போய்க்க்கோ சேட்டா, நல்லா நமஸ்கரிச்சிக்கோ

Spread the love

ஹறாம்!

இத நோக்கியோ!

தன் போனை என் முகத்துக்கருகே நீட்டினார் மலையாளி அன்பர்.

நாட்டில் உள்ள அவரது வங்கிக் கணக்கின் தகவல்கள் அதில் இருந்தன. கிட்டத்தட்ட இந்திய ரூபாய்களில் 15 லட்சங்களுக்கு அண்மித்த தொகையது!

“ஆ! சேட்டன், ஒரு வல்லிய புள்ளி! ” என்றேன் சிரித்துக் கொண்டே. 
அவருக்கு, முகமெல்லாம் பெருமிதம், இருந்தும் மறைக்க முயற்சித்துக் கொண்டே

“அது இல்லா, ஈ அமவுன்ட் என்ட பாரியின்ட சொர்ணங்கள கிட்டி, ஞான் இத பிக்ஸ்ட் டெபாசிட்ல இட்டு..” என்றார்.

“ஆ..”

“6 மாசத்துக் கொருதரம் ஒரு வல்லிய அமௌன்ட் இன்ட்ரஸ்ட் ஆயிட்டு கிட்டும்..”

“வட்டி ஹறாமில்ல சேட்டா?” என்ற என் கேள்வியை எதிர்பார்க்காத சேட்டன் சுதாரித்துக் கொண்டே,

“ஆ.. அதே! ஹறாம்தன்னே! ” என்று இழுத்தவாறே, ” ஞான் ஆ பைசையில கழிச்சிட்டில்ல கேட்டோ?..” என்றார்.

“அப்ப, ஆ பைசையய் நிங்கள் எந்தா செய்யும்?” என்றேன் யோசனையுடன்.

“அதில, ஞான், மற்றது மறிச்சது செய்யும், ஆனா, ஞான் ஆ பைசையில கழிக்கிறல்ல கேட்டோ!” என்று மீண்டும் வலியுறுத்தினார் சேட்டன்.

“அய் சரி! ” எனது பதிலில் இருந்த எள்ளலை கண்டுகொள்ளாமல்,

“நாழியாயி, ஞான் நமஸ்கரிக்க போவாம்..” என்றவாறு நடக்கத் தொடங்கினார் சேட்டன்.

“வெரிகுட் வெரிகுட்.. போய்க்க்கோ சேட்டா, நல்லா நமஸ்கரிச்சிக்கோ..” என்று அவரின் முதுகைப் பார்த்துக் கூறிக் கொண்டேன்.. 

பகிர:

Leave a Reply