Online Jobs தொடர்பான விளக்கங்கள் Tamil இல் மிக க் குறைவாகவே காணப்படுவதை முன்பய அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன். How to earn money online in tamil என இணையத்தில் விரவிக் கிடக்கும் கேள்விக்கு Online Jobs தொடர்பில் Tamil இல் விளக்கமும் வழிகாட்டலும் குறைவாக காணப்படுகின்ற குறையினை நிவர்த்திக்க இத்தொடர் உதவும்.
அத்தியாயம் ஒன்றினை காண :
ONLINE JOBS TAMIL : இணையம் மூலம் சம்பாதிக்கலாம் வழிகாட்டி தொடர் – 01
சரி, இனி முயற்சிக்க நாம் தயாராகுவோம்!
ஆம்! முயற்சிதான்! நாம் உடனடியாக வெல்ல இது ஒன்றும் சூது அல்ல, குருட்டு அதிஸ்டமும் அல்ல. தொடர்ச்சியான முயற்சியும் சுயகற்றலுமே இத்துறையில் வெல்ல உள்ள வழி! ஒரே வழி! இதை எப்போதும் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
இத்தொடரில் இணையம் மூலமாக பணம் சம்பாதிப்பதற்கு சாத்தியமான பலவழிகளை தொடர்ச்சியாக எழுத உள்ளேன். அதை ஒவ்வொரு அத்தியாயமாக தொடர்ச்சியாக எழுதுவதால், உங்களுக்கு தெளிவுகள் கிடைக்கும். மேலும் தெளிவுகள் தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.
இலகுவாக பணம் உழைக்கலாமா? Is It Easy To Earn Money?
How to earn money online in tamil என்ற கேள்விக்கு விடையாக – பல இடங்களில், நீங்கள் “இலகுவாக இணையத்தில் சம்பாதிக்க வழி” என்ற வாசகங்களை. கண்டிருக்கலாம். ஒரு ஆவலில் அதைத் தெரிந்து கொள்ளவும் முயற்சித்திருக்கலாம். ஆனால், அதில் உண்மையில்லை. Easy Money என்பது, ஒருக்காலமும் சாத்தியமில்லாத ஒன்று. ஒவ்வொரு சம்பாத்தியத்தின் பின்னாலும், உழைப்பென்பது நிச்சயம் இருக்கும். இதை ஒருநாளும் மறந்துவிடாதீர்கள்.
நீங்கள் சாதாரணமாக, How to earn money online in tamil என்று கூகிளிட்டால், சிலர் அல்லது சில தளங்கள், ஐந்து நிமிட வேலைக்கு 5000 ரூபாய் கிடைக்கும் என்ற ரீதியில் விளம்பரங்களைச் செய்திருப்பார்கள். அது ஒரு பொறி, நம்பி நீங்கள் போனால், உங்களிடமிருந்து அவர்கள் பணத்தினை கறக்க தொடங்குவார்கள். Online மூலமாக பணம் சம்பாதிப்பதில் பல வழிகளை இணையம் நமக்கு சொல்லித்தருகின்றது. நமது திறன் மற்றும் இயலுமைக்கு ஏற்ற வகையில் எது நமக்கு பொருத்தமாக அமையுமோ அதனை தெரிந்து, தொடர்ச்சியாக நமது உழைப்பை இடுவதன் மூலம் வெற்றியினை பெறலாம்.
தொடர்ச்சியாக, விடாமுயற்சியினை இங்கு வலியிறுத்த காரணம், நிலைத்துநிற்றல் எனும் திறன் இல்லாவிட்டால், இணையத்தில் பணம் சம்பாதிப்பது கடினமே! தொடர்ச்சியான உழைப்பினை ஒரு கட்டம் வரை அனைத்து இணையவழி தொழில்களும் வேண்டி நிற்கும். அந்தப் புள்ளியினை நாம் அடைந்துவிட்டால், அதன் பின் தானாக பணம் தரும் கற்பகதருவாக அது மாறிவிடும். அந்நிலையினை அடைய அதற்கு முன் நாம் எடுக்கும் Hard Work & Consistancy மிக மிக அவசியமானது.
