Freelance in Tamil : ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?  (03)

Spread the love

Online Jobs Tamil என்ற இத்தொடரில் இதற்கு முன்னர், தொடர் – 01 மற்றும் தொடர் – 02  என இரு பகுதிகள் எழுதப்பட்டுள்ளன. அவற்றினை வாசிக்காதவர்கள் வாசித்துப் பாருங்கள். அதன் தொடர்ச்சியாக இது மூன்றாவது அத்தியாயம். இதில், Freelancing Jobs தொடர்பாக பார்க்கலாம். வழமை போல Freelance in tamil இல் இது தொடர்பான விளக்கங்களை தேடி அலுத்த உங்களுக்கு இத் தொடர் உதவலாம்.


Freelance Jobs என்றால் என்ன?


Freelance Jobs என்பதை Tamil படுத்த கொஞ்சம் சிரமம் என்றே கருதுகின்றேன். இப்போதைக்கு பகுதிநேர வேலை என வைத்துக் கொள்ளலாம் (Part Time Jobs). முன்பு கூறியது போல, Online மூலமாக சம்பாதிக்கும் பல வழிகளில் இதுவும் ஒன்று. Sri Lanka போன்ற நமது தெற்காசிய நாடுகளைப் பொறுத்த வரையில், பெரும்பாலான இணைய வழி சம்பாத்தியங்களை மேற்கொள்ளும் Freelancer கள் இந்த வழியிலேயே உழைக்கின்றனர்.

தம்மிடம் உள்ள தொழில்நுட்ப திறன்கள் மற்றும் ஏனைய Soft Skills களை வெற்றிகரமாக சந்தைப்படுத்துவதன் மூலம், அத்திறன்களை தமது வேலைகளுக்கு ஊதியம் கொடுத்து பயன்படுத்த உலகம் எங்கும் பலர் உள்ளனர். அவ்வாறு தேவை உள்ளவர்களையும் திறன்களை விற்பனை செய்கின்றவர்களையும் இணைக்கும் இடைமுகங்களாக பல இணையத்தளங்கள் இயங்குகின்றன.


Freelance Jobs வகைகள்.


தமக்குரியதை தானே உழைத்துக் கொள்ளல் என்பது சுதந்திரமானது. அதை freelancing jobs கள் ஊக்குவிக்கின்றன. பல இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும், நிதிச் சுதந்திரத்தை அளிப்பதாகவும் Online Jobs கள் காணப்படுகின்றமை இதற்குள்ள சிறப்பம்சமாகும். அந்த வகையில், Freelancing மூலமான வாய்ப்புக்கள் நாம் நினைப்பதை விட அதிகம்.

ஃபிரீலான்ஸிங்க் மூலமாக என்ன வகையான தொழில்களை செய்யலாம் எனக் கேட்டால், பதில். நீங்கள் எதை எல்லாம் உங்களது திறமைகள் என நம்புகின்றீர்களோ அவற்றை எல்லாம் பணமாக்கலாம், என்ன… கொஞ்சம் பொறுமையும் கடின உழைப்பும் அவசியம்.

தற்போதைய கொரோனா நிலவரமானது, இன்னும் இணையம் மூலமான ஃப்ரிலான்ஸிங்க் வாய்ப்புக்களை அதிகரித்துள்ளது. வெளியுலக தொடர்பினையும் மரபுவழியில் தொழில்கள் மற்றும் இன்னபிற பணிகளையும் செய்வதை Online மூலமாக மேற்கொள்ள நிர்ப்பந்தித்துள்ளதை நாம் காணலாம். இந்நிலமை நம்மவர்களையும் இணையம் மூலமாக பொருளீட்டுவதற்கான அவசியத்தை உணர்த்துவதும் கவனிக்கத் தக்கது. Freelance in Tamil எனத் தேடி தேடி நம்மவர்கள் கூகுளுவதன் மூலம் இதன் முக்கியம் இன்னும் தெளிவாக தெரிகின்றது.

