Covid-19 – Corona வும் Conspiracy களும்

Spread the love

Covid 19 – Corona வும் Conspiracy களும்

கொரோனா!

உலகையே ஆட்டிப்படைக்கும் ஒற்றைச் சொல்!  Covid-19 என நாமகரணம் சூட்டப்பட்டாலும் Corona தான் அச்சுறுத்தும் பெயராக மாறிவிட்டது.

இதுவரைக்கும் (24 மார்ச்)  பதினான்காயிரம் உயிர்களைக் காவு கொண்டு மூன்று லட்சம் நபர்களை பீடித்துள்ள இந்த வைரஸ், 180 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார தாபனம் தெரிவிக்கின்றது.

இலங்கையில் தற்போதுள்ள நிலவரத்தின் படி 82 பேர் இனங்காணப்பட்டு இன்னும் 200 க்கு அதிகமானவர்கள் கண்காணிப்பிலும் இருக்கின்றனர். இப்படி இதன் அச்சமூட்டும் வியாபகமும் மரணங்களும் உலகையே மிரள வைத்துக் கொண்டிருக்க, நாடுகள் இதைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகின்றன.covid 19 conspiracy

இது ஒரு பக்கம் என்றால், இந்த Covid-19 (Corona) தொடர்பான conspiracy theories – புனைவுகள் ( தமிழ்ப்படுத்தல் சரியா??) இன்னொரு பக்கம் வைரசினை விட வேகமாக பரவிக் கொண்டு வருகின்றன. சமூக வலைத்தளங்களின் உதவியுடன் இதன் பரவல் ஜாம் ஜாம் என நடக்கின்றது. நம்புகின்ற conspiracy களை வைத்து தமக்கேற்ற வகையில் மெருகூட்டி வெளியிட்டும் வருகின்றனர் conspiracy கோட்ப்பாட்டாளார்கள்.

American Journal of Biomedical Science & Research இல் இது தொடர்பான ஆய்வினை மேற்கொண்டிருக்கும் அமீரகத்தில் அமைந்துள்ள கனேடிய பல்கலைக்கழக ஆய்வாளார்கள் Ghada M Abaido and Aseel A Takshe ஆகியோர் தமது ஆய்வுச் சுருக்கக் கட்டுரை ஒன்றில், இதன் எதிர்விளைவுகள் தொடர்பில் எச்சரிக்கின்றனர்.

“பரவுகின்ற conspiracy களினை நம்புகின்றவர்கள் அரசினால் மேற்கொள்ளப்படுகின்ற முன்காப்பு நடவடிக்கைகளையோ, நோய் தொடர்பான விழிப்புணர்வினையோ சட்டை செய்யாமல் புறக்கணிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் இவ்வைரஸ் பரம்பல் இன்னும் வேகமாக பரவ வாய்ப்புள்ளது. இது துரதிஷ்டவசமானது.”

எனக் குறிப்பிடுகின்றனர்.

தற்போது சமூக வலைத்தள்ங்களில் விரவிக்கிடக்கும் கொரோனா தொடர்பான conspiracy களை நோக்குகின்ற போது, இது உண்மை என்றே தோன்றுகின்றது. அதிலும், பகிரப்படும் conspiracy புனைவுகளை எந்தவொரு ஆய்வுக்குமுட்படுத்தாமல் அப்படியே நம்புவதோடு, அதை வாய்வழிச் செய்தியாக பரப்புகின்ற செயற்பாடும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதை அவதானிக்கலாம்.

உண்மையில், உலகில் நடைபெற்ற பல்வேரு நிகழ்வுகளுக்கும் பின்னால் இவ்வாறான conspiracy களை உருவாக்கும் கோட்பாட்டாளர்களும் கோட்பாடுகளும் மலிந்தே காணப்படுகின்றன. சோகம் என்னவென்றால், இன்னும் அவை நிரூபிக்கப்படாமல் conspiracy – புனைவுகளாகவே இன்னும் உள்ளதுதான்.

சரி!

