதளம்.
  • எந்தவொரு திறன் பரிசோதனையும் (Skill Tests) இன்றி உங்களுக்கு தொழில் வழங்க தயாராக உள்ளதாக கூறினால் நம்பவேண்டாம். அது நிச்சயமாக போலி!

இவற்றினை கவனத்தில் எப்போதும் வைத்திருங்கள்.

Freelance தளங்களின் வகைகள்

Freelance இணைய தளங்களை நாங்கள் அதன் தொழில் வழங்கும் தன்மைக்கு ஏற்ப 11 வகைகளாக பிரிக்கலாம். (இதற்கு மேலாகவும் முடியும்.!) Online Data Entry jobs tamil என மட்டும் தேடி நேரத்தை வீணடிப்பதை விட்டுவிட்டு, நமக்குள்ள திறன்களை வளர்ப்பதன் மூலம், கீழே நான் குறிப்பிடப் போகின்ற ஏதாவது ஒரு வகைக்குள் தொழிலினை பெற்றுக் கொள்ள உங்களால் முடியும்.

வகைப்படுத்தல்கள் பின்வருமாறு உள்ளன.

  • General Freelance Jobs (Websites)
  • Design and Developer Jobs (Websites)
  • Design Jobs (Websites)
  • Developers Jobs (Websites)
  • Video Editors Jobs (Websites)
  • Graphics Job (Websites)
  • Freelance Marketing Jobs (Websites)
  • SEO Jobs (Websites)
  • Virtual Assistant Jobs (Websites)
  • Freelance Writing Jobs (Websites)
  • Freelance Testing Jobs (Websites)

இவை ஒவ்வொன்று தொடர்பிலும் நாம் விரிவாக ஆராய்வோம்.

இன்றைய இப்பதிவில் நாம் General Freelance Jobs (Websites) தொடர்பாக பார்க்கலாம்.

General Freelance Jobs (Websites)

பொதுவான Softskills பணிகளுக்கான வேலைகளை பெற இத்தளங்கள் உதவுகின்றன. Data Entry Jobs என பொத்தாம் பொதுவாக நம்மால் குறிப்பிடப்படும் பதத்துடன் தொடர்புடைய வேலைகள், Excel தொடர்பான வேலைகள், குரல் பதிவு, Bookkeeping, Networking,Admin Support  போன்ற பல்வேறு வகையான வேலைகளை இத்தளங்கள் மூலம் பெறலாம்.

மேலே வகைப்படுத்தப்பட்டுள்ள வேலைகளையும் இத்தளங்கள் வழங்கினாலும், அதற்கென பிரத்தியேகமாக உள்ள தளங்கள் அளிக்கின்ற வசதிகள் வேறாக இருக்கும். சரி! General Freelance Jobs (Websites) வழங்கும் தளங்களை பார்ப்போம்.

 

Upwork

இத்தளமானது, IT தொடர்பான வேலைகள், நிர்வாக வேலைகள், கணக்கீடு மற்றும், Data Scraping, Data Harvesting போன்ற வேலைகளைப் பெற உதவுகின்றது.

Clients களுக்கு நமது வேலை தொடர்பான விபரங்களை முன்மொழிவாக (Proposals) அனுப்பி வைக்கவேண்டும். அனுப்புகின்ற Proposals களின் அளவை மாதத்திற்கு எத்தனை என கட்டுப்படுத்தி வைத்துள்ளது. இதனை மேம்படுத்த வேண்டும் எனில், பணம் செலுத்தி அச்சேவையினைப் பெறலாம். இது Freelance துறையில் உள்ள ஆரம்பப் படியில் உள்ளவர்களுக்கு தேவை இல்லை. அதிகமான Job Order கள் வருகின்ற போது இதனைப் பெறலாம்.

Upwork ஆனது biggeners க்கு மிகவும் பொருத்தமான Freelance தளமாக சொல்லப்படுகின்றது.

