பொஸ்! கொஞ்சம் வெலகுறயளா

Spread the love

கடற்கரைவீதி!
மோட்டார் வாகனங்கள் பின்னிப் பிணைந்து கிடந்தன! வாகனநெரிசல்! 
ஒரு நீண்ட தலைமுறை இடைவெளியினை உணரக் கிடைத்த தருணம் எனக்கு வாய்த்தது!
வித விதமான மோஸ்தர்களில் ஆடை அலங்காரம் தொடங்கி சிகை அலங்காரம் மற்றும் தாடி என நமது இளைஞர்களின் அதீத வளர்ச்சி ஒரு புறம் என்றால், வாயிலிருந்து வருகின்ற வார்த்தைகளின் நெடி மறுபுறம்! இடம் பொருள் ஏவல் என எதுவுமில்லாமல் சரளமாக…!

“பொஸ்! கொஞ்சம் வெலகுறயளா?” என்ற குரல் கேட்டு திரும்பினேன்!

தெரிந்த ஒரு பதின்ம வயது இளைஞன்! அரைக் களிசானுடன் கண்ட ஞாபகம் இன்னும் உள்ளது!

எங்கும் திரும்ப முடியாமல் முட்டிக் கொண்டு நிற்கும் வண்டிக்களுள் என்ன் செய்யப் போகிறான்? என்ற கேள்வியுடன் அவன் விளித்த பொஸ்ஸினை நோக்கினேன்!

அவர் எனது ஐந்தாம் ஆண்டு ஆசிரியர்!

பகிர:

Leave a Reply