நிலமெல்லாம் ரத்தம்

Spread the love

” காஸா பிரச்சினைல இவனுகள் சத்தம் போடாம இருக்கானுகள் பாத்தாயா” அரட்டையில் பேச ஒன்றுமில்லாத சந்தர்ப்பத்தில் நண்பன் ஆரம்பித்தான்.

“ம்…” என்றிழுத்தேன்.

பலஸ்தீன் என்றாலே நெஞ்சு நிமிர்த்தி போருக்கு தயாராவன் போல இருந்தது அவனது முக பாவனை!

“இந்த இஸ்ரேலிய …….. களின் ப்றொடக்ட் கள மொத்த முஸ்லிம் சமூகமும் புறக்கணிச்சாலே போதும் எலா! அவனுகள்ர மொத்த எகொனமியும் டவுன் ஆகிடும்.” என்றவாறு மேலும் ஏதோ சொல்ல ஆரம்பிக்க, நான் கொஞ்சம் 
அயர்ச்சியுடன் அவனது பொங்கலை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.

“இந்த அரபு நாடுகள் அதை மொதல்ல செய்யணும்டா…” என்றவாறு மேலும் தொடர்ந்தான். இன்னும் விட்டால், பலஸ்தீனுக்கு போனாலும் போய்விடுவானோ என்ற பயத்துடன்.

“இதுல நெறைய அரசியலும் வரலாறும் இரிக்கிடா! நல்லா வெளங்கிற என்டா இந்த புத்தகத்தை படி, கிளியராகும்..” என்றவாறு , 
கட்டிலில் கிடந்த பா. ராகவனின் “நிலமெல்லாம் ரத்தம்” நூலை அவன் முன்னால் நீட்டினேன்.

தடித்த அந்நூலை அசுவாரசியத்துடன் வாங்கியவன், அதே அசுவாரசியத்துடன் அதை புரட்டிக் கொண்டே,

“ப்பா.. என்ன கட்ட புத்தகம்! இத எங்க வாசிக்க, நமக்கு ஏது மச்சான் டைம்? ஒனக்குத்தான் சரி நீயே வாசி..” வாயை கோணலாக்கிக் கொண்டே கூறினான்.

இவ்வளவும் தானா ஒன்ட பொங்கல், என எண்ணிக் கொண்டே, வேறு விடயங்களுக்கு தாவி, அறையினை விட்டு வெளியிறங்கி வீதியில் நடக்க ஆரம்பித்தோம்.

அந்தியாக இருந்தும் வெயில் சுட்டெரித்தது. முன்னால் இருந்த மோலு க்குள் நுழைந்த போது, பக்கத்தில் வந்து கொண்டிருந்தவனை காணவில்லை. சுற்று முற்றும் பார்க்க எத்தனித்த போது,

” மச்சான் ! இஞ்ச..” என்ற அவனது குரல் வந்த திக்கில் நோக்கினேன். 
நிலமெல்லாம் ரத்தம் புத்தகம் pdf நிலமெல்லாம் ரத்தம் நிலமெல்லாம் ரத்தம் புத்தகம் நிலமெல்லாம் இரத்தம் book நிலமெல்லாம் ரத்தம் review நிலமெல்லாம் இரத்தம் pdfபெப்சி கோலா தானியங்கி எந்திரத்தின் முன் நின்றிருந்தான்.

” கடுமையா தாகமா இருக்குடா, ஒரு திர்ஹம் சேஞ்ச் இருந்தா தாவன்” என்றவாறு கையில் இருந்த காசினை வாங்கி எந்திரத்தினுள் இட்டு , பெப்சிக் கான தேர்வை அழுத்திக் கொண்டிருந்தான்.

எதுவோ கேலியாக தோன்ற திரும்பி நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். “டொம்” என்ற சத்தம் கேட்டது. அது பெப்சி போத்தல் விழுந்த சத்தம்தான்! ஆனாலும், அது என் நண்பனுக்கு, காஸாவின் மீது விழுகின்ற குண்டு சத்தத்தினை நினைவுபடுத்தி இருக்குமா என்ற கேள்வி ஏனோ அனாவசியமாக என்னுள் தோன்றி மறைந்தது.

– யாவும் கற்பனை –

பகிர:

Leave a Reply