Jack ma Missing! Jack Ma எங்கே?

Spread the love

Jack ma Missing! Jack Ma எங்கே? Where is Alibaba Owner?

கொரோனா எனும் பிரச்சனையைத் தாண்டி, உலகம் கேட்கும் கேள்வி! சமூக வலைத்தளங்களில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் கேள்வி இதுதான்! ஜெக் மாவை காணவில்லை!

யார் இந்த Jack Ma

 

மின்வணிகத்தின் ஜாம்பவனான அலிபாபா குழுமத்தின் தலைவர் – ஜாக் மா! ஒரு ஆங்கில ஆசிரியராக, தனது வாழ்க்கையினை ஆரம்பித்து, தனக்குள் உதித்த எண்ணத்தினை நண்பர்களுடன் இணைந்து உருக்கொடுத்து அலிபாபா நிறுவனத்தினை உலகில் மின்வணிகத்தின் மூலகர்த்தாவாக மாற்றி இருந்தார்.jack ma missing zoo jack ma missing you jack ma missing wion jack ma missing video jack ma missing uk jack ma missing quora jack ma missing person jack ma missing letter jack ma missing kit jack ma missing jesus jack ma missing hindi jack ma missing girl jack ma missing form jack ma missing email jack ma missing cnn jack ma missing bbc jack ma missing alibaba

56 வயதான Jack Ma வின் Ali Baba நிறுவனத்தின் 2020 ஆம் ஆண்டின் வருமானம் 72 பில்லியன் அமெரிக்க டொலர்கள்! இப்பாரிய வணிக சாம்ராஜ்ஜியத்தின் மூல வேர் Jack Ma! வணிகம் தாண்டி, பொது விடயங்கள் மற்றும் சமூகம் சார்ந்த வேலைகளில் ஈடுபாடு காட்டுவதும் இவரது பண்பு. அதிலும் முக்கியமாக, வளர்ந்து வருகின்ற இளம் தொழில்முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தி, அவர்களை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்வதை தனது Fashion ஆக எப்போதும் அடையாளப்படுத்திக் கொள்வார்.

இவ்வாறு பல காரணங்களுக்காக, Forbs சஞ்சிகையின், 2018 இற்கான “உலகின் செல்வாக்கான மனிதர்கள்” பட்டியலில் 21 வது இடத்தினை வகித்திருந்தார். அது மட்டுமன்றி, Fortune சஞ்சிகையின் 2017 ஆம் ஆண்டிற்கான, உலகின் பலமிக்க 50 நபர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தார் Jack Ma. 58.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சொத்துமதிப்பினைக் கொண்ட Jack Ma, சீனாவின் இரண்டாவது செல்வந்தர் மட்டுமன்றி உலகின் 25 வது செல்வந்தர்.

 

பொதுப்பணிகளில் ஆர்வம்

 

சமூகப்பணிகளில் ஆர்வமுள்ள ஜக் மா, முன்பு கூறியதைப் போன்று, இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதில் எப்போதும் பின்னிற்கவில்லை. அதுவும் வளர்ச்சியடைகின்ற மற்றும் வறுமையான ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் உள்ள இளம் தொழில் முயற்சியாளர்களை உற்சாகப்படுத்துவதில் பல்வேறு வேலைத்திட்டங்களை அவர் முன்னெடுத்தார்.

  • 2008 இல் Sichuan இல் நடைபெற்ற நில அதிர்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 808,000 டொலர்களை அலிபாபா நிறுவனம் நிதியாக அளித்த து.
  • 2015 இல் இளைய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க, Alibaba Hong Kong Young Entrepreneurs Foundation என்ற அரச சார்பற்ற அமைப்பினை அலிபாபா நிறுவனம் தொடங்கியது.
  • அதே வருடம், நேபாளத்தில் நடந்த புவியதிர்ச்சியில் பாதிப்புக்குள்ளான 1000 வீடுகளை புனரமைப்புச் செய்து கொடுத்தது.

