பணம்!

Spread the love

இப்றாலெப்பைக்கு அவர் சொந்தம்!! திரும்ப திரும்ப யோசித்தும்.. சொந்தம் தான்!! உறுதிப்படுத்திக் கொண்டான்! சிறுவயதில், ஓரளவு அறிமுகம் இருந்தது! 
நெருங்கிய சொந்தமென்றாலும், ஓரளவுதான் அறிமுகம்! காரணம்.. மிக எளிது! 
பணம் பறித்த குழியில் இப்றாலெப்பை இருக்க அது பறித்தப் போட்ட மேட்டில் அவர் இருந்தார்! அதனால், இப்றாலெப்பை எல்லாம் அவர் + அவர் குடும்பத்திற்கு பொருட்டே இல்லை! உயிருள்ள ஏதாவது ஒன்றென மட்டும் அவர்கள் அவனை கணித்திருப்பர்.

காலம் சுழல, இதோ இன்று – வலிமா ஒன்றில் அவரைக் கண்டதும் ( சம வயதென்றாலும் அவர்தான்! ) பழைய ஞாபகங்கள் சுழன்றாலும் தூர எறிந்துவிட்டு அவரைப் பார்த்து புன்னகைக்கின்றான்… ஒரு முறை தாண்டி நீண்டு செல்லும் அத்தனை எத்தனங்களும் வீண்! இப்போதும் இப்றாலெப்பை அதே குழிதானே! அவர் நின்ற மேடு குறைந்திருந்தாலும் மேடு மேடுதான் அல்லவா!

குழி மூடும் பணியில் இப்றாலெப்பை பம்பரமாக சுழன்று கொண்டிருந்த போது, காலம் சிட்டாகப் பறந்து கொண்டிருந்த ஒரு பொழுதில்,

“நீ அவிர வீட்ட போறல்லியாம் ஏன்?” என்றவாறு உம்மா பிரசன்னமானார்.

ஏறிட்டுப் பார்த்த இப்றாலெப்பை ஒன்றும் சொல்லவில்லை!

” அன்டு அவர் வந்தவர்.. கதச்சார்..! கோவிச்சாங்க.. நீ வாறல்லியாம் என்டு..” எனத் தொடர்ந்தார்.

“குழியின் ஆழம் குறைய மேடும் கரைந்து ஓர் நேர்கோட்டிற்கு வரும் அப்ப சந்திக்கலாம்..” என்றேன்…

குழப்பமாய் “என்ன மன சொல்றாய்..” என்ற‌ உம்மாவின் குரல் இப்றாலெப்பையின் முதுகில் பட்டுத் தெறித்துக் கொண்டிருந்தது,!

( யாவும் கற்பனை! )

பகிர:

Leave a Reply