இணையத்தில் சம்பாதிக்க உள்ள தடைகள் என்ன?
முன்பு குறிப்பிட்டது போல, பல்வேறு வழிமுறைகளிலும் பணமீட்டலாம். இணைய வெளியில் நம்மை வெற்றிபெறச் செய்வதற்கு தடைகள் எதுவும் இல்லை. ஒன்றைத் தவிர! ஆமாம் ஒன்றே ஒன்றைத் தவிர! வேறு தடைகளே இல்லை. அந்த ஒன்று – நாம் தான். நீங்கள் வாசிப்பது சரிதான். நம்மைத் தவிர தடை என்பது வேறில்லை இணைய உலகில்.
தேடல், புதியதை கற்றுக் கொள்வதில் ஆர்வம். மற்றும் பரீட்சித்தல் போன்ற திறன்களுடன், நிலைத்து நிற்கும் குணம் (Consistancy) மற்றும் பொறுமை என்பன அத்தியவசியமான பண்புகளாக நம்மிடம் இல்லாத வரை இத்துறையில் வெல்வது கடினமாகும்.
உடனடியாக பெறுபேற்றினை எதிர்பார்த்து எதையும் செய்யமுடியாது. இன்று ஒரு விடயத்தை பிரயோகித்துவிட்டு நாளைக்குள் அதன் பலனை எதிர்பார்த்தீர்கள் என்றால், ஏமாந்து போவீர்கள். அந்த ஏமாற்றம், நீங்கள் எடுக்கும் முயற்சியில் அயர்ச்சியினையும் சலிப்பினையும் ஏற்படுத்திவிடும். இதனால், இணையம் மூலமான சம்பாதியத்தை வெற்றிகரமாக பெருக்க, உடனடி பலனை எதிர்பார்த்து பலன் இல்லை. அதற்கேற்ற வகையில் உங்களை தயார்படுத்த வேண்டியது மிக மிக முக்கியம்.
Online Jobs களுக்கு தேவையான திறன்கள் என்ன?
சீட்டுக்கட்டுக்களை மட்டும் விளையாடி பொழுது போக்கும் ஒரு நபர், விரும்பினால் இணையத்தில் தனக்கு தெரிந்த சீட்டு விளையாட்டினை மட்டும் மூலதனமாக்கி கூட பணம் உழைக்கலாம். என சொல்லப்படுகின்றது.
ஒன்றுக்கும் உதவாது என எண்ணும் திறன்களைக் கூட காசாக்கும் கலையினை இணையம் நமக்கு வழங்குகின்றது என்பதற்கான உதாரணமே நான் மேலே கூறியது.
எனவே, விசேடமாக இவ்வாறான திறன்கள்தான் வேண்டும் என்று ஒன்றில்லை. அடிப்படை கணினி அறிவு, இணையம் என்பன அத்தியவசியம் அதோடு, ஆங்கில அறிவு ஓரளவுக்கு இருந்தாலும் நலம். ஆனால் அது தற்போதைய இணையத் தொழில்நுட்பத்தில் அவசியமற்ற ஒன்றாகிக் கொண்டு வருகின்றது. இணையமொழிகளின் முதன்மையான ஆங்கிலத்தினை வேற்று மொழிகளுக்கு பெயர்க்க பல்வேறு வசதிகள் தற்போது காணப்படுகின்றது. முக்கியமாக Google Translate. மொழியின் அர்த்தம் சிதையாமல் ஓரளவு மொழிபெயர்க்கின்றது.
அதைத் தாண்டி, நமக்குள்ள திறன்கள், அறிவு என்பவற்றைக் கொண்டு வெற்றிகரமாக இணையத்தில் வெல்லலாம். இணையத்தில் வெற்றிகரமாக உழைக்க ஒரு தடையும் இல்லை. நாம் எங்கு வரை செல்ல விரும்புகின்றமோ அதுவரைக்கும் செல்லலாம். மேலுள்ள சுயதிறன்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் எதையும் சாதிக்க முடியும். எந்த திறன்கள் இருந்தாலும், அதற்கே உரித்தான வழிகள் இல்லாமல் இல்லை.