 

Freelancer

இதுவும் மேற்கூறிய தளம் போன்ற ஒன்றே. ஆனால், அதை விட பரந்துபட்டது. நாடு வாரியாக தமது தளத்தினை விஸ்தரித்துக் கொண்டு வருகின்றது Freelancer. அந்த வகையில் தற்போது, ஐக்கிய அரபு இராச்சியம், இந்தியா போன்ற நாடுகளில் தனது சேவையினை தொடங்கியுள்ளது.

தனிநபர்களுக்கான வேலைகள் என்றில்லாமல், பாரிய நிறுவனங்கள் தமது வேலைகள மேற்கொள்ள Freelancer தளம் உதவுகின்றது. தற்போதுள்ள Remote Jobs Operator களில் Freelancer.com ஆனது இத்துறையில் ஒரு ஜாம்பவான் என்று கூறலாம்.

 

Fiverr

இத்தளம் முன்பு குறிப்பிட்ட இருதளங்களையும் விட வித்தியாசமான ஒன்று!

ஏனெனில் ஏனைய தளங்கள் – வேலைதருனர்களின் தேவையினை (Clients Requirments) முன்னிலைப்படுத்த Fiverr.com ஆனது, Freelancer களினை முன்னிலைப்படுத்துகின்றது, அதாவது, தம்மிடமுள்ள திறன்களை  Freelancer கள் விளம்பரப்படுத்த, அவற்றினை தேவையானவர்கள் கொள்வனவு செய்வார்கள்.

Gig எனக்கூறப்படும் ஒவ்வொரு திறனுக்குமான தனிப்பட்ட சிறு பக்கங்கள் மூலம் உங்களது திறமைகளை வாங்க Client களுக்கு வாய்ப்பளிக்கப்படுகின்றது, Fiverr இன் ஆரம்பவிலை 5 டொலர்கள் என்பது இத்தளத்தின் இன்னொரு சிறப்பு.

 

Guru

இதுவும் Freelancer.com , Upwork போன்ற ஒரு தளமே! அதே வகையான வேலைகளை அளிக்கின்றது. நீங்கள் செய்து முடிக்கின்ற Task களுக்கான மொத்தப் பணத்தொகையில் 5% – 9% ஆன தொகையினை தரகாக பெற்றுக் கொள்கின்றது.

 

Servicescape

 

இத்தளமானது விஷேடமாக, செய்தியாசிரியர்கள் (Editors) எழுத்தாளர்கள் (writers) மொழிபெயர்ப்பாளர்கள் (Translators) மற்றும் Graphic Designer களுக்கான வேலைகளை வழங்குகின்றது.

நேரடியாக உங்களது Client டன் தொடர்பு கொள்ளவும் இது வசதிகளை ஏற்படுத்தி தருகின்றது.

 

Hubstaff Talent

Online Jobs Part Time என்பதே பலரது தேடலாக இருக்கின்ற போது, இன்னும் பலர் அதனை Full Time ஆகவும் செய்கின்றனர். அதில் இத்தளம் விஷேடமாக அந்த வசதியினை அளிக்கின்றது.

உங்களது தனிப்பட்ட விபரங்கள் மற்றும் நீங்கள் வேலை செய்யவிரும்பும் காலம் போன்றவற்றை பூரணப்படுத்தி update செய்வதன் மூலம் உங்கள் திறமைக்கு ஏற்ற வேலையினை இத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

 

Toptal

இதுவும் ஏனைய தளங்களைப் போல ஒரு Freelancing தளம் என்றாலும், இவர்கள் வழங்குகின்ற சேவைகளின் தரத்தினை உயர்வாக பேண, Freelancer களை இணைப்பதில் பல்வேறு படிமுறைகளை வைத்துள்ளனர். அதாவது, இத்தளத்தில், இலகுவாக நீங்கள் உங்களை பதிவு செய்ய முடியாது.

நீங்கள், உங்களிடமுள்ள திறமை இன்னதென கூறினால், அது தொடர்பில் ஆரம்பத்த்தில் Toptal தரப்பினை திருப்திப்படுத்துவது அவசியம்!

