நீங்க சொல்றது வேறவா

Spread the love

அருகில் உள்ள அலுவலகம் ஒன்றில் பாதுகாப்பு கடமையில் நமது நாட்டைச் சேர்ந்த ஒருவர் பாதுகாப்பு கடமையில் இருக்கின்றார். காணும் போது குசலம் விசாரிப்பதும், நாட்டு நிலமை பற்றி எதையாவது கதைப்பதும் வழமை.!
இப்போதெல்லாம் ஆளைக் கண்டால் தெறித்தோடும் நிலை! காரணம் – MLM ( Multi Level Marketing )

யாரோ நம்நாட்டு பெரும்பான்மை ஒருவன் இழுத்துவிட்டிருக்கின்றான், காசு கொட்டும் என ஆசை வார்த்தைகள் வேறு.

1500 திர்ஹம்களுக்கு அழகு சாதனப் பொருட்களை ஆளின் தலையில் கட்டிவிட்டான். உண்மையில் அதன் பெறுமதி 500 திர்ஹம்களுக்கு மேல் வராது! ஏதோ காளான், என்னவோ மூலிகை என உபரித் தகவல் வேறு!

வியாழக்கிழமைகளில் நடக்கும் கூட்டத்திற்கு ஆள் பிடித்து திரிகிறார் – இவர்! போட்ட 1500 திர்ஹ்ம்களை எடுத்துவிட்டு, லாபத்தை பெரிய சாக்கில் அள்ளும் அவசரம் அன்பருக்கு!

குடும்பஸ்தர், இதில் இன்னும் ஏமாந்து விடக்கூடாது என்ற அக்கறையில், ஆளை இருத்தி அரை மணித்தியாலம் MLM பற்றி விளங்கப்படுத்தினேன். கிளிப்பிள்ளை போல கேட்டுக் கொண்டிருந்தார். முடித்துவிட்டு நிமிர்ந்து முகத்தைப் பார்த்தேன்.
” நீங்க சொல்றது வேறவா..! ஒங்களுக்கு வெளப்பமில்ல… ” என்றார் கூலாக.

பகிர:

Leave a Reply