அப்போ உம்மா வாப்பா, இப்ப ஊரா?

Spread the love

பள்ளிக்காலங்களில் போட்டி நிகழ்ச்சி என்றால் எங்களோடு அவனும் ஒட்டிக் கொள்வான்.. உதிரியாக சேர்ந்து கொள்ளும் அவனை சேர்த்துக் கொண்டு அஸ் ஸிறாஜ் ஜுக்கோ, சென்ட்ரல் கொலிஜுக்கோ செல்வதில் அநேகமாக எங்களுக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இருப்பதில்லை. காரணம் அவன் கையில் புரளும் காசுதான். 5 ரூபாவே ஆடம்பரமாக இருந்த காலத்தில் அவனிடம் அப்போதெல்லாம் 20 ரூபாய் எல்லாம் சர்வ சாதாரணமாய் புழங்கும்.

அந்தளவுக்கு செலவழிக்க கொடுக்க அவனின் பெற்றோர் சொல்லிக்கொள்ளும் படி வசதியானவர்கள் இல்லைதான்.. ஆனாலும் அவனுக்கு அவர்களே கொடுத்துக் கொண்டிருந்தனர்.. ஒரே காரணம் : படிக்கிற பிள்ளை.!

அதிலும் இவ்வாறான போட்டி நாட்களில் என்றால் அது 50 ரூபாய் வரை உயர்ந்திருக்கும். 2 ரூபாய்க்கே கணக்கு சொல்ல வேண்டிய துர்ப்பாக்கியசாலிகளுக்கு அவன் ஒரு கோடீஸ்வரனாக தெரிந்தான்.

ஒரே நாளில் அந்தக்காசை தண்ணீரை இறைப்பான்.. எப்படியோ ஒரு ரொட்டி இல்லை என்றால் ஒரு ஐஸ்பழம் நமக்கும் கிட்டும். எந்த போட்டி நிகழ்ச்சிகளிலும் அவன் இல்லாத போதும்.எதற்காக வருகின்றான்.. ஏன் இப்படி செலவழிக்கின்றான் என்பது புதிராகவே எனக்கிருந்தது.

குடை கேட்டு அடம்பிடித்து அழுது மன்றாடி கடைசியாக வாங்கித் தருவதாக வாப்பா வாக்களித்து ஒரு கிழமையின் பின்னர் ஒரு மழை நாளில் குடை வாங்க வாப்பா மார்க்கட்டுக்கு அழைத்துச் சென்றார். அப்போது எனக்கு தெரியாது அவனின் 50 ரூபாய்க்கான புதிர் அன்று அவிழும் என..

கடைக்குள் நுழைந்ததும், அவனின் தந்தைதான் எதிரே..

” ஆ! சேர் சொகமா? என்ன செய்றயள்..? மகனோட என்ன இஞ்சால…”உம்மா உம்மாச்சி உம்மா உம்மா உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை பாடல் உம்மா meaning in english உம்மா உம்மம்மா சாங் உம்மால் மட்டும் தான் முடியும் உம்மா கவிதை உம்மா உம்மா பாடல் உம்மாச்சி fm

வாப்பா முறுவலித்தார்.

” போன கெழம தமிழ் மொழித் தின போட்டியாம் ஒங்குட மகனும் வந்தாம் என்டு மகன் சொன்னார்..” என்றார் பெருமிதமாக..

மெல்ல மர்மம் துலங்குவது போல தோன்றியது எனக்கு அடப்பாவி, இதுதானா, அந்த 50 ரூபாய்க்கான பதில்.. ஒன்றிலும் பங்குபற்றாமல், வீட்டில் போட்டிக்கு செல்கின்றேன் என உம்மா வாப்பாவை ஏமாற்றிக் கொண்டா இருக்கின்றான்.. கொஞ்சம் குற்ற உணர்ச்சியுடன் அவனின் மீது ஆத்திரமாக இருந்தது.

அந்தச் சம்பவத்தின் பின்னர், அவனுடனான தொடர்புகளை குறைத்துக் கொண்டேன். அவனுக்கு அது தொடர்பில் எந்த பிரச்சனையும் இருந்ததில்லை.. அவனும் தொடர்ந்து அதே 50 ரூபாய் களை இறைத்துக் கொண்டுதான் இருந்தான். நான் அவனது ரொட்டி ஐஸ் பழத்தை தியாகம் செய்து விட்டேன்..

——

காலம் உருண்டு, அவன் நினைவிலே இல்லாத ஒரு நாளில் விடுமுறைக்காக ஊர் சென்றிருந்தேன்..
தேர்தல் முடிந்திருந்த காலம் அது..

தெருமுனையில், பாசி படர்ந்த ஒரு மதில் சுவரில் போஸ்டர் ஒன்றில் சிரித்துக் கொண்டிருந்த அவனது புகைப்படத்தைக் கண்டதும், ஆச்சரியமாய் இருந்தது. வயதுக்கேற்ற முதிர்ச்சி முகத்தில் தெரியவில்லை. தாடி வைத்திருந்தான்.. அதே வெடவெட ஒல்லி உடம்பு.. ஓ! அரசியல்வாதியா ! சிரித்துக் கொண்டே வந்துவிட்டேன்..

பேச்சுவாக்கில் உம்மா விடம் விசாரித்தேன்..
“ஓ அவனா! ஒனக்கு கூட படிச்சவன் எலா? … இந்த எலக்ஸன்ல வெண்டு, இப்ப கௌன்ஸிலர்.. ” என்றார்..

“… ம்.. அப்போ உம்மா வாப்பா, இப்ப ஊரா? ” என முனகிக் கொண்டேன்..

உம்மா விளங்காமல், ” என்ன ?” என்றார்..

தலையை மட்டும் ஆட்டிவிட்டு நகர்ந்தேன்…

( யாவும் கற்பனை )

பகிர:

Leave a Reply