oppo! இலங்கை இளைஞர்களுக்கு கிடைத்த ஒரு Sensational Brand. மிக முக்கியமாக, அதன் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் அதைவிட அதி முக்கியமானது – விலை. நல்ல தொழில்நுட்ப அம்சங்க்களை அடக்கியுள்ள Oppo மொபைல்கள் விலையில் மனங்கோணாதபடி உள்ளது. இதன்பயனாக, மொபைல் சந்தையில் இந்த பிராண்ட் மொபைல்களுக்கு கிராக்கி நிலவுகின்றது. அந்த அடிப்படையில் Oppo F15 In Sri lanka என்ற தலைப்பிற்கமைவாக இனி நாம் குறித்த அக்கைபேசியின் விலை மற்றும் ஏனைய விடயங்களை நோக்குவோம்.
Oppo கைபேசிகளுக்கான வரவேற்பு
Huwei மொபைல்கள் போல இவற்றினதும் தொழில்நுட்ப அம்சங்கள் கொடுக்கும் விலைக்கு குற்றமில்லை ரகங்களே.இதேதரத்தில்காணப்படுகின்ற , Huawei nova 7i க்கு இலங்கையில் கிடைத்த வரவேற்பு போல, இந்த பிராண்ட் கைபேசிகளுக்கும் நல்ல வரவேற்பு காணப்படுகின்றது.
Oppo நிறுவனமானது, 2001 ஆம் ஆண்டு சீனாவில் தொடங்கப்பட்டது, ஆரம்பத்தில் Headphone கள் மற்றும் ஒலிச்சாதனங்களை தயாரித்து வழங்கிய தாபனம், தனது முதலாவது Smart Phone தயாரிப்பினை 2015 இன் இறுதியில் வெளியிட்டது. Oppo A33 எனப் பெயரிடப்பட்ட அந்த மொபைல், வெளியிடப்பட்ட காலங்களில் சந்தையில் இருந்த ஏனைய மொபைல் நிறுவனங்களின் தயாரிப்புடன் ஒப்பிடும் போது பெரிதாக குறை ஒன்றுமில்லாமல் இருந்தது. தனது அறிமுக மொபைலினை தொடர்ந்து அடுத்த கைபேசியின் Release date 2016 ஆரம்பத்தில் F1 என்ற பெயரில் வெளியானது.
அதனைத் தொடர்ந்து சீரான கால இடைவெளியில் தொடர்ச்சியாக தனது F Series மற்றும் A Series Mobile களை வெளியிட்டு வரும் இந்நிறுவனம், 2020 ஜனவரியில் அறிமுகப்படுத்திய Smart Phone னே Oppo F15 ஆகும். Oppo F15 Features இன் படி Ram 8gb யும் Rom 128gb யாகவும் காணப்படுகின்றது. வெளியிட்ட சில நாட்களுக்குள்ளேயே Oppo f15 in Sri Lanka Too!
F Series இல் வெளியிடப்பட்ட இந்த வெளியீட்டின் பின்னர் F17 / F17 Pro என்பன செப்டம்பர் 2020 இல் வெளியிடப்பட்டது.
இந்த Smart Phone இற்கான வரவேற்பு, இளைஞர்களிடையே வரவேற்பினை பெற்றுத்தான் உள்ளது. அதற்கு காரணம் மேற்கூறியவாறு, விலை மற்றும் அதில் காணப்படுகின்ற தொழில்நுட்ப வசதிகள் எனக் கூறலாம்.
Oppo f15 in sri lanka
இலங்கையில், பொருளாதார இயலுமையில் நடுத்தர தட்டினைக் கொண்ட இளைஞர்களுக்கு தொழில்நுட்ப வசதிகள் மேம்பட்ட விலையில் சமரசம் செய்யக்கூடிய இக்கைபேசிக்கு வரவேற்பு இருப்பது வழமையானதே.
இலங்கையில் பிரபலமான Electronics விற்பனையாளர்களான, Abans, Singer போன்றவற்றிலும் Daraz.lk போன்ற ஒன்லைன் விற்பனையாளர்களும் இந்த கைபேசியினை விற்பனை செய்கின்றனர். Oppo F15 Price ஆனது ஒவ்வொரு விற்பனையாளரிடம் சிறு சிறு வித்தியாசங்களுடன் காணப்படுகின்றது. இந்த விலை ஒப்பீட்டினை Ideabeam போன்ற இணையத்தளங்களிலும் நாம் காணலாம். அத்துடன் மிக முக்கியமான விற்பனையாளர்களின் Price களினை இங்கு நாம் அவதானிக்கலாம்.
Review
இந்த கைபேசி தொடர்பான Review கள் ஆங்கிலத்தில் பல்வேறு தளங்களில் காணப்பட்ட போதிலும், review in tamil இல் காணப்படவில்லை. Unboxing தொடர்பான வீடியோக்கள் Tamil இல் காணப்பட்ட போதிலும் இந்த கைபேசி தொடர்பான மதிப்பாய்வு தமிழில் குறைவாகவே காணப்படுகின்றது. இது அதனை நிவர்த்தி செய்யலாம்.
சர்வதேச ரீதியில் இந்த மொடல் Phone பாவனையாளர்கள், இந்த கைபேசி தொடர்பாக தெரிவித்துள்ள விமர்சனங்கள் மற்றும் கருத்துக்களை நாம் oppo f15 review in tamil ஆக இங்கு பார்ப்போம்.
இந்த போன் , கமெரா மற்றும் Mega Pixel என்பன சிறப்பாக உள்ளன. கனமாக இல்லாமல் மெல்லிய அழகிய வடிவில் உள்ளதும் அருமையான நிறத்தில் உள்ளது.
கை ரேகை சென்ஸர் மட்டும் பிரச்சனையாக உள்ளது. ஏனைய அம்சங்கள் சிறப்பு.
கடந்த 4 மாதங்களாக இந்த போனை பாவிக்கின்றேன், கமெரா அந்தளவுக்கு இல்லை. வேலை செய்து கொண்டிருக்கும் போதே, சில சமயங்களில் போன் Lock ஆகின்றது. Notification சில சமயங்களில் ஒலி எழுப்பாமல் வருகின்றது. போனின் ஒலி அளவு உச்சத்திற்கு இருக்கும் போதும் இப்பிரச்சனை காணப்படுகின்றது. Reminder கூட சில நேரங்களில் வேலை செய்வதில்லை. முதன்முறையாக நான் Oppo போனினை பாவிக்கின்றேன்.ஆனால், எனது அனுபவம் ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது.
இவ்வாறு நல்லது கெட்டதுகளை பிரபலமான கைபேசி திறனாய்வு இணையத் தளமான www.gsmarena.com வில் பயனர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
Oppo f15 full specification
இறுதியாக இக்கைபேசியின் தொழில்நுட்ப அம்சங்களை நோக்குவோம்.
Device Details
Display | 6.4 Inches, AMOLED Capacitive |
---|---|
Audio | Dolby |
Internal Storage | 128 GB |
Network | LTE/GSM |
Connectivity | Bluetooth/USB/NFC |
Camera | Rear Camera – 48MP+8MP+2MP+2MP Front Camera – 16MP |