அதன்படி, Freelance தொடர்பாகவும் இணையம் மூலமாக சம்பாதிப்பது எப்படி? எனவும் கற்றுக் கொண்டிருக்கின்றீர்கள் என்றால், கீழுள்ள Jobs களுக்கு அதிக வரவேற்பு காணப்படுகின்றது.

 • உள்ளடக்க எழுதுனர் (Content Writing / Writer)
 • ஒப்புநோக்கல், பிழைதிருத்தல் (Proofreading)
 • Graphic Designing
 • இணையத்தள வடிவமைப்பு (Website Designing)
 • இணையவழி கற்பித்தல் (Online Teaching)
 • Transcriber
 • மொழிபெயர்ப்பாளர் (Translator)
 • கணக்காளர் மற்றும் கணக்கீடு தொடர்பான பணிகள் ( Virtual Bookkeeper / Accounting Jobs)
 • Virtual Assistant
 • சமூக வலைத்தள முகாமையாளர் (Social Media Manager)
 • Data Related Jobs
 • Internet Research
 • Bussiness Consultantsfreelancer tamil meaning freelance jobs meaning in tamil freelancer jobs in sri lanka freelancer sri lanka freelancer tamil freelance accounting jobs in sri lanka freelance app developers in sri lanka freelance content writers sri lanka freelance data entry jobs in sri lanka freelance english meaning in tamil freelance english to tamil translation jobs

போன்றவற்றிற்கு அதிக வரவேற்பும் கேள்வியும் காணப்படுகின்றது. இவை பற்றி கொஞ்சம் விளக்கமாக இனி காண்போம்.


உள்ளடக்க எழுதுனர் (Content Writing / Writer)


Content Writing என்பது, உரிய இணையத்தளம் ஒன்றிற்கு அது தொடர்பான விடயங்களை எழுதிக் கொடுப்பதையே குறிக்கும். பெரிதாக ஒன்றுமில்லை! இணையத்தளத்தினை நடாத்துபவர், எழுத்தாற்றல் இல்லாத ஒருவராக இருப்பார். தான் நடாத்தும் இணையத்தளத்திற்கு தேவையான உள்ளடக்க கட்டுரைகளை எழுத ஒருவரை எதிர்பார்ப்பார். அந்த இடத்தில் அவரின் தேவை – Content Writer.

 • எழுதும் விடயம் தொடர்பான பூரண அறிவு.
 • சரளமான எழுத்துநடை.
 • மொழியினை இலாவகமாக கையாளும் திறன்.
 • மொழிப்புலமை.

போன்றன சிறப்பாக இருந்தால், நீங்களும் ஒரு வெற்றிகரமான உள்ளடக்க எழுத்தாளராக உருவாகலாம். ஆங்கிலம் மூலம் மட்டுமே இத்தொழில் சாதிக்கலாம் என்றில்லை. தற்போது, Google – தமிழினையும் விளம்பரங்களுக்கு என அங்கீகரித்துள்ளதால், தமிழில் எழுதவும் வாய்ப்புகள் காணப்படுகின்றன. Content Writing Jobs in Tamil என தேடிப்பார்த்தால் தமிழில் உள்ள வாய்ப்புகள் எவ்வளவு என்பது உங்களுக்கு புரியும்.

சாதரணமாக ஒரு Content Writer, 600 சொற்களைக் கொண்ட கட்டுரை ஒன்றிற்கு 20 தொடக்கம் 50 டொலர்கள் கட்டணமாக அறவிடுகின்றார் என ஒரு கருத்துக் கணிப்புச் சொல்கின்றது.


ஒப்புநோக்கல், பிழைதிருத்தல் (Proofreading)


இதுவும் மேற்சொன்னதுடன் தொடர்புபட்டது என்றாலும், வித்தியாசமானது. மொழிப் புலமை உள்ளவராக இருந்தால், ஒப்புநோக்குவதற்கான வாய்ப்புகளை நீங்கள் பெறலாம்.

