இலங்கையில் Huawei nova 7i
Huawei Phone
ஹுவே தொலைபேசிகள்! (தமிழ் சரியோ தெரியவில்லை) இலங்கை போன்ற நாடுகளில் Huawei Phone கள் மக்களால் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. அதிலும் தற்போது Huawei nova 7i திறன்பேசிகளுக்கு இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு காணப்படுகின்றது.
அதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை,
- Huawei Phone Price
- மற்றும் அதன் உள்ளடக்கங்கள்
- மற்றும் வடிவங்கள்
மக்களை பெரிதும் கவர்ந்திருக்கின்றன என்றால் மிகையில்லை.
இன்றைய கால கட்டத்தில் Huawei Phone களில்,
- Huawei Y6p
- Huawei Y7p
- Huawei Nova 5t
- Huawei Nova 7i
என்பன இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதை காணக்கிடைக்கின்றது.
இவ்வருட ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட Huawei Nova 7i போனானது, 48MP கமரா திறனுடனும் 4200mA
h Battery யுடனும் காணப்படுகின்றது. 169 கிராம் நிறையுடன் காணப்படுகின்ற இந்த மொபைலினை 3 வித்தியாசமான நிறங்களில் Huawei வெளியிட்டுள்ளது.
இந்த Mobile இன் Features and Price இனை நாம் இனி ஆராய்வோம்.
Huawei Nova 7i Phone price in sri lanka
மேற்கூறிய Huawei போன்கள் தற்போது இலங்கையின் மொபைல் சந்தைகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள போதிலும் Huawei Phone Price வெவ்வேறு இடங்களில் சிற்சில வேறுபாடுகளுடனே விற்பனை செய்யப்படுகின்றன. தற்போதைய கொரோனா நிலமை காரணமாக சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடும் இவ்விலை வேறுபாட்டுக்கு காரணமாக இருக்கலாம்.
Singer, Abans மற்றும் Softlogic போன்ற இலத்திரனியல் பெரு அங்காடிகள் மட்டுமல்லாது Daraz, Wasi.lk போன்ற E Commerce தளங்களும் வெவ்வேறு விலைகளில் இதனை விற்பனை செய்கின்றன.
இந்த மொபைலின் விலையானது இலங்கையின் ஒன்லைன் சந்தையில் பின்வருமாறு காணப்படுகின்றது.
Price Review இனை நோக்குகின்ற போது இலங்கையில் காணப்படுகின்ற பிரபல இணையத்தளங்களுக்கிடையில் விலை வித்தியாசம் காணப்படுவதை அவதானிக்கலாம். இந்த விலை வித்தியாசங்களுக்கான காரணாங்கள் என்ன என்பதை அவர்களின் இணையத்தளங்களுக்கு சென்று ஆராய்ந்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
சர்வதேசரீதியில் இந்த மொடல் கையடக்க தொலைபேசிற்கு பயனர்கள் வழங்கியுள்ள மதிப்பீடுகளில் சிலவற்றை, அதாவது Review களை தமிழில் (huawei nova 7i review in tamil) தருகின்றேன்.
ஒரு பயனர்,
பற்றரியின் தாங்குதிறன் அருமை! சார்ஜ் ஆகின்ற நேரம் குறைவு, மிக வேகமாக சார்ஜ் பண்ணக் கூடியதாக உள்ளது. இதனால், Browsing time மற்றும் Video Streaming என்பவற்றை அதிக நேரம் பார்க்கலாம்.
டிஸ்பிளே தொடர்பாக திருப்தி இல்லை. மற்றும் தொடுதிறனினை உணர்கின்ற நேர அளவு குறிப்பிடும் படியாக இல்லை.
கமெரா பற்றி நோக்குகின்ற போது, சிறப்பாக இல்லாவிட்டாலும் கொடுக்கும் பணத்திற்கு திருப்தியாக உள்ளது
எனக் குறிப்பிடுகின்றார்.
சில இணையத்தளங்கள், அமெரிக்காவில் சீன அமெரிக்க வர்த்தக போர் காரணமாக சீனப் பொருட்களுக்கு காணப்படுகின்ற தடை காரணமாக, Huawei Nova 7i இல் Google Playstore இனை Install செய்வதில் தடங்கல்கள் காணப்படுவதாக பயனர்கள் குறைப்பட்டுக் கொள்கின்றனர்.
ஆனாலும், எமது நாட்டில் இப்பிரச்சனை இல்லை என்பதால், உள்ள ஸ்மார்ட் போன்களில் கொடுக்கும் பணத்திற்கு உச்சபட்ச பயனை பெற இது போன்ற போன்களே உதவுகின்றன.
Features
- Body: Front glass, plastic frame and back, 183g.
- Display: 6.4″ LTPS IPS LCD, 1,080 x 2,310px, 19:9 aspect ratio, 398ppi.
- Rear camera: Primary – 48MP, 26mm, f/1.8; PDAF; Ultrawide – 8MP, 13mm, fixed focus, f/2.4; Macro – 2MP, f/2.4, fixed focus; Depth sensor – 2MP. Video recording up to 1080p@30fps.
- Front camera: 16MP, f/2.0; fixed focus lens.
- OS/Software: Android 10, EMUI 10. No Google Services. Widevine CDM L3 support.
- Chipset: Kirin 810: octa-core CPU (2×2.27 GHz Cortex-A76 & 6×1.88 GHz Cortex-A55); Mali-G52 MP6 GPU.
- Memory: 6GB of RAM; 128GB storage; NV card slot (hybrid).
- Battery: 4,200mAh, Huawei 40W SuperCharge.
- Connectivity: Dual SIM; Wi-Fi a/b/g/n/ac, Bluetooth 5.0; NFC; USB-C, 3.5mm jack.
- Misc: Fingerprint reader (side-mounted)