மொபைல் உலகின் முடிசூடா மன்னனாக தொடங்கியதிலிருந்து இன்று வரை தனித்துவமாக திகழ்வது ஆப்பிள் ஐபோன் மட்டுமே.
Mobile போன் பிரியர்களில் இளையோரிலிருந்து பெரியவர்கள் வரை Iphone என்பது கனவு.
ஒவ்வொரு Iphone வெளியீட்டின் போதும், உலகின் மொத்த கவனமும் Apple இன் வெளியீட்டிலேயே இருக்கும். ஐபோன் பயனர்கள் எப்போதும் அடுத்த வெளியீட்டில் ஆர்வமாக இருப்பார்கள், எப்போதும் ஐபோன்களுக்கென இருக்கும் ரசிகர்கள் கூட்டம் குறைந்ததே இல்லை. இலங்கையில் ஐபோன் 12 ஆனது சந்தையில் கிடைக்கின்றது. Iphone 12 in sri lanka too..!
இதற்கு முன்பு நாம் நோக்கிய Oppo F15 மற்றும் Huawei Nova 7i போன்களைப் போலல்லாமல், Apple Iphone, விலையிலும் தொழில்நுட்ப விடயங்களிலும் எப்போதும் முன்னணி வகிக்கும் கைபேசி என்றால் யாரும் மறுப்பதற்கில்லை.
What are the iphone 12 models
ஒவ்வொரு வருடத்தின் மூன்றாவது காலாண்டில் தனது புதிய வெளியீடுகளை வெளியிடும் Apple நிறுவனமானது, தமது அனைத்து வெளியீட்டின் போதும் விலை வகைப்படுத்தலுடன் கூடிய கைபேசிகளை வெளியிடுவதை அண்மைக்காலங்களில் வழக்கமாக்கி உள்ளது. அந்த வகையில், சென்ற ஒக்டோபர் 2020 இல் இவ்வருடத்திற்கான ஐபோன்களை வெளியிட்டது ஆப்பிள் நிறுவனம். கொரோனா காரணமாக, இம்முறை ஆப்பிள் வெளியீடுகள் Online இல் நடைபெற்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஒக்டோபர் 23 இலிருந்து பெரும்பாலான நாடுகளிற்கு விற்பனைக்கு வந்துள்ளன இம்முறை வெளியீடுகள்.
ஆப்பிள் நிறுவனமானது, நான்கு வகையான ஐபோன்களை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த யுக்தி மூலம், இருக்கின்ற மொபைல் பயனாளிகளுக்கு மேலதிகமாக இன்னும் புதியவர்களை உள்ளீர்க்கும் யுக்தி உள்ளது வெளிப்படை. அதன்படி,
ஆகிய பெயர்களில் தொழில்நுட்ப அம்சங்களில் சில வேறுபாடுகளை கொண்ட ஐபோன்களை ஆப்ப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. Tamil இல் தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த ஐபோன்கள் தொடர்பில் சில யூடியூப் unboxing வீடியோக்கள் மற்றும் Review கள் வந்திருக்கின்ற போதும், முற்று முழுதாக, Iphone 12 Tamil review தொகுப்பாக வந்திருக்கவில்லை. அதற்கான ஒரு முன்னோடியே இப்பதிவு.
What are the features of iphone12
மேற்குறிப்பிட்ட நான்கு வகை போன்களிலும் தொழில்நுட்ப அம்சங்களில் வேறுபாடுகளை ஆப்பிள் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
தேவைகளுக்கேற்ப பயனர்களை வகைப்படுத்த இந்த பொறிமுறையினை கையாண்டுள்ளது. இதற்கு முன்னய மொடல் போன்களிலிருந்து Dual Sim வசதிகளை வழங்கத் தொடங்கியிருந்த ஆப்பிள், இந்த போன்களிலும் அதனை தொடர்ந்திருக்கின்றது.
வேறு என்ன வகையான அம்சங்கள் அமைந்துள்ளன என்பதை இனி பார்ப்போம்.
What memory for iphone12
Memory யானது வழமை போல In Built ஆக காணப்படுவதுடன், Iphone12 Pro மற்றும் Pro Max என்பன 128GB,256GB,512GB என மூன்று தரங்களிலும் Iphone12 , Mini என்பன 64GB,128GB,256GB என்றவாறு வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, இந்நான்கு போன்களில் Pro , Pro Max என்பவற்றின் விலை ஒரு தரத்திலும் ஏனைய இரண்டு மொடல்கள் இன்னொரு விலைப் படித்தரத்திலும் காணப்படுகின்றது.
How long does iphone 12 battery last
Battery யின் மின் கொள்ளளவு போன்களுக்கு ஏற்றவகையில் வித்தியாசப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கூறிய விலை வேறுபாடானது, இந்த விடயத்திலும் தங்கியிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
iphone 12 – Li-Ion 2815 mAh Battery கொள்ளளவையும் Iphone12 Mini – Li-Ion 2227 mAh Battery கொள்ளளவையும் கொண்டுள்ளதுடன், Iphone 12 Pro – Li-Ion 2815 mAh, Iphone Pro Max – Li-Ion 3687 mAh மின் கொள்ளளவினைத் தாங்கும் பற்றரிகளை கொண்டுள்ளது.
What are the colors for the iphone 12
ஐபோன் தனது ஆரம்பகால புறவடிவமைப்புக்கு மாறியுள்ளது. இந்த வெளியீட்டினை பொறுத்தவரையில் iphone 12 colors கள் தனித்துவமாக உள்ளது. 12 மற்றும் Mini ஆகியவை கறுப்பு , வெள்ளை, பச்சை மற்றும் நீலம் ஆகிய வழமையான நிறங்களிலும், மற்றைய இரு போன்களும் Silver, Graphite, Gold, Pacific Blue ஆகிய புதுமை நிறங்களில் வெளிவந்துள்ளது.
12 இல் காணப்படும் Camera வானது, நான்கு மொடல்களிலும் ஒத்த தன்மையில் காணப்பட்டாலும் சிற்சில வேறுபாடுகளைக் கொண்டு காணப்படுகின்றது. பொதுவாக, பிரதான மற்றும் முன்பக்க கமெராக்கள் 12Mp ஒளித்திறனை கொண்டிருந்த போதும், புகைப்படம் மற்றும் வீடியோ என்பவற்றின் தொழில்நுட்ப அம்சங்கள் வேறுபட்டே காணப்படுகின்றன. அதில் முக்கியமாக Pro மற்றும் Pro Max இன் பிரதான பின்பக்க கமெராக்களின் அம்சங்க்கள் ஒரு தொழில்முறை கமெராவிற்குள்ள சிறப்பம்சங்களை கொண்டு காணப்படுகின்றன.
இவ்வாறு பல சிறப்பம்சங்களை கொண்டு காணப்படும் இந்த ஐபோன்களின் விலைகளில் குறைந்ததாக Iphone 12 Mini காணப்படுகின்றது. விலைகள் மற்றும் iphone 12 price in sri lanka என்பவற்றை இன்னொரு பதிவில் நோக்கலாம். தற்போது, தொழில்நுட்ப விடயங்களில் இந்நான்கு கைபேசிகளுக்குமிடையில் காணப்படும் வேறுபாகளை நோக்கலாம்.