Conspiracy சமைப்பது எப்படி ? Conspiracy meaning in tamil

Spread the love

கான்சிபிரசி என்பதை தமிழ்படுத்த முடியுமா எனத்தெரியவில்லை (Conspiracy meaning in tamil) . தற்போதுள்ள தமிழ்ப்படுத்தல் – “சதிக் கோட்பாடு” இது எந்தளவுக்கு பொருந்தக் கூடியது என்பதை பற்றி மொழியியலாளர்கள்தான் கூற வேண்டும்.

Conspiracy meaning இனை தமிழில் நோக்க முன்னர். அது என்ன என்பதை பார்க்கலாம். Conspiracy meaning in tamil என்பதை விட அது ஒரு உலகப் பொது நியதிக்குட்பட்டுத்தான் காணப்படுகின்றது. எப்படி ஒரு Conspiracy கோட்பாடு கட்டமைக்கப்படுகின்றது என்பதை பற்றி காணலாம்.

 

ரொம்ப சிம்பிள்!

 

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக உருவாகிக் கொண்டிருக்கும் Conspiracy கள் தொடர்பில் இணையம் திணறிக்கொண்டிருக்கின்றது. Reddit போன்ற வலைத்திரட்டிகளில் யார் எவர் என்றே தெரியாத பலரும் கண்ட கேட்ட, ஏன் கேட்காத விடயங்கள் என எதுவெல்லாம் கிடைக்கின்றதோ கிடைப்பதை வைத்து Conspiracy களை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றனர்.

எந்தவொரு விடயத்தையும் Conspiracy வட்டத்துக்குள் கொண்டுவரும் சாத்தியத்தை இணையம் வழங்குவதாக துறை சார்ந்த்தோர் கூறுகின்றனர். MS Paint உம் ஒரு புகைப்படமும் கொஞ்சம் தான் சொல்லப்போகும் Conspiracy தொடர்பான மேலோட்ட அறிவும் ஒரு வலுவான Conspiracy க்கு போதுமானது! அது ஏன் என்ன என்பதைப் பற்றி சிந்திக்க வைக்காமல், தொடர்ச்சியாக அது பற்றிய உரையாடல்களை நிகழ்த்துவதன் மூலம் அக் Conspiracy யினை உண்டாக்கியவர் தனது நோக்கத்தினை அடைய முனைகின்றார். ஆம்! நிச்சயமாக ஒவ்வொரு Conspiracy க்கும் பின்னால் ஒவ்வொரு நோக்கம் உள்ளது. அது வெட்டியாக அடுத்தவரை குழப்புவதில் தொடங்கி வியாபார போட்டி, தனிமனித குரோதம், அரசியல் என நீண்டு கொண்டே செல்கின்றது.

 

வியாபார போட்டி

 

conspiracy meaning tamil

உதாரணத்திற்கு, இந்தியாவின் மாட்டிறைச்சிச் சந்தையில் பெரும் பங்குவகிக்கும் Al Kabeer எனும் நிறுவனம் இதன் மூலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. மாடறுப்புக்கு எதிரான இந்துதுவாக்களின் நடவடிக்கை காரணமாக பல்வேறு பிரச்சனைகள் உச்சம் பெற்றிருந்த காலத்தில், இந்நிறுவனமானது இந்துவிற்கு சொந்தமானது என்றொரு வாதம் முன்வைக்கப்பட்டு பரப்பப்பட்டது. அதன் மூலம் அந்நிறுவனம் இழப்புகளை சந்தித்திருக்கின்றது என்பது அந்நிறுவனத்தின் இணையப் பக்கத்தினை நோக்கும் போது தெளிவாக புரியும் (www.alkabeerexports.com/about/) இது போட்டி நிறுவனங்களால் ஏற்படுத்தப்படுகின்ற விடயங்கள்.

இது போல, சமூக வலைத் தளங்களில், வியாபார போட்டி காரணமாக போட்டியாளர்களின் உற்பத்திகள் தொடர்பில் வதந்திகளைப் பரப்பும் நடைமுறையும் காலா காலமாக நடந்து கொண்டுதான் உள்ளது.

