வாசகன் ஆக இருப்பதில் உள்ள அவஸ்தைகள்

Spread the love

வாசிப்பில் கிடைக்கும் அனுபவம் புதிய தலைமுறைக்கு கிட்டவே இல்லை என்பதை விட, அவர்கள் அதை நிராகரித்தே விடுகின்றனர்.ஏன் வளர்ந்தவர்களும் கூடத்தான். இதன் விளைவு, ஒரு தீவிர வாசகன் ஆக இருப்பதில் உள்ள அவஸ்தைகள் நம்மை ஒவ்வொரு நாளும் விடாமல் துரத்துகின்றது.

 

எல்லை சுருங்கிய வாசிப்பு

வாசகன் s,வாசகன்,வாசகன் என்ற,வாசகன் நான்,வாசகன் பொருள்,வாசகி வாசகி,வாசகன் பதிப்பகம்,அது வாசகன்,அத வாசகன்,ஹிந்தி வாசகம்,புத்தக வாசகர்,வாசகனாய் meaning,வாசகனாய் ff

எமது வாசிப்பின் எல்லை ஒரு சினிமா செய்தியுடனோ, அல்லது அது சார் கிசு கிசுக் களுடனோ… அதையும் தாண்டி என்றால் ஒரு கற்பழிப்பு செய்தி பற்றிய சுவாரசியத்துடனோ முடிந்து விடுகின்றது.  இதில் உள்ள இன்னொரு பிரச்சினை என்னவென்றால், உண்மையான வாசகர்களை கண்டு கொள்வது மிக அரிதாக போய்விட்டது. அன்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்ற அவர்கள் தனித் தீவு போலாகிவிட்டனர்.

சினிமா கிசு கிசுக்களை பகிரவோ, அதை விவாதிக்கவோ தயாராகின்ற நண்பர்கள், ஒரு நூல் பற்றி அதன் வாசிப்பனுபவம் பற்றி கேட்பதற்கோ விவாதிப்பதற்கோ தயாராகுவதில்லை. அது பற்றிய சிறிய அனுபவங்கள் கூட இல்லாமல்தான் இருக்கின்றனர். அந்த வகையில் ஒத்த ரசனை கொண்டவர்களை இலகுவாக இனங்கண்டு அது பற்றிய விடயங்களை மேலும் விவாதிப்பது போல, தீவிர வாசக நண்பர்களை காண்பது இப்போது மிக அரிதாகிவிட்டது.

திரைப்படங்களின் வெளியீடு பற்றிய செய்திகள், தினசரிளில் காட்டுகின்ற அக்கறையினை வேறு நூற்களில் காட்டுகின்ற நண்பர்களை இது வரை நான் சந்தித்ததில்லை. ஒரு குழாமில் அது தொடர்பில் ஏதாவது பேச முனைந்தால், எல்லோரும் ஏதோ வேற்று கிரக வாசிகள் போல நம்மை நோக்குவார்கள். அதன் பின் நாம் மட்டும் தனித்து விடப்பட்ட உணர்வுடன் இருந்து தொலைக்க வேண்டியிருக்கும். ஒரு புகழ்பெற்ற, நாம் வாசித்து ரசித்த ஒரு நூலினைப் பற்றி பேச ஒரு சந்தர்ப்பம் வாய்க்கின்ற போது, அதைப் பற்றி ஒரு கருத்தினை சொல்லி, உரையாடலை தொடங்க எதிர்பார்த்திருந்தால், நமக்கு கிடைப்பது ஏமாற்றமே.

இதிலும் இன்னொரு அவலம், ஒரு நூல் பற்றிய சுவாரசியத்தினை யாரிடமாவது பகிராவிட்டால் தலை வெடித்துவிடும் என்ற நிலையில், ஓரளவுக்காவது தேறுவான் என நினைக்கும் நண்பனிடம் போய் சொல்லுவோம். அவனோ, சிதம்பர சக்கரத்தை பேய் பார்ப்பது போல பார்ப்பானே ஒரு பார்வை. எங்காவது போய் முட்டிக் கொள்ளத்தான் தோன்றும். ஒரு வாசகன் ஆக இருப்பதில் உள்ள அவஸ்தைகள் இதனோடு முடியாது, இன்னும் சொல்லிக் கொண்டே செல்லலாம்.

போலித்தனங்கள்வாசகன் s,வாசகன்,வாசகன் என்ற,வாசகன் நான்,வாசகன் பொருள்,வாசகி வாசகி,வாசகன் பதிப்பகம்,அது வாசகன்,அத வாசகன்,ஹிந்தி வாசகம்,புத்தக வாசகர்,வாசகனாய் meaning,வாசகனாய் ff


நூற்கள் தொடர்பான கரிசனை அதிகமிருப்பதாக காட்டிக் கொள்ளும் இன்னொரு தரப்பும் உள்ளது. நிறைய நூற்களை தன்வசம் வைத்திருப்பார்கள். கிடைக்கின்ற மின் நூற்கள் அனைத்தும் அவனது கணினியில் நிரம்பி வழியும். ஆனால், மேலட்டை தாண்டி எதுவும் தெரியாமலே இருக்கும். சமூக அக்கறை தொடர்பில் அதிக பிரக்ஞையினை வெளிப்படுத்தும் நண்பர்கள் கூட, வாசிப்பென்றால், கனதூரத்திற்கு ஓடி விடும் அவலமே காணக்கூடியதாக உள்ளது. கேள்விப்பட்ட ஒரு விடயத்தை அறிவதற்கான உந்தல் எதுவுமின்றி செவிவழி செய்திகளை மட்டும் நம்பிக் கொண்டும் அதனையே விவாதித்துக் கொண்டும் இருக்கின்ற ஒரு தலைமுறை நமது கண் முன் உருவெடுத்துள்ளது. இதன் பிரதான காரணம் : வாசிப்பின் மீதான நாட்டமில்லை என்றே சொல்ல வேண்டும்.

இதை விடுங்கள், என்னிடம், ஆனந்தவிகடன் தினசரியா எனக் கேட்ட நண்பன் கூட இருக்கின்றான். சினிமா சார் ஒரு ஜனரஞ்சக பத்திரிகை தொடர்பான எமது அறிதல் இந்தளவுக்கே இருக்கின்றது.

தீவிர வாசகன் ஆக  இருப்பதில் உள்ள அவஸ்தைகள் இன்னும் இன்னும் எத்தனையோ  இருந்தும் அதை தொடர காரணம் – விடமுடியவில்லை என்பதுதான். அது ஒரு போதை – மீள முடியாத போதை. இதை வாசிப்பினை உயிராக காதலிப்பவர்கள் ஒத்துக் கொள்வார்கள்.

பகிர:

Leave a Reply