முரளி காலத்து அரசியல் ஆசை!

Spread the love

அரசியலில் எதையாவது வெட்டிமுறிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுவதும் அதை நடைமுறைப்படுத்த சில பல சம்முவ அக்கறை குத்துக்கரணங்களை அடிப்பதும் சகஜம்தான் அதற்கு – உள்ளே உள்ள ஆசையினை உரிய இடத்தில் கொட்டி பெற வேண்டியதைப் பெற்று, அமோக ஆதரவுடன் உள்ளூராட்சி தொடங்கி பாராளுமன்றம் வரை போய்க்கொண்டே இருக்கலாம்! முடியுமென்றால், சனாதிபதியாகக் கூட முயற்சிக்கலாம்! ( காசா பணமா? முயற்சிதானே! )

ஆனால் நடப்பதோ வேறு, நேரடியாக சொல்லவும் தயக்கம்! குறிப்பால் சொல்வதிலும் ஒரு பயம்! இருந்தும் அரசியல் பிரவேசம் அவசியம்! சமூக வலைத் தளத்தில் கிடைக்கும் சிற்சில பூரணகும்ப மரியாதைகள் தரும் கிளுகிளுப்பு இன்னும் கொஞ்சம் உற்சாகத்தைக் கொடுக்க, இன்னும் நான்கு உபதேசங்களும், அறச்சீற்றங்களும் வார்த்தைகளாக விழும்! இதையும் தாண்டி எதுவும் அங்கில்லை!

இந்த வார்த்தை விளையாட்டு மற்றும் தேவதூத வேசம் எல்லாம் காணச் சகிக்கவில்லை! எனது அடுத்த இலக்கு அரசியல்தான்! எனப் போட்டுடைத்துவிட்டு, அதற்கான வேலைகளை கவனியுங்கள்! உங்கள் உபதேசங்கள் தொடங்கி அரசியல் சம்முவ சிந்தனைகளை கண்டு மெய்சிலிர்த்து பெரும் மக்கள் கூட்டம் ஒன்று கைபிடித்து அரசியலுக்கு இழுத்துவரும் என்று ஏதும் கனவிருந்தால் அழித்துவிடுங்கள்! அது எல்லாம் சினிமாவில் மட்டும்தான் சாத்தியம்!

முடியுமென்றால் இறங்கிச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை! ஏனெனில், இந்த சம்முவ அக்கறை வாந்திகள் தொடங்கி, அறச்சீற்ற இழவுகள் என அனைத்துக்கும் வகைதொகையின்றி போராளிகள் இருக்கின்றனர்.

பகிர:

Leave a Reply