Online Jobs வகைகள்
ஒன்லைன் மூலமாக பல்வேறு வகையான தொழில்முயற்சிகள் மற்றும் தொழில்களை நாம் பெறலாம். அந்த வகையில் கீழ்வரும் வகைகள் தற்போதைய இணைய உலகில் பிரபலமாகவும் அதிக கேள்வி உள்ள துறைகளாகவும் காணப்படுகின்றன.
இப்பதிவில் அவற்றினை சுருக்கமாக நோக்குவதுடன், இனி வரும் தொடர்களில் ஒவ்வொரு விடயத்தினையும் தனித் தனியாக நாம் நோக்கலாம். சரி, இனி Online Jobs வகைகளை நோக்கலாம்.
-
Freelancing Jobs
உங்களிற்கு,
- எழுதும் திறன் இருக்கும்.
- மொழிபெயர்க்கும் ஆற்றல் இருக்கும்.
- வீடியோக்களை எடிட் பண்ண தெரிந்திருக்கும்.
- இணையத்தளங்களை வடிவமைக்க தெரிந்திருக்கலாம்.
- வேகமாக தட்டச்சு செய்யலாம்.
- தொழில்முறை புகைப்படக் கலை அறிந்தவராக இருக்கலாம்.
இப்படி என்னென்ன திறன்கள் உங்களிடமுள்ளதோ அத்திறன்கள் தேவைப்படும் நபர்கள் அவற்றினை தேடிக் கொண்டிருப்பர். அவர்களையும் உங்களையும் இணைக்கும் சில இணையத்தளங்கள் மூலம், உங்கள் திறன்களை பணமாக்கி கொள்ள முடியும்.
-
Blogging (வலைப்பூக்கள் / வலைத்தளம்)
இதுவும் நம்மில் பலரிற்கு பரிச்சயமான ஒன்றுதான். மேலோட்டமாக அறிந்திருந்தாலும் இதன் மூலம் பணம் சம்பாதிப்பதற்கு பல வழிமுறைகள் காணப்படுகின்றன.
Online Blogging இரு வகையில் காணப்படுகின்றது.
- எழுத்து மூலமான வலைப்பூக்கள் (Writing Blogs)
- காணொளி (Vedio Blogs / Vlogs)
இவை இரண்டின் மூலமும் பலர் தற்போது பணம் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.
-
மின்வணிகம் (E-commerce)
வழமையான வணிகமுறையின் இன்னொரு படியாக முன்னேறியுள்ள E-commerce மூலமாக. பலர் தமது வாழ்வாதாரத்தினை முன்னேற்றிக் கொண்டிருக்கின்றனர். இது இன்று பலராலும் நம்மத்தியில் சிறிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அதனை இன்னும் சிறப்பாக செய்வதனால் மேலும் அதிகளவில் வியாபாரத்தினை பெருக்கலாம்.
இதில், பல்வேறு வழிகள் காணப்படுகின்றன.
நேரடியாக தமது இணையத்தளங்களில் வியாபாரம் செய்தல்.
இணைய சந்தைகளில் வியாபாரம் செய்தல்.
எனப் பல வழிமுறைகள் உள்ளன.
-
Virtual Assistant.
இணையத்தினை முழுநேர வாழ்வாதாரமாக கொண்டுள்ள பலர் உள்ளனர். அவர்களது அலுவலக பணிகள் அனைத்தும் இணையத்துடன் இணைந்தே காணப்படும். அவற்றினை மேற்கொள்ள அவர்களுக்கு தேவையான அலுவலக விடயங்களை கவனிக்க இணையம் மூலமாக உதவியாளர்களை பெற்றுக் கொள்வர். அவ்வாறான வேலைகளுக்கு மணித்தியாலத்திற்கு 20 தொடக்கம் 50 டொலர்கள் வரை சம்பளமாக வழங்கப்படுகின்றது.