இப்படி பல தன்னலமற்ற சேவைகளை தனது நிறுவனத்தினூடாக மேற்கொண்ட ஜெக்மா,

  • 2018 செப்டம்பர் மாதம், தமது தன்னார்வ பணிக்காக – Jack Ma Foundation எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தார் . இத்தன்னார்வ நிறுவனத்தினூடாக, கல்விப்பணிகள், சூழல் தொடர்பான வேலைத்திட்டங்கள் மற்றும் பல பரோபகார நிகழ்ச்சிதிட்டங்களை ஜெக்மா மேற்கொண்டார்.
  • இந்த வேலைத்திட்டங்கள் மற்றும் சமூகப்பணிகளுக்காக, Forbs சஞ்சிகை, 2019 இல், “Asia’s 2019 Heroes of Philanthropy” (ஆசியாவின் தனவந்தர்களின் கதாநாயகன்) எனும் தலைப்பை வழங்கி கௌரவித்தது.

இதைத் தொடர்ந்து, ஜாக் மா, அலிபாபா நிறுவனத்தில் தான் வகித்து வந்த தலைவர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். இருந்தும் அலிபாபா நிறுவனத்தின் பங்குகளில் அதிக பங்குகளை கொண்டுள்ள பங்குதாரராக Jack Ma தொடர்ந்து உள்ளார்.

சீன அரசும் எதிர்க்கருத்துக்களும்

 

சீன அரசு, ஜனநாயகத்தை மேற்பூச்சு பூசிக் கொண்டு கருத்துச் சுதந்திரத்தை அவ்வளவாக ரசிக்காத அரசு! அரசுக்கு எதிரான கருத்துக்கள் பலரை சென்றடையும் இடங்களில் இருந்து வெளிவரும் போது அதை நசுக்க ஒரு போதும் பின்னின்றதில்லை.

இப்படியான சந்தர்ப்பங்களில் சீனாவின் பெரும் தொழிலதிபர்களை தகுதி தராதரம் பாராமல் அள்ளிக் கொண்டு போய் ‘சிகிச்சை’ அளித்திருக்கின்றது.  இதற்கு உதாரணம், Corona தடுப்பு நடவடிக்கைகளில் சீன ஜனாதிபதி ஒரு கோமாளி போல செயற்படுகின்றார் என விமர்சித்த 69 வயது Ren Zhiqiang எனும் ரியல் எஸ்டேட் தொழிலதிபருக்கு அரசிடமிருந்து கிடைத்த வைத்தியம்- ஊழல் செய்தார் எனும் பெயரில்,  18 மாத ஜெயில் தண்டனையும், 4.2 மில்லியன் யுவான் தண்டப் பணமும். மேன்முறையீட்டுக்கு அவசியமே இல்லாமல், உரிய தொழிலதிபரே தமது குற்றங்களை தாமாக முன்வந்து ஒப்புக் கொண்ட தாகவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இதுதான் நிலை. Jack Ma Missing சம்பவத்தின் பின்னர் இன்னும் பல சம்பவங்களுடன் சர்வதேச ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஜாக் மா-வுக்கும் சீன அரசாங்கத்துக்கும் என்ன பிரச்சினை?

 

கடந்த அக்டோபர் 24 இல் ஆரம்பித்த அக்கப்போர் இது! எனச் சொல்கின்றனர். அவர் Missing என சொல்லப்பட்டும் இம்மாதத்துடன் இரண்டு மாதங்கள் முடிகின்றது. அப்படி என்னதான் பிரச்சனை?

ஷாங்காய் நகரில் நடந்த ஒரு முக்கியமான Fintech மாநாட்டில் பேசினார் Jack. சீனா வங்கிகள் பற்றியும், ‘சீனா தொழில் நிறுவனங்கள் மீது விதித்துவரும் கட்டுப்பாடுகள்’ குறித்தும் பல கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

இதோடு விட்டிருந்தால் பரவாயில்லை, நேரடியாக சீன அரசினை சீண்டிப்பார்க்கும் வகையில், இறுதியாக அவர் விட்ட பஞ்ச் இன்னம் பலமாக இருந்தது.

சீன வங்கிகளில், ஒரு லட்சம் கடன் வாங்கினால், நீங்கள்  – வங்கிக்கும்,

10 லட்சம் என்றால் நீங்களும் வங்கியும்,

அதுவே, 1 பில்லியன் என்றால் வங்கி உங்களுக்கும் பயப்பட வேண்டும்.

என்று சீனாவின் வங்கி நடைமுறைகளை கொஞ்சம் கிண்டலுடன் விமர்சித்திருந்தார்.

 

சீன அரசின் எதிர் அடி!

 

இது சீன அரசை சீண்டிப்பார்த்தது. அரச அதிகாரம் சும்மா இருக்குமா! ஜாக் மாவின் வியாபார சாம்ராஜ்ஜியத்தை குடைய தொடங்கியது.

