வடக்கு கிழக்கு இணைவின் சாத்தியங்கள்!

Spread the love

ஏதோ நாளை நிகழப் போகும் ஒரு சம்பவம் போல வடக்கு கிழக்கு இணைவு தொடர்பில் செயற்கையான ஒரு பதட்டத்தினையும் போலிக் கருத்துருவாக்கத்தினையும் உண்டாக்க நினைக்கும் “தூய” அறவழிப் போராளிகள் சில விடயங்களை தங்கள் வசதிக்காக மறந்துவிட்டு ஒப்பாரி சொல்கின்றனர்.

இது தொடர்பில் அவர்கள் கள்ள மௌனம் காக்கும் பல விடயங்களில் பிரதானமானது,

1. இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பின் படி இரு மாகாண இணைவுக்கான சட்ட ஏற்பாடுகள் என்ன?
2. ஒற்றையாட்சித் தத்துவத்தை உறுதிப்படுத்தும் அம்சமான ஆளுநருக்குள்ள அதிகாரங்களும் மாகாண முதலமைச்சருக்குள்ள வரையறைகளும்.
3. ரஜீவ் – ஜேஆர் ஒப்பந்தம் மூலம் உருவாக்கப்பட்ட‌ 13வது திருத்தத்தின் தற்போதைய நிலை
4. மாகாணசபைகள் தொடர்பில் பேரினக் கட்சிகளின் நிலைப்பாடு!

இது போன்ற விடயங்களில் சிறிது கவனம் செலுத்தினால் இவ்விணைவு என்பதும், சதி என்பதும் வெறும் பூச்சாண்டியும் கூச்சலும் என்பது தெளிவாக புரியும்.

இது போன்ற சில்லறைத்தனங்களை விடுத்து, கட்சி வளர்க்க வேறு மார்க்கங்களை யோசிக்கலாம்! சமூகத்தின் அனைத்துத் தரப்புக்களையும் நமது கட்சி சென்றடைய வேண்டுமென்றால், அவதூறும் , இது போன்ற பூச்சாண்டிக் கதைகளும் அதற்கு வழியல்ல. வேறு நிறைய வழியுள்ளன.

இறுதியாக, சிங்களவர்கள், தட்டில் வைத்து கொடுக்க இரு மாகாணங்களும் புத்தாண்டுப் பலகாரங்களும் அல்ல! அந்தளவுக்கு அவர்கள் பெருந்தன்மையானவர்களும் அல்ல! அவ்வாறு நடப்பதற்கான ஒரு நல்லெண்ண சமிக்ஞை கூட தமது அரசியல் தற்கொலைக்கு சமம் என்பது அனைத்து சிங்களத் தரப்புக்கும் தெரியும்!

பகிர:

Tags: , , , , , , , , ,

Leave a Reply