Google, இணையப்பக்கங்களில் காணப்படும் எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகளைக் கூட கண்டறிந்து, தேடுபொறியில் பின் தள்ளுவதால், இணையத்தள உரிமையாளர்கள் இதனை விரு

 

ம்புவதில்லை. எனவே, அவற்றினை சரி செய்ய Proofreader களின் சேவையினை பெற்றுக் கொள்கின்றனர்.

இச்சேவையினை அளிக்கின்ற போது, ஒப்புநோக்க தரப்படுகின்ற ஆவணங்களின் நம்பகத் தன்மையினை காக்க வேண்டியது, Proofreader களின் பொறுப்பு. இவ்வாறு நம்பிக்கையினைப் பெற்ற ஒரு Proofreader ஆக நீங்கள் மாறினால், நீண்டகால அடிப்படையில் பலர் உங்களை அணுகுவர்.


Graphic Designing & Web Designing


இணையத்தள வடிவமைப்பு மற்றும் அது தொடர்பான ஏனைய Graphic Design சேவைகளுக்கு எப்போதும் மவுசு காணப்படுகின்றது.

குறிப்பாக, Srilanka வில் Graphic Designing and Designer க்கான கேள்வி அதிகமாக காணப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது. அதிகளவான இலங்கை ஃப்ரீலான்ஸர்கள் இந்த துறையிலேயே அதிகம் உழைக்கின்றனர். இலங்கையில் காணப்படும் திறமையான கணினி வடிவமைப்பாளர்களால், இலங்கை freelancer களுக்கு நல்ல வரவேற்புள்ளது.

இணையம் மட்டுமல்லாது, சாதரண வியாபார முயற்சிகளுக்கும் தேவையான, விளம்பர பதாதைகள், சமூக வலைத்தளங்களிற்கான விளம்பரங்கள் மற்றும் அது சார்ந்த ஏனைய Graphic Designing களுக்கும் தேவையான,

 • மென்பொருள் திறன் (Software Skills)
 • Creativity

போன்றன இருக்க வேண்டியது அவசியம். இத்துறைக்கு இன்னும் அதிகமாக, பொறுமை மற்றும் புதிய முறைகள் தொடர்பிலும் அதிக Updates அவசியமாகின்றது.

இணையத்தள வடிவமைப்பு கிராபிக் டிசைனிங்க் இலிருந்து கொஞ்சம் தொழில்நுட்ப விடயங்களில் வேறுபட்டது. இது தொடர்பில் தெளிவாக தொழில்கல்வி அவசியமாகின்றது. அவ்வாறில்லாத பட்சத்தில் இணையத்தள வடிவமைப்பில் சேவை வழங்க முற்படுகின்ற போது எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டு உங்களது, இணையத் தொழில் பாதிக்கப்படலாம்.


இணையவழி கற்பித்தல் (Online Teaching)


தற்போதுள்ள கொரோனா சூழ்நிலையானது இத்துறையினை மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சேர்த்துள்ளது. Zoom போன்ற இணைவழி தொடர்பூடகங்கள் மூலம், வழமையான வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் முறையிலிருந்து கல்வி நடவடிக்கைகள் மாறியுள்ளது.

இவ்வகையான இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகள் Sri Lanka வில் கூட வெகு ஜோராக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. இதன் மூலம் தனிநபராக நாம் முன்னின்று நடாத்துகின்ற இணையச்சேவைகளும் காணப்படுகின்றன.

இவற்றில் சில, நேரடியான இணையவழி வகுப்பறைகள் மூலம் கற்பிக்க வசதி அளிக்கின்றன. இன்னும் சில, பாடநெறிகளை கட்டமைக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்ட User Interface கள் மூலமாக வழங்குகின்றன. விரும்புபவர்கள் கொள்வனவு செய்து கற்றுக் கொள்ளலாம்.