புதிய/மாற்று வங்கி வலையமைப்பினை தனது Alipay மின் பணப்பரிவர்த்தனை மூலம் நிறுவும் முயற்சியின் ஒரு அங்கமாக, அலிபாபாவின் துணை நிறுவனமாக, Ant எனும் நுண்நிதி கடன் வழங்கும் நிதி நிறுவனத்தை நிறுவி, சீனா கடந்தும் ஒரு உலகளாவிய வங்கி வலையமைப்பை உருவாக்கும் ஆரம்ப முயற்சியில் ஈடுபட்டிருந்தது.

இதன் முதற்கட்டமாக பொது பங்கு வழங்கல் ( Initial public offering) நடவடிக்கைகளை ஆரம்பிக்க இருந்த து. Ant வழங்க இருந்த IPO வின் மொத்த பெறுமதி – 3,700 கோடி டொலர்கள். இது – உலகில் இதுவரை வழங்கப்பட்ட IPO களில் மிகப்பாரிய பங்கு வழங்கலாக இருந்திருக்கும்.

jack ma missing zoo jack ma missing you jack ma missing wion jack ma missing video jack ma missing uk jack ma missing quora jack ma missing person jack ma missing letter jack ma missing kit jack ma missing jesus jack ma missing hindi jack ma missing girl jack ma missing form jack ma missing email jack ma missing cnn jack ma missing bbc jack ma missing alibaba

ஆனால், சீன அரசு அதனை அனுமதிக்கவில்லை. இதனால், ஜாக்மாவுக்கும் Ant நிறுவனத்திற்கும் பாரிய சரிவு ஏற்பட்டதுடன் அலிபாபா நிறுவனமும் நிதிச்சரிவினை சந்தித்திருந்தது.

இதோடு விடாமல், சீன அரசு – தனது நிறுவனத்தில் விற்கப்படும் பண்டங்களை இன்னொரு நிறுவனத்தில் விற்கமுடியாது எனும் அலிபாபாவின் Monopoly கொள்கையினை கையில் எடுத்தது.

  • இந்தக் கொள்கை, சீன நெறி முறைகளுக்கு எதிரானது என்று சம்மன் அனுப்பியது சீன அரசு.
  • காரணமாக அலிபாபா பங்கு விலை 9 சதவிகிதம் சரிந்தது.
  • அடுத்தடுத்து நடவடிக்கைகள் தொடங்கியது சீன அரசாங்கம்.
  • ‘போட்டியாளர்களுக்கு வாய்ப்பைத் தருவதில்லை; அலிபாபா நயவஞ்சமாகச் செயல்படுகிறது’ என்றெல்லாம் புதிய விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன.

இப்படி பல்வேறு நெருக்குவாரங்களை அரசு கொடுத்துக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் Jack Ma Missing.

அரசின் அழுத்தம் காரணமாக தலைமறைவானாரா? அல்லது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கின்றாரா? என உலகமே தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றது.

 

அலிபாபா மற்றும் சீன அரசின் பதில் என்ன?

 

இன்றுவரை Jack Ma பற்றி எதுவும் தெரியவில்லை. Mystery என சர்வதேச ஊடகங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்க, அரசோ, அலிபாபா நிறுவனமோ இன்னும் எவ்விதமான உத்தியோகபூர்வ அறிக்கைகளையும் விடவில்லை.

உலகப் பொருளாதாரத்தில், குறிப்பிடக்கூடிய தாக்கத்தினை செலுத்தக்கூடிய அலிபாபா நிறுவனத்தின் Master Brain ஐ காணவில்லை என்பது, நிறுவனம் தாண்டிய பாரிய எதிர்விளைவை உலகப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தலாம் எனவும் எச்சரிக்கின்றனர் பொருளியல் வல்லுனர்கள்.

எது எப்படியோ, முன்னேறத் துடிக்கும் பல இளைஞர்களின் Inspretion Icon – Jack Ma Missing என்பது உலகின் என்பது பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ள சேதி. அது ஒரு கெட்ட செய்தியாக அமைந்துவிடாமல், இனிதே சுபம் என முடிய வேண்டும் என்பதே பலரின் பிரார்த்தனையாகும்.

பொறுத்திருந்து பார்ப்போம்.

பகிர:

Leave a Reply