என்ட Bucket இவட இருந்து..

Spread the love

அலுத்த இரு வியாழன் இரவு, Window Shopping ல் அம்மணி மூழ்கி இருக்க, தூக்க கலக்கமும் அலுப்பும் சூழ்ந்த ஒரு தருணம் அந்த மலையாளி அங்கு நின்றிருந்தான்
வாங்கிய பொருட்களுடன் அங்கே நின்றிருந்த எனது Shopping Bucket ஐ உற்றுப் பார்ப்பதும், பின் திரும்ப என்னை பார்ப்பதும் எதையோ சொல்ல முனைகின்றான் என பட்டது.

” என்ன? “

“என்ட Bucket இவட இருந்து…” என இழுத்தான்.

“So!! ” அசுவாரசியமாக நான் இழுத்தேன்.

” It’s Same Like this” என என் Bucket டை காட்டி அவன் கூறிய தொனியும் முறையும், நீதான் அதை எடுத்திருக்கின்றாய் என சொல்லாமல் சொல்லியது.

இருக்கும் எரிச்சல் எல்லாம் உருமாறி அவனின் மேல் கோபமாக மாற,
தீர்க்கமான குரலுடன், ” போ! போய் போலிஸ்ல கொம்ப்ளைன் ஒன்ன இட்டோ ” என்றேன்.

சற்று குழம்பியவன், “What” என்றான்.

கொஞ்சம் குரலை உயர்த்தி ” I Said, Go and Lodge the Complain at Police Station” என்றேன்.

அம்மணி வந்து சேரவும் அதே குழப்பத்துடன் ஒரு முறைப்பு முறைத்தவாறு இடத்தை விட்டு அந்த எழவு மலையாளி அகலவும் சரியாக இருந்தது.

“யாரு கூட்டாளியா? கதைச்சிக்கி நின்டயள்” என்ற அம்மணியின் கேள்விக்கு,

“ஓம் கூட்டாளிதான். ராவைக்கு நித்திர வராம இரிக்கிறதுக்கு ஐடியா கேட்டார் குடுத்திருக்கன்” என்றேன் சிரிப்புடன்.

பகிர:

Tags: , , , , , , , ,

Leave a Reply