அது போலத்தான், அரசியல்ரீதியாக, ஏற்படுத்தப்படும் Conspiracy களும் பல தாக்கங்களை அரசியல் அரங்கில் உண்டுபண்ணி இருக்கின்றன. மிக பிரபல்யமான உதாரணம் – ஒபாமாவின் மத நம்பிக்கை தொடர்பானது. அதாவது “ஒபாமா முஸ்லிம்” என்ற Conspiracy அவரது ஆட்சியின் இறுதி வரை அவரைப் பின் தொடர்ந்தே வந்தது. அவர் அதை மறுத்துரைத்தும் அது மறையவில்லை. ஒபாமாவின் அரசியல் எதிரிகளினால் ( ஒபாமாவின் பிறப்பு பதிவு தொடர்பில் ட்ரம்ப் தொடர்பான சர்ச்சை ஒன்றும் உள்ளது ) உண்டாக்கப்பட்டது.

 

Conspiracy களின் ஆயுட்காலம்

 

இது போன்று பல்வேறு காரணங்களால், உருவாக்கப்படும் Conspiracy கள் அனைத்துத் தருணங்களிலும் நெடுங்காலம் வாழ்வதில்லை. அது அழிந்து மறைந்துவிடும் அல்லது மக்களால் புறக்கணிக்கப்பட்டுவிடும். ஆனால், அதற்கான கால இடைவெளிதான் மாறுபடக் கூடியது!

எவ்வாறு இருந்த போதிலும், அனுமானத்தின் அடிப்படையில் ஒரு விடயத்தை உறுதியாக நம்பி அதை உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாக வெளியிடுவதென்பது அபத்தமானது. மனிதப்பண்புகளுக்குட்பட்டதல்ல. ஒரு விடயத்தை இவ்வாறுதான் இருக்கும் என தனது அறிவுக்கு எட்டிய வகையில் சிந்தித்து அதற்கு காரண காரியங்களை கற்பித்து முன்முடிவுகளுடன் இது போன்ற Conspiracy களை வெளியிடுவோர் தொடர்பில் மனோதத்துவவியலாளர்களும் எச்சரிக்கை செய்கின்றனர். Paranoia என்ற மனக்குழப்பத்தின் ஆரம்பப்படியாக அது இருக்கலாம் என கூறுகின்றனர்.

எது எப்படி இருப்பினும், அவதூறுகளும் அபாண்டங்களும் மற்றவர்களிடம் நம்மை மலினப்படுத்தும் கேவலமான யுக்திகள்! அது தலைமுறை தாண்டியும் தொடரக்கூடிய வசவுகளை தரும் அபாயம் கொண்டவை. எனவே இது போன்ற Conspiracy களை உண்டாக்குவதில் இருந்து தவிர்ந்து கொள்வோம்!

அதையும் தாண்டி நான் Conspiracy களின் காதலன், அவற்றை செய்வேன் என ஒற்றைக் காலில் நிற்பவரா? இதோ உங்களுக்காக..

Conspiracy சமைப்பது எப்படி ??

Conspiracy சமைப்பது எப்படி ??

கீழுள்ள படத்தைப் பாருங்கள்! ஏழெட்டு கோடுகளும், நான்கைந்து கேள்விகளும்! என்ன ஏதென்று இதைத் தேடி, இதில் அர்த்தம் கண்டுபிடிக்க சில ஆர்வக்கோளாறுகளும் இருந்தால் போதும்! 
அனைத்துக்கும் மேலாக, எ

ல்லாம் தெரிந்த / அதுவும் ஓடும் ரெயிலை ஒற்றைக் கையால் நிப்பாட்டும் அளவு சர்வ வல்லமை படைத்த டிடெக்டிவ் அப்பச்சியும் கிடைத்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! வாழ்நாள் முழுக்கவும் Conspiracy செய்து சமைத்து உண்ணலாம்!

என்சாய்!!

பகிர:

Leave a Reply