மார்க்க தூண்கள்!

Spread the love

வீதிக்குள் இறங்கிய போதே, சத்தம் காதைப் பிளந்து கொண்டிருந்தது!

வீட்டிற்கு முன்னால் இருந்த வெறும் வளவில் புறஜக்டர் திரையில் , அகன்ற தாடியும் வார்த்தைகளில் எகத்தாளத்துடனும் மார்க்க அறிஞர் (!) ஒருவர் கத்திக் கொண்டிருந்தார். நான்கு வீதிகள் தாண்டியும் கேட்குமளவிற்கு சத்தம் அந்த இரவின் நிசப்தத்தை குலைத்தவாறு தொடர்ந்தது ஒரு வித அசூசை யினை உண்டு பண்ணினாலும், மார்க்க சொற்பொளிவு என்பதால் என்னையே சமாதானப்படுத்திக் கொண்டேன். ஆனாலும் முன்னால் இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துக்கும் குறைந்தவர்களுக்கு எதற்காக இவ்வளவு சத்தமும் ஆர்ப்பாட்டமும் இந்த பின்னிரவில் என்ற கேள்வி முன்னிற்க வண்டியினை முன்னால் வைத்து விட்டு வீட்டிற்குள் நுழைந்தேன்.

வீட்டில் கட்டு வேலைகள் நடந்து கொண்டிருந்ததால், ஒழுங்கின்றி கிடந்த திண்ணையில் உம்மா அசதியோடு தூங்க முயற்சித்துக் கொண்டிருந்தார். எங்கள் மதில் மேல் இருந்த மார்க்க சொற்பொழிவு ஸ்பீக்கர் அவரை அதற்கு அனுமதிக்காமல் அலறிக் கொண்டிருந்தது. பகல் முழுதும் வேலை செய்த அயர்வோடு கொஞ்சம் உறங்க முயற்சிக்கும் ஒரு வயதன அல்சர் நோயாளியை அலட்சியம் செய்து கொண்டிருந்தது அந்த பயான்.! உம்மாவை பார்க்க பரிதாபமாக இருந்தது.

மருமகளின் அலறல் திடீரென காதைக் கிழிக்க, என்ன என்பது போல பக்கத்தில் தங்கையின் வீட்டை எட்டிப் பார்த்தேன். அங்கும் அதே கதைதான்! 2 வயது மருமகள்! உறங்க அடம்பிடித்து உம்மாவுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தாள்!

அடுத்தவர்களின், நலன் பற்றிய அக்கறை இன்றி, காட்டுக் கத்தலுடன் போகின்ற பயான் மீதான கோபம் இன்னும் கூடியது. இருந்தும் பொறுமையுடன், நேரத்தைக் கடத்த.. ஒரு வழியாக அவர்களின் பிரசங்கமும் முடிய நானும் வெளியேற சரியாக இருந்தது.

இருந்த கடுப்பை மறைத்துக் கொண்டு,

“என்ன காக்கா! இந்த ரைம்ல பயான் எல்லாம் இவ்வளவு சத்தமா போடணுமா?” என்ற என்னை நோக்கினார் அந்த பார்ட்டியின் ஏரியா தூண்!

“ ஏன் அதுல என்ன?” என்ற அவரின் பதில் கேள்வியில் கொஞ்சம் காரம் இருந்ததை உணர முடிந்தது.

“இல்ல.. ஏலாத ஆக்கள், சின்ன புள்லயள் எல்லாம் தூங்கிற டைம் டிஸ்ட்டர்ப் தானே! கொஞ்சம் சத்தத்தையாவது குறைச்சிப் போட்டிருக்கலாம்.”

என்ற என்னிடம், நெருங்கி வந்தார் தூண்! அவருடன் இன்னும் சில தூண்களும் இப்போது ஒன்று கூடி இருந்தனர். அவர்களது உடல் மொழி என்னோடு வாதம் செய்ய தயாராகின்றனர் என்பதை தெளிவாக புரிய வைத்தது.

“இது முரண்பாடான கருத்து” என்றார் தனது அடங்க மறுக்கும் தாடியை நீவியபடி..

ஒன்றும் பேசாமல் நின்றிருந்தேன்.வஹாபிஸம் என்றால் என்ன வஹாபிஸம் meaning வஹாபிஸம் ff
தொடர்ச்சியாக, “ இந்த டைம்ல யாரும் படுக்கிற இல்லியே..” என்றார்.

இந்த விட்டேத்தியான பதில் என்னை உஷ்ணப்படுத்திவிட்டது.

“ எந்நேரம் யார் படுப்பாங்க எங்கிறத நாம தீர்மானிக்கிற இல்லியே! மார்க்கம் படிப்பிக்கிறதுக்கு முந்தி, நமக்கு கொஞ்சம் வேற அறிவு இருக்கணும். சும்மா மொக்கு வெளக்கம் கதைக்கப்போடா” என்றேன் கொஞ்சம் உஷ்ணமாக!

பதில் கொஞ்சம் சூடானதும், அதற்கென காத்திருந்தது போ, சைக்கிளில் இதுவரை நின்றிருந்த ஒரு மார்க்க காவலர், 
தூஷணங்களுடன்,

“ஆ! ஒன்ன மாதிரி எத்தின பேர பாத்திருக்கன். என்ன பிரச்சன படுத்திறியா என்றவாறு எகிற ஆரம்பிக்க”, அதுவரை அவர்கள் எதிர்பார்க்காத திருப்பம் ஒன்று நிகழ்ந்தது.

வண்டியில் இருந்த நான், திடீரென சைக்கிளை நிறுத்திவிட்டு சாறனை மடித்தவாறு இறங்கிவிட்டேன். இப்போது, தாடி தொப்பி வைத்த தூணின் தூஷணங்களை தூக்கிச்சாப்பிடும் அளவிற்கு அவ்விடம் நிரம்ப, 
“……….. மக்காள் , மார்க்கம் யாருக்கு படிப்பிக்காய்! வெளக்கம் கனக்க கதைக்காய் தானே நில்றா நான் பொலிஸ கூப்பிர்ரன் வா போவம், அங்க போய் நீ ஒன்ட வெளக்க .. சொல்லு “ என நான் எகிற, 
முந்தி எகிறிய மார்க்க தூண் இப்போது கப்சிப்.

அதற்குள் அக்கம்பக்கத்தவர்கள் குமிழ, மெதுவாக சமாதானக் கொடியினை பறக்க விட தயாரானார்கள் மார்க்க தூண்கள்.

“………….யாள் இதான் கடைசி, இனி இவடத்த இந்த ப்ரஜக்டர், பொக்ஸ் எல்லாம் கண்டா! எல்லாரும் உள்ளுக்கதான் படுக்கணுமோ!” என்ற உறுமலுடன் நான் வண்டியினை கிளப்ப.

தலையினை தொங்க போட்டவாறு நகரத் தொடங்கினர் மார்க்க தூண்கள்!

பகிர:

Tags: , ,

Leave a Reply