இதன் மூலம், நமக்கு தெரிந்த தொழில்கல்வியினையோ ஏனையோ திறன்களையோ கற்றுக் கொடுக்கமுடியும். விடயத்தினை தெளிவாக எடுத்துச் சொல்லும் Presentation Skills இதற்கு இன்றியமையாதது.

freelancer tamil meaning freelance jobs meaning in tamil freelancer jobs in sri lanka freelancer sri lanka freelancer tamil freelance accounting jobs in sri lanka freelance app developers in sri lanka freelance content writers sri lanka freelance data entry jobs in sri lanka freelance english meaning in tamil freelance english to tamil translation jobs


Transcriber


இது மேலைத்தேய நாடுகளில் அதிகமாக வேண்டப்படுகின்ற சேவையாக அறியப்படுகின்றது. வைத்தியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் தங்களது Client களின் நோய் மற்றும் வழக்கு தொடர்பான வரலாறுகளை எழுத்தில் ஆவணப்படுத்துவது அவசியம்.

ஆனால், நேர விரயம் கருதி அவர்கள் – அவற்றினை ஒலி வடிவில் எடுத்து பின்னர் எழுத்து ஆவணமாக மாற்றுவதற்கு Transcriber களின் சேவையினை எதிர்பார்க்கின்றனர்.

இதற்கும் கணிசமான தொகையினை கட்டணமாக சேவை பெறுனர்கள் அளிக்கின்றனர்.


மொழிபெயர்ப்பாளர் (Translator)


மேற்குறிப்பிட்ட Transcriber போன்றே, மொழிபெயர்ப்பாளர்களுக்கும் நல்ல கேள்வி உள்ளது. சர்வதேச மொழிகளான அறபு, மென்ட்ரின்,லத்தீன் போன்ற மொழிகளுடன் நமது தமிழ் மொழியினை பிற மொழிகளுக்கும் பிற மொழிகளை தமிழுக்கும் , தமிழிலிலிருந்து பிற மொழிகளுக்கும் மொழிபெயர்ப்பதற்கான சேவைகளும் எதிர்பார்க்கப்படுகின்றது.


கணக்காளர் மற்றும் கணக்கீடு தொடர்பான பணிகள் ( Virtual Bookkeeper / Accounting Jobs)


இணையத்தில் மேற்கொள்ளப்படும் தொழில்முயற்சிகளுக்கான கணக்குப் பேணல்கள் (Book Keeping) மற்றும் அது தொடர்பான ஏனைய சேவைகளை பெறவும் பல தொழில்முயற்சியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதற்காக, கணக்கீடு தொடர்பான பூரண அறிவு நமக்கு இருத்தல் அவசியம். அதே போன்று கணக்குப்பதிவுகளை மேற்கொள்ள உள்ள Online Accounting Softwares களான Quickbook Online மற்றும் Xero போன்ற இணைய மென்பொருட்கள் தொடர்பில் சிறப்பான பயிற்சி மற்றும் அறிவு இருக்கும் பட்சத்தில் பல Client களை பெற வாய்ப்புள்ளது.


சமூக வலைத்தள முகாமையாளர் (Social Media Manager)


வியாபார உலகில், சமூக வலைத்தளங்களின் பங்களிப்பு மிக இன்றியமையாததாக உள்ளது. பல நிறுவனங்கள் தங்களது வியாபரத்தினை பெருக்குவதில் சமூக ஊடகங்களை பெரிதும் நம்பியுள்ளனர். தமது வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருப்பதற்கும், தொடர்ச்சியான சேவை மற்றும் வியாபார நடவடிக்கைகளை மேம்படுத்தவும் இத்தொடர்பு மிக அவசியமானது.