 

பிரபலமான புனைவுகள்

 

Covid-19 தொடர்பாக தற்போது இணைய உலகில் உலாவரும் conspiracy களில் சிலவற்றினையும் அவற்றின் உண்மைத் தன்மையினையும் சாத்தியத்தினையும் பற்றி பார்ப்போம்.

Covid-19 – Corona வைரசானது விண்வெளியிலிருந்து புவியில் வீழ்ந்த விண்கல் (Meteorite) மூலமாக பரவியிருக்க இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது ( Panspermia என இவ் எடுகோள் அழைக்கப்படுகின்றது.)கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் வட கிழக்கு சீனாவில் விழுந்த விண்கல்லின் மூலம் இந்த வைரசானது பரவி இருக்கலாம் என்ற கருத்து முன் வைக்கப்பட்டாலும், இதனை உயிரியல் விஞ்ஞானிகள் ஆதாரபூர்வமாக மறுக்கின்றனர்.

அதாவது, Covid-19 – Corona வைரசானது, SARS மற்றும் MERS வைரசுகளினை ஒத்த இயல்புகளுடன் காணப்படுவதுடன் மேலும் மேற்கூறிய இரு வைரஸுகள் மிருகங்களில் இருந்து மனிதனுக்கு எவ்வாறு கடத்தப்பட்டதோ அதே போன்றுதான் Covid-19 – Corona வும் கடத்தப்பட்டுள்ளது. மேலும், Covid-19 – Corona வைரஸானது 1000°C வெப்பநிலையில் உள்ள விண்கல்லில் வாழச் சாத்தியமில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர்.

உலகில் தற்போது புழக்கத்தில் உள்ள 4G  தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தினைத் தொடர்ந்து 5G தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. Covid-19 என்பது வைரஸல்ல! அது 5G தொலைத் தொடர்பு கோபுரங்களினால் ஏற்படுகின்ற தொலைபேசி அலைக்கற்றைகள் மூலம் உண்டாகின்ற மரணங்கள் மற்றும் உடல் உபாதைகள் என ஒரு conspiracy கோட்பாடு – Twitter இல் 4.2 மில்லியன் Followers இனைக் கொண்டுள்ள Keri Hilson எனும் அமேரிக்க பாடகரினால் முதலில் முன்வைக்கப்பட்டது. பின்னர் அவரால் இடப்பட்ட Tweet  அழிக்கப்பட்டாலும் வேறு சிலர் இதை பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பரப்ப முனைந்து கொண்டிருக்கின்றனர். உரிய இந்த தகவலை பேஸ்புக் பொய்யான செய்தி என அடையாளப்படுத்தி உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

5G தொழில்நுட்பமானது இன்னும் அனைத்து நாடுகளுக்கும் அறிமுகமாகவில்லை. அதோடு, குறித்த தொழில்நுட்பமானது குறுகிய தூர அலைவீச்சுக்களை கொண்டே காணப்படுவதால், இங்கு சொல்லப்படுகின்ற conspiracy கோட்பாடு பொய்த்துப்போகின்றது.

இதே போல இன்னும் பல புனைவுகள் இணையம் எங்கும் உலாவுகின்றன. கொரோனாவுக்கு மாட்டு மூத்திரம் மருந்து; தேங்காய் எண்ணை

Predictions and Prophecies about End of the World

இந்நோயினைத் தீர்க்கும்; கைகளைச் சுத்தப்படுத்தும் Hand Sanitizer நிறுவனங்கள் பரப்பி விட்ட நோய் இது, என பல்வேறு புனைவுகள் உலவுகின்றன.