அவர்களது Skill Test கள் மற்றும் இன்ன பிற சோதனைகளைத் தாண்டியே நீங்கள் பதிவு செய்யப்படுவீர்கள். அவ்வாறு Toptal தளம் உங்களை அங்கீகரித்துவிட்டால், உலகின் பாரிய Apple, Visa, Airbnb, Uber போன்ற பல்தேசிய நிறுவன ங்களிடமிருந்து வேலைகள் பெறுவது இலகுவாகிவிடும்.

Toptal தளத்திற்கென உள்ள அங்கீகாரம் மூலம் ஏனைய தளங்களில் Client களை பெறுவதும் இலகுவாக அமையும்.

 

CloudPeeps

இதுவும் ஏனைய Freelancing தளங்கள் போல, Social Media Marketing, Copy Writing, Email Marketing போன்ற வேலைகளை வழங்குகின்றது.

 

Truelancer

ஏனைய தளங்களைப் போன்ற இத்தளமானது, Clients உம் Freelancer உடன் இணைந்து வேலை செய்யும் வாய்ப்பினை வழங்குகின்றது. இதுவும் Beginner களுக்கு மிகவும் சௌகரியமான ஒரு தளம்.

 

Flexjobs

உங்களது விபரங்கள், தொழிற்தகமைகள் என்பவற்றை பதிந்து உள்நுழைந்தால், பல்வேறு தொழில்களை இத்தளம் மூலம் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் Client புதியதாக ஏதும் வேலைகளை கோருகின்ற போது, இத்தளம் நமக்கு மின்னஞ்சல் மூலம் அதனை அறிவிக்கும்.

 

PeoplePerHour

ஐக்கிய இராச்சியத்தினை மையப்படுத்தி இயங்கும் Freelancing தளமான இது, Client மற்றும் Freelancer களை வினைத்திறனுடன் இணைக்கின்றது.

Freelancing Jobs களை தேடுகின்ற போது, இத்தளத்தினை மறக்காமல் அனைவரும் குறிப்பிடுவர். இதன் மூலமும் பல வேலைகளைப் பெறலாம். அனேகமானவை ஐக்கிய இராச்சியத்துடன் தொடர்புடையதாகவே காணப்படும்.

 

Zeerk

Zeerk தளமானது, Fiverr இன் இன்னொரு வடிவம், இது பெரிதாக திறன்கள் தேவைப்படாது சிறு வேலைகளை வழங்குகின்ற Freelancer களின் சேவைகளை சந்தைப்படுத்துகின்றது.

அதாவது, வினைத்திறன் அற்ற அதேநேரம், கால அவகாசம் கூடிய வேலைகளை 1 டொலர் போன்ற சிறு தொகைக்கு செய்துதர இத்தளத்தில் Freelancer கள் உள்ளனர்.

உங்களது Instagram இற்கு தேவையான Followers களை பெற, youtube வீடியோக்களுக்கான பார்வைகளைப் பெற என பல சிறிய வேலைகளுக்கு இத்தளத்தில் Freelancer களை பெறலாம்.

ஆனால், இதற்கான கட்டணம் கடும் குறைவு என்பதால், Online Data Entry jobs களை எதிர்பார்ப்பவர்கள் இதனை முயற்சிக்கலாம்.

 

இன்னும் பல தளங்கள்

 

இவை தவிர்த்து இன்னும் பல தளங்கள் காணப்படுகின்றன. அவற்றில் மிக முக்கியம் எனக் கருதிய தளங்களையே இங்கு குறிப்பிட்டுள்ளேன். இவற்றில் ஏதாவது ஒன்றின் மூலம் பணம் உழைக்கும் சந்தர்ப்பம் வாய்த்தாலும் அதனை விடாது இன்னும் நமது திறன்களை விருத்தி செய்து முன்னேறலாம்.

அதன் மூலம் பொருளாதார சுதந்திரம் (Financial Freedom) கொண்ட நபராக நாமும் வாழ வழி ஏற்படும்.

 

மேலே, பிரதான வகைப்படுத்தலில் நான் குறிப்பிட்ட பதினொரு வகைக்குள் முதலாவதை மட்டுமே இப்பதிவில் பார்த்துள்ளோம்.

 

அடுத்த பதிவில் இரண்டாவதை காணலாம்.

 

 

(தொடரும்…)

பகிர:

Leave a Reply