இந்நிலமையில், புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பது, இருக்கும் வாடிக்கையாளர்களை தக்க வைப்பது எனும் இரு கடினமான பணிகளை ஆற்ற, அதிக நேரத்தினையும் சக்தியினையும் செலவழிக்க வேண்டி இருப்பதால், இதன் முக்கியத்துவம் உணர்ந்த நிறுவனங்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்கள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களை நிருவகிக்க Social Media Manager களை நியமிக்கின்றனர்.

 • சமூக வலைத்தளம் தொடர்பான தெளிவான புரிதல்
 • சிறிய அளவில் Graphic Designing தொடர்பான அறிவு.
 • அதிக நேரத்தை சமூக வலைத்தளங்களில் செலவிடுகின்ற பண்பு
 • சமூக வலைத்தளங்களின் தொழில்நுட்ப விபரங்கள் பற்றிய அறிமுகம்

போன்றன இச்சேவையினை வழங்குவதற்கான அடிப்படை தகைமைகளாக உள்ளன.


Internet Research


இணைய தொழில்முயற்சியாளர்கள் அதிகம் வேண்டி நிற்கும் ஒரு சேவையாக இது உள்ளது.இணையத்தில் தமது போட்டியாளர்களின் விலைகளை பரிசோதிக்க, அவர்களது ஏனைய வியாபாரச் செயற்பாடுகளுடன் தொடர்பான விடயங்களை பற்றிய தகவல்களை திரட்டவும், இச்சேவையினை தேடுகின்றனர்.

பொதுவாக நாம் இணையத்தில் சம்பாதிப்பது எப்படி என்ற வினாவுக்கு மேம்போக்கான விடையாக Data Entry இனையே குறிப்பிடுவர். அது இச்சேவையில் ஒரு பகுதி மட்டுமே! Data Entry மட்டுமல்லாது, Data Scrapping , Data Harvesting என பல வகையான சேவைகள் காணப்படுகின்றன.

இது தொடர்பான சேவைகளை வழங்க, Phython போன்ற Data Science தொடர்பான கணினி மொழிகள் தெரிந்து வைத்திருத்தல் பெரும் உதவியாக இருக்கும்.


மேலும் பல சேவைகள்


மேலே குறிப்பிட்ட சேவைகளை விட இன்னும் பல சேவைகளும்  காணப்படுகின்றன. இருந்தும், நீங்கள் Online Freelance இல் ஆரம்பநிலையில் உள்ளவர் என்பதாலும், Tamil இல் தொடங்குவதாலும், மேற்குறித்த சேவைகள் தொடர்பாக முதலில் ஆராய்ந்து பாருங்கள்.

அதன்மூலம் Freelance தொடர்பாகவும் மேலே குறித்துள்ள சேவைகள் தொடர்பிலும் இன்னும் தெரிந்து கொள்ளலாம். தொடர்ச்சியான தேடலும் நீடித்து நிற்றலும் பொறுமையுமே இத்துறைக்கு அவசியமான ஒன்று. அத்துடன் நமது திறன்களை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டியதும் இன்றியமையாதது. மேலும் இது தொடர்பில், முன்பு குறிப்பிட்டது போல Freelance in Tamil எனத் தேடிப்பாருங்கள். அதிக அதகவல்கள் மற்றும் மேலே குறிப்பிடாத இன்னும் பல சேவைகள் வழங்குகின்ற தளங்களும் கிடைக்கும்.


சேவைகளை வழங்கும் இணையத்தளங்கள்


மேற்குறிப்பிட்ட சேவைகளை வழங்கும் திறன் உங்களுக்கு இருக்கின்ற பட்சத்தில் அவற்றினை சந்தைப்படுத்துவதற்கு ஒரு இடம் அவசியமல்லவா? ஆம்! அந்த பணியினை பல இணையத்தளங்கள் மேற்கொள்கின்றன.

அது தொடர்பான விடயங்களை இன்னும் விரிவாக அடுத்து வரும் தொடர்களில் பார்ப்போம்

 

(தொடரும்…)

பகிர:

Leave a Reply