ஆச்சரியமூட்டும் எதிர்வுகூறல்கள்

இவற்றை எல்லாம் தாண்டி, இந்த Covid-19 பரம்பல் தொடர்பான சில எதிர்வுகூறல்கள் (Prophecy)தொடர்பில் தற்போது இணையவாசிகளிடையே சிலாகிக்கப்படுவதையும் காணக்கூடியதாக உள்ளது. அதில் முக்கியமானது – 2008 இல் Psychic Sylvia Browne எழுதிய End of Days: Predictions and Prophecies about End of the World என்ற நூலில் ,

“2020 னை அண்மித்த காலப்பகுதியில் குளிர்காய்ச்சல் போன்ற நோய் (pneumonia-like illness) ஒன்று உலகம் முழுவதும் பரவும் ………”

“In around 2020 a severe pneumonia-like illness will spread throughout the globe, attacking the lungs and the bronchial tubes and resisting all known treatments. Almost more baffling than the illness itself will be the fact that it will suddenly vanish as quickly as it arrived, attach again 10 years later, and then disappear completely.”

எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நூல் எழுதப்பட்ட 2008 காலப்பகுதி Sars வைரசின் தாக்கத்திற்கு பிற்பட்ட காலப்பகுதி என்பதால், அதனை ஊகித்து அவர் எழுதி இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. உரிய இந்நூல் தொடர்பாக அமேஸானில் வாசகர்கள் எதிர்மறையான விமர்சனத்தினையே இட்டுள்ளதையும் இங்கு கவனிக்க வேண்டியுள்ளது.

 

சீன அமெரிக்க பொருளாதார யுத்தம்

 

இவை அனைத்தையும் தாண்டி, பரவலாக பேசப்படும் மற்றொரு விடயம், அமெரிக்க – சீனா பொருளாதார யுத்தம். இந்த மறைமுக முரண்பாட்டின் மற்றொரு வடிவம்தான் இந்த வைரசின் பரவல் எனும் குற்றச்சாட்டு இரு தரப்பிலிருந்தும் மறு தரப்பை நோக்கி  சொல்லப்படுகின்றது.

Covid-19 – Corona ஒரு உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாக உயர்மட்டத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளும் நம்புகின்றனர். அமெரிக்க அரச அதிபர் டொனாட் ட்ரம்ப் – Covid-19 – Corona வைரசை ‘Chinese Virus’ என்றே தனது அனைத்து ஊடக சந்திப்புக்கள், அறிக்கைகளிலும் குறிப்பிடுகின்றார். இது குறித்த ஒரு சமூகத்திற்கு எதிரான பாகுபாட்டினை (Discrimination) ஊக்குவிப்பதாக அமையும் என பல்வேறு தரப்பும் தமது அதிருப்தியை வெளியிட்டாலும், அவர் – குறித்த வைரஸ் சீனாவிலிருந்து தோன்றியதால் ‘Chinese Virus’ என அழைக்கின்றேன்; வேறு எந்த நோக்கமுமில்லை எனக் கூறுகின்றார். ஆனாலும், இச்செய்கையினால், அமெரிக்காவில், ஆசிய – அமெரிக்கர்களின் நிலையினை இக்கட்டிற்குள் தள்ளியுள்ளதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன.

மறுபக்கத்தில் சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Zhao Lijian – கொரோனா வைரசானது அமெரிக்க இராணுவத்தினால், வூஹான் பிரதேசத்திற்கு கொண்டுவரப்பட்டது என தனது ட்விட்டர் தளத்தில் குற்றஞ்சாட்டி இருந்தார். இது தொடர்பான தனது மறுப்பினை வெளியிட்ட அமெரிக்கா, அமெரிக்காவிற்கான சீன தூதுவரினை அழைத்து தமது கண்டனத்தினையும் வெளியிட்டது.

Covid-19 – Corona தொடர்பில் உயிரபாயம் ஒரு பக்கம் என்றால், மறுபக்கத்தில் இவ்வாறான சர்ச்சைகளும் புனைவுகளும் இன்னொரு பக்கத்தில் கொட்டிக் கிடக்கின்றன.மேற்குறிப்பிட்ட விடயங்களை முற்றுமுழுதாக பொய் அல்லது புனைவு என ஒதுக்கிவிடவும் முடியாது.  உரிய அனுமானங்கள் / எடுகோள்களுக்கு வலுச்சேர்க்கின்ற ஆதாரங்கள் கிடைக்கின்ற வரையில் அவை Conspiracy Theory களாகவே இருக்கும்.

பகிர:

Leave a Reply