மரபினை கைவிடும் வியாபார முறைகள்!

Spread the love

மரபுவழியில் நாம் இன்னும் நடாத்திக் கொண்டிருக்கும் Brick and Mortar வகை வியாபார முறை உலகில் மிக வேகமாக இறந்து கொண்டிருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. காரணம் – மின் வணிகம் ( E Commerce )

இதை நாமும் தற்போது அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். E Commerce க்கான வரவேற்பு இலங்கையிலும் திருப்திகரமாகவே உள்ளது.

நுகர்வோன் தனது கைகளிலேயே அதிக அலைச்சலில் இல்லாமல் பொருட்களை தேர்வு செய்யும் சுதந்திரத்தை Online Stores அளிக்கின்றது. அதோடு, மேற்குறிப்பிட்டது போல, மேலெழும் செலவுகள் மற்றும், கொள்வனவுச் செலவுகளில் உள்ள குறைப்பு விலை நிர்ணயத்தில் தாக்கம் செலுத்துவதால், குறித்த பொருளுக்கான விலை E Commerce வர்த்தகத்தில் நுகர்வோனுக்கு குறைவாக கிடைக்கின்றது. 
இன்னும், மின் வர்த்தகம் தற்போது எடுத்துள்ள வடிவங்கள் பலரும் அனுமானிக்க முடியாத ஒன்றாக உள்ளது. மறைமுகமாக பல தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதில் இன்று மின் வணிகம் பெரும் பங்காற்றுகின்றது.

இன்னும் ஒரு தசாப்தத்திற்குள் இலங்கையில் இதன் தாக்கம் வெகுவாக உணரக்கூடியதாக இருக்கும்.

எனவே, தற்போதுள்ள வர்த்தகர்கள், இந்த ஒழுங்கினை எதிர்பார்த்து அதற்கமைவாக தமது வியாபார யுக்திகளை மாற்றும் நிர்ப்பந்தம் உருவாகுவதோடு, இதை உள்வாங்கிக் கொள்ளாத வர்த்தகர்கள் தமது வியாபாரத்தினை நிறுத்த வேண்டிய அபாயமும் ஏற்படலாம்.

பகிர:

Leave a Reply