நான் துபாயில்………

Spread the love

ஆனாலும் பெருமையோடு சொல்லிக்கொள்வோம்..
“ நான் துபாயில்..” என…

அடுக்கப்பட்ட பெட்டிகள் போல பிரம்மச்சாரிகள் வாசம்..
அது இங்கு விதிக்கப்பட..
உடைகள் மட்டும் அடுக்கும் இடங்கள் விலக்கி எம்மை சுருக்கிகொள்வோம்.
உறங்கவும் இளைப்பாறவும் என..

காலைகள் போர்க்களமாய் விடியும்..
குளியலறை சாகசங்களுடன்..
இடம்பிடிப்பதும்.. அவசரமான நேரக்கரைதலின் பதைபதைபோடும்..துபாயில் துபாயில் உள்ள துபாயில் இருந்து துபாயில் வேலை துபாயில் ஒரு துபாயில் தங்கம் விலை துபாயில் இன்றைய தங்கம் விலை துபாயில் இருக்கும் துபாயில் இருக்கிறார் துபாயில் நடந்த
உடை தேடி, உதறி, மூட்டை தேடி நசுக்கி
பின் ஓரளவு ஒப்பனைகளுடன், சிரிப்பினையும் ஒட்டிக்கொண்டு ஓடுகின்றோம்
மேலாளர்களின் முட்டாள்தனங்களுக்கும் சேர்த்து கடி வாங்கவென..

கரைகின்ற பொழுதின் நீள அகலம் தெரியாத ஓர் தருணம் வயிறு தீயாக
பசி போக்கும் உணவுடன் பொழுது சாய.. மீண்டும் பயணம் தொடங்கும்

குடும்பம், வீடென மாறும் சிந்தனைகள் ..
அலைபேசியூடு கேட்கும் அம்மாவின் குரலுடன் கொஞ்சம் புத்துயிர் பெறும்.

இதோ இன்று முடிந்தது.
மாற்றங்கள் ஏதும் இன்றி நகரும் நாளைக்காக….

ஆனாலும் பெருமையோடு சொல்லிக்கொள்வோம்..
“ நான் துபாயில்..” என…

பகிர:

Leave a Reply