-
டிசைன்களை விற்பனை செய்தல். ( Sell Your Designs )
புத்தாக்க சிந்தனையும், கலைநயம் மிக்கவராகவும் நீங்கள் இருந்தால், உங்களது திறமையினை பணமாக்க பல வழிகளை இணையம் திறந்து வைத்துள்ளது. உங்களது டிசைன்களை, டீசேர்ட்டுக்கள், நிலை விரிப்புக்கள் மற்றும் தேநீர் கோப்பைகள் போன்றவற்றில் அச்சிட்டு சந்தைப்படுத்தும் பல இணையத்தளங்கள் காணப்படுகின்றன.
-
மின்னூற்கள் வெளியிடல் (E-Books Publishing)
எழுத்து உங்களுக்கு கைவரப்பெற்ற ஒன்று என்றால், நீங்கள் உங்களது படைப்புகளை எழுதி மின்னூற்களாக வெளியிடலாம். விற்பனை செய்கின்ற இணையத்தளமானது, நமது எழுத்துக்கான Royalty இனை ஒவ்வொரு விற்பனைக்கும் தரும். விற்பனையாகின்ற நமது நூற்களுக்கு மட்டுமல்லாது, இணையத்தில் வைத்தே வாசிக்கப்படும் பக்கங்களுக்கும் கணக்கிட்டு பணம் செலுத்துகின்ற இணையத்தளங்களும் உண்டு.
-
Online Marketing
தேடுபொறிகளில் (Search Engines) உங்களுக்கு அதிக பரிட்சயமும் அதன் உள்ளக தொழில்நுட்பங்களும் அதிகம் தெரியும் என்றால், நீங்கள் இதில் ஈடுபடலாம். இதனை பொதுவாக Search Engine Optimization (SEO) எனக்குறிப்பிடுவார்கள்.
இதன் மூலம், தமது Digital மற்றும் Physical Products களை சந்தைப்படுத்துவதனுடன், பிறரது பொருட்களை சந்தைப்படுத்தி அதன் மூலம் தரகினை பெறலாம்.
-
Social Media Influencer
எங்கும் வியாபித்துள்ள சமூக வலைத்தளங்களை இன்னும் நாம் பொழுதுபோக்கிற்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டிருக்க, இன்னொரு தரப்பு அதன் மூலம் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றது.
ஒரு சமூக வலைத்தளத்தில், உங்களை / உங்கள் பக்கத்தை பின் தொடர்பவர்கள் சில இலட்சங்களில் தொடங்கி பல இலட்சங்களாக இருக்கின்றது என்றால், நீங்களும் Social Media Influencer தான். அதன் மூலம் கணிசமான வருமானத்தை உழைக்க வழிகள் உள்ளன.
-
Graphic Designer
கணினி மென்பொருட்களைக் கொண்டு Graphic Design களை செய்யக்கூடியவராக இருந்தால், உங்களுக்கு அதிக கேள்வி இணைய வெளியில் உண்டு.
Logo Designing, Ebooks Cover Page Designs, Web Page Designing, Leaflet – Broucher Designing, இவ்வாறு பலதரப்பட்ட தேவைகளுக்கு உங்கள் திறன்களை கொள்வனவு செய்ய பலரும் தயாராக இருக்கின்றனர்.
-
மற்றும் பல.
இவை தவிர்த்து, இன்னும் பல வழிகளில் இணையம் பொருளீட்ட நமக்கு வழிகளை திறந்து வைத்துள்ளது.
- Micro Freelancing
- Survey
- Course Selling
- Reviews
- Voice Over
- Transcript
என பல வழிகளில் இணையத்தில் நாம் உழைக்கலாம்.
இனி வரும் பதிவுகளில், மேலே குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு முறை தொடர்பில் தெளிவாக ஒவ்வொரு அத்தியாயத்தில் அலசுவோம். மேலதிகமாக ஏதும் தெரிய வேண்டும் எனில் தொடர்பு கொள்ளுங்கள் – எனது FB Link : Sarhoon
(தொடரும்..)