சீதனம் : Psychopath களின் போலிப் புரட்சி!

Spread the love

சீதனம் : Psychopath களின் போலிப் புரட்சி!
————————————————————————–

இது நமது ஆதம்பாவா!

 

அவனுக்கு இரண்டு தங்கைகள்..! வாப்பாவிடம் சொத்து என்று எதுவும் இல்லை. அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் குறைவான மாதச் சம்பளக்காரர்.! தனது குழந்தைகளை படிப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவரிடம் நிரம்பக்காணப்பட்டது. நமது ஆதமும் அவரின் எதிர்பார்ப்பினை வீணாக்கவில்லை வீட்டுக்குபொருளாதார சுமையினை இன்னும் கூட்டாத கற்கைகளை தேர்ந்தெடுத்துப் படித்திருந்தான். தங்கைகளும் போதுமான அளவுக்கு படித்திருந்தனர்.

இரு அறைகளில் இருந்த வீட்டை திருத்த வேண்டும். இற்றுப்போய் அனைத்தையும் துறந்து நிற்கும் வேலிக்குப் பதில் மதில் கட்ட வேண்டும் போன்ற கனவுகள் ஆதத்திடம் படிக்கும் காலத்தில் இருந்து வந்த லட்சியங்கள் என்பதால் அதை அடைய அவனுக்கு இருந்த ஒரே தெரிவு – வெளிநாடு! வாப்பாவின் மாதச் சம்பளம் கொண்டு மாதங்கடத்தும் வித்தையில் இருந்த அயர்ச்சி நமது ஆதத்தினை அரச தொழில் பக்கம் தலைவைக்க விடவில்லை. வெளிநாடெல்லாம் போக வேண்டியதில்லை என்ற வாப்பாவின் தடை எல்லாம் தாண்டி விமானமேறிவிட்டான்.

வேலையும் கிடைத்து.. வீடும் ஓரளவுக்கு முடிந்து மதிலும் கட்டி முடிந்த தறுவாயில் மூத்த தங்கையின் திருமணத்தைப் பற்றிய பேச்சுக்கள் தலையெடுக்க ஆரம்பித்திருந்தன. தனது மகளுக்கான‌ மாப்பிள்ளை விடயத்தில் ஒரு நடுத்தர தாய் தந்தையரின் சராசரி எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும் – மகளை நல்லபடி பார்த்துக் கொள்ளக் கூடிய ஒழுக்கமான ஒருவன்.!

கிடைத்த மருமகனுக்கு 2 ராத்தாக்களும் ஒரு தங்கையும்.. வீடுகள் கட்டிக் களைத்திருந்த அவரிடம் இருந்த ஒரே கோரிக்கை – வீடொன்று! கோரிக்கையில் தவறில்லையே.. சகோதரிகளுக்காக வீடுகளை கட்டி களைத்த ஒருவனிடமிருந்து வருகின்ற நியாயமான கோரிக்கை அது! தனது மச்சான்கள் அவரிடம் வைத்த வீட்டுக் கோரிக்கையும் இப்படித்தான் தொடங்கி இருக்கும்.! அவர்கள் எத்தனை வீடு கட்டிக் களைத்திருந்தனரோ யாரறிவார்?

அதனால்
தங்கையின் வாழ்வுக்காக, பெற்றோருக்கும் சேர்த்து கட்டிய முதல் வீட்டை கொடுத்துவிட்டான்.! இதில் அவன் கண்ட நியாயம் எந்தவொரு கேள்விக்கும் உட்படாதது.! இது சீதனமா எனக் கேட்டால், ஆதம் இல்லை எனத்தான் சொல்வான்.. அவனது மச்சானை குற்றம் சுமத்த அவன் தயாராக இல்லை. இது ஒரு சமூகக் குற்றம். சங்கிலித் தொடர் போல நீண்டு செல்லும் இதன் தொடர்ச்சியினை உடைக்க இயலாத இயலாமையின் மீதே அவனது கை நீளும்.!சீதனம் பற்றி இஸ்லாம் சீதனம் கவிதை சீதனம் என்றால் என்ன சீதனம் translate english சீதனம் சீதனம் mp3 சாங் டவுன்லோட் சீதனம் படம் சீதனம் பொருள் சீதனம் சாங் சீதனம் mp3

மூத்த தங்கையின் திருமணம் முடிந்த கையோடு, தனது இரண்டாவது தங்கைக்கென ஒரு வீடு தேவை என்பதையும் தாண்டி தன் பெற்றோருக்கென அடுத்த வீட்டுக்கான அவனது பொறுப்பு ஆரம்பிக்கின்றது. ஆதம் அதையும் செய்து முடிக்கின்ற தருணமொன்றில் அவனது திருமணம் தொடர்பில் பெற்றோரின் கவனம் திரும்புகின்றது. இப்போது இரண்டு வீடு கட்டி களைத்த அவனது கோரிக்கையும் அதே வீடே..!

இது சீதனமல்ல

 

ஆதத்தின் பார்வையில் இது சீதனமல்ல. அவனுக்கான ஒன்றையும் பெறுவதற்கான அவகாசத்தை இச்சமூகத்தின் வழக்காறு வழங்கவில்லை. அதற்காக அவன் தன்னிடம் வீடு எதிர்பார்த்த அவனது தங்கைகளின் கணவன்மார்களை அவன் குற்றப்படுத்தலாமா? இல்லை. அவர்களை நோக்கி இவன் விரல் நீட்டினால், அவர்கள் – அவர்களது தங்கைகளின் கணவன்மார்களை நோக்கி நீட்டுவர். இது முடிவிலியாக சங்கிலித் தொடர் போல‌ நீண்டு கொண்டே செல்லும்.

இங்குள்ள உபதேசகர்கள் மற்றும் புரட்சி முடி புடுங்குபவர்கள் கூவுவது போல சீதனம் ஏனைய பஞ்சமா பாதகங்களை விட கொடிய ஒன்று. சரி! அதையே ஒத்துக் கொள்ளுவோம்.. ! அப்படியென்றால், நாலு ஹதீஸையும், ரெண்டு வீடியோவும், ஐந்தாறு சம்பவங்களையும் இங்கு கொண்டு வந்து கடை விரிப்பதன் மூலம் எதை எதிர்பார்க்கின்றீர்கள்?
இதைப்பார்த்து உடனே சமூக மாற்றம் நிகழும் என்றா? ஈசாப் நீதிக்கதைகள் போல நீதி போதித்து அதில் படிப்பினை பெற்று திருந்திய சமூகம் எங்குள்ளது? ” சொல்வதெல்லாம் உண்மை ” டீவி தொடர் போல அடுத்தவனின் டையரி படிக்கின்ற ஒரு சுவாரசியத்தைத் தவிர வேறு எதுவும் அதிலிருந்து கிடைக்காது.

ஊரில் நடைபெறுகின்ற இத்திருமண பேரங்களில், 10% சொத்துக்கு ஆசைப்பட்டு நடைபெறுகின்றது என வைத்துக் கொண்டாலும் 90% மானவை மேற்சொன்ன சங்கிலித் தொடரினாலேயே உண்டாகின்றது.

சந்தர்ப்ப சூழ்நிலைகள் நம்மவர்களை அதற்குள் தள்ளிவிடுகின்றது. அச்சங்கிலியினை உடைக்க வேண்டுமானால், களப்பணி என்பதை தாண்டி, இச்சங்கிலித் தொடரினுள் அகப்படாத இளைஞர்களின் முன்னெடுப்பு அவசியமாகின்றது.

அது அவர்களின் சுய ஒழுக்கத்தின் பாற்பட்டது. தானாக முன் வந்து அதை அவர்கள் செய்யவேண்டும். இது தனிநபர் சார்ந்த ஒரு மாற்றமாகவே நிகழ வேண்டுமே தவிர, இங்கே கூவித் திரியும் அரைவேக்காடுகள் கூவுவது போல நிகழச் சாத்தியமே இல்லை.! இத்தனிநபர்களின் மாற்றம் சமூக மாற்றமாக தெரிய நீண்ட காலம் எடுக்கலாம்.

 

சமூக ஊடகங்களின் பங்கு

 

சமூக ஊடகங்களை சமூக மாற்றத்திற்கான ஓர் கருவியாக மட்டுமே கொள்ளலாமே தவிர இங்கு அது நிகழ வேண்டும் என எதிர்பார்க்கமுடியாது. அது நிகழ வேண்டியது ஊரில், அதற்கான கள வேலைகள் அங்குதான் நிகழ வேண்டும். இங்கு குறிப்பிடும் சமூக மற்றும் தனி நபர் சிந்தனை மாற்றமென்பது சீதனம் என்ற ஒன்றுக்காக மட்டுமல்ல இன்னும் நம்மிடையே உள்ள பல்வேறான நுண்ணிய சமூகச் சிக்கல்கள் தொடர்பிலும்தான். பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற தொடக்கத்தில் இன்னும் நாம் நின்று கொண்டிருப்பதாலேயே இங்குள்ள கீபோர்ட் புரட்சியாளர்கள் தங்களது சுயசொறிதலுக்கு அதை பயன்படுத்திக் கொள்கின்றனர். தனிநபர் சிந்தனை மாற்றத்தை விதைக்க கூடிய இயலுமை இங்குள்ள கீபோர்ட் புரட்சியாளர்களிடம் உள்ளதா என்றால் எல்லை என்பதே எனது பதில். ஏனெனில் இங்குள்ள Psychopath களின் நோக்கம் சமூக மாற்றம் என்பதல்ல. தன்னை முன்னிறுத்த வேண்டிய அவசரம் மட்டுமே. அதற்கான பணிகளை மட்டுமே ஜரூராக செய்து கொண்டிருக்கின்றனர்.

இறுதியாக, சீதனம் மட்டுமல்ல ஊரில் உள்ள பல்வேறு சமூகச் சிக்கல்களுக்கும் நிச்சயமாக தீர்வு காணவேண்டியது அவசியம். ஆனால் அதற்கான வழிமுறைகளும் வழிகாட்டுதல்களும் உரிய இடங்களிலிருந்து வரவேண்டியது அவசியம். அவ்வாறு வரவில்லை என்றால் அதற்கான அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டியது அதைவிட அவசியம். உரிய இடத்திலிருந்து எதுவும் வரவில்லை என்பதற்காக‌ நாமும் வாளாவிருப்போமானால் குட்டி நாய்களின் குரைப்பு அதிகரித்துக் கொண்டே செல்லுமே ஒழிய அது குறையாது. அது நாள்பட நாள்பட தன்னையே சட்டாம்பிள்ளையாக எண்ணிக் கொள்ளும் காலமும் கனியலாம். ஜாக்கிரதை!

“சொல்வதெல்லாம் உண்மை” லக்ஷ்மிகள்

 

இறுதியாக,

● தான் ஓடி திருமணம் முடித்த இழி செயலை மறைக்க சீதன எதிர்ப்பினை கையில் எடுத்துள்ள போலி புரட்சியாளர்கள்.

● தன்னை முன்னிலைப்படுத்த, தனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் என எண்ணிக்கொண்டு இங்கு உளறும் ஆர்வக் கோளாறுகள்.

சீதனத்தை எதிர்ப்பதால் எனக்கு புனிதர் பட்டம் கிடைத்துவிட்டது என தானே தன்னை புகழ்ந்துகொண்டு நடுநிலையாக பேசமுனைகின்றவர்களிடம் வம்பிளுக்கும் மூடர்கள்.

● அடிநுனி எதுவென்று புரியாமல் கூடச் சேர்ந்து ஒத்து ஊதும் அல்லக்கை அன்பர்கள்.

● “நான்” என்பதையே எப்போதும் முன்னிறுத்தும் Psychopath கள்.

போன்ற ஜீவன்கள் தங்களை ஒரு தரம் மீள் பரிசீலனை செய்துகொள்ள ஒரு தரம் வேண்டிக் கொள்வதோடு,

இவர்கள் இங்கு ஒப்பாரி சொல்வது போல நமது சமூகம் ஒன்றும்அறியாமையில் உழலவில்லை. பிச்சைக்காரனுக்கு தனது புண் ஆறுவது பிடிக்காது அதுபோலத்தான் இங்குள்ள Psychopath களும்! ஊர் கெட்டுவிட்டது எனத் தொடர்ந்து கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தால் மட்டுமே தங்களை புரட்சி என்ற பெயரில் அவர்கள் முன்னிலைப்படுத்திக் கொள்ளலாம்.

ஆகவே, தயவு செய்து இங்குள்ள கூட்டத்திடம் தீர்வினை எதிர்பார்க்காதீர்கள்.
“சொல்வதெல்லாம் உண்மை” லக்ஷ்மி தீர்வினை சொல்லமாட்டார், அடுத்தவனின் படுக்கையறை காட்சிகளை அழகாக விவரிக்க மட்டுமே அவருக்கு தெரியும்.

உண்மையில் நாம் இதைச் செய்ய வேண்டும் எனக் கருதினால் அதற்கான முன்னெடுப்புக்களை இதயசுத்தியுடன் மார்க்கப்பற்றுள்ள ஊரில் உள்ள இளைஞர்களே நீங்கள் தொடங்குங்கள். அல்லது அவ்வாறான முன்னெடுப்புக்கள் ஏதாவது நடைபெறுகின்றதென்றால் மிக்க மகிழ்ச்சி.

அதற்கான பங்களிப்புகளை இன்னும் இன்னும் உத்வேகப்படுத்துங்கள். கீபோர்ட் புரட்சியாளர்களிடம் எதையும் எதிர்பார்க்காதீர்கள்

பகிர:

Leave a Reply