ஏய் நீ ரொம்ப அழுக்கா இருக்கே!

Spread the love

முழுவதும் மீசை ,தாடி , கர கர என குரல்கள் என கேட்டுக் கொண்டிருந்த எங்களது அலுவலகத்திற்கு புதிதாக ஒரு குயில் கூவ வந்திருந்தது. ஆகா……. இருந்த வாலிப வயோதிப அன்பர்கள் அனைவருக்கும் ஏக குஷி! அது ஏனோ தெரியவில்லை. பால் ஈர்ப்பு என்பது எப்போதும் ஆண்களுக்கு கொஞ்சம் அதிகமோ என பல தடவைகளில் எண்ணியதுண்டு. 

அவள் – 25 வயதுக்குள் இருக்கும். அழகியும் இல்லை, சுமாராகவும் இல்லை. பொறுத்துக் கொள்ளலாம் ;).  இருப்புக்கட்டுப்பாட்டு பிரிவிற்கு (Inventory Control) வந்திருந்தாள் – மும்பையை சேர்ந்தவள். நுனி நாக்கு ஆங்கிலமும், அதிகாரமும் கொஞ்சம் தூக்கலாக இருந்தன. ஆனாலும், ரசிகர்கள் குறைந்த மாதிரி தெரியவில்லை. அதிலும், சிலர் தீவிர விசிறியாக அல்லது விசிறியாக்கப்பட்டிருந்தனர்.  அந்த தீவிர விசிறிக்கூட்டத்தில் ஒருவர் எனது நண்பர். நண்பர் காணும் போதெல்லாம், அவளைப்பற்றிய துதிபாடல்களை பாடிக்கொண்டே இருந்தார். அதற்கு இன்னும் ஒரு காரணம் அவளின் மேசைக்கு பக்கத்து மேசைக்காரர் நண்பர். இது எங்கு போய் முடியப்போகின்றதோ என்ற எண்ணம் எனக்கு. 

கடந்த சிலவாரங்களில் நண்பரிடம் துதி குறைந்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. இன்னும் கூர்ந்து கவனித்ததில் முன்பெல்லாம் எதற்கெடுத்தாலும் கதைக்க