மறுவாழ்க்கைக்காக ஒழச்சிக்கி இரிக்கார்

Spread the love

அஸ்ஸலாமு அலைக்கும்! எங்க ஆளக்க்காணல்ல!

“இருக்கம்! கிட்டத்தில ரூம் மாறின! “

ஆ! என்ன கேஸ்? ஏன்!! நீங்க XXXXX ட எலா இருந்த!

“ஓவ்! அத கேக்காதங்கோ! எங்கிட ஊராக்கள் இல்ல என்டு அவரோட செட் ஆகி இருந்த, அவர் நமக்கு பாத்தார் ஒருவேல!!”

??? இப்ப XXXXX ஓட இல்லயா?

“பாத்த வேலைக்கு இரிக்கிறா இன்னம்?”

??

“ரூம்ல தண்ணி கரண்ட் கட் பண்ணிட்டானுகள்! ரெண்டு நாள் ஒரு மாதிரியா மெனேஜ் பண்ணிட்டம்! மூணாவது நாள்ள இருந்து ஆள காணல்ல! என்ன என்டும் தெரியா என்டுட்டு நாலாவதண்டு கோள் எடுத்தா, நான் பிரன்ட்ர ரூமுக்கு மாறிட்டன் எங்கானாள்!!”

!!! சொல்லயும் இல்லையா?

“இல்ல ஹாஜி! ஆள் நம்மள உட்டுட்டு எஸ்கேப்!. அதுக்கு பொறகு ஆள காண இல்ல… “

ஆ! அவர காணமாட்டயள்..

“ஏன் ஹாஜி!! என்ன சொல்றயள்??”

ஓ! இப்ப அவர் கடும் பிசி… கண்டி கலவரத்தில பாதிக்கப்பட்ட நம்முட சகோதரர்களுக்காக பேஸ்புக்ல அழுது வடிச்சிக்கி, அவிட மறுவாழ்க்கைக்காக ஒழச்சிக்கி இரிக்கார்..

“ஹா..ஹா… ஓ.. ஒழைப்பார்.. ஒழைப்பார்.. “

(யாவும் வழமை போல கற்பனையே!)

பகிர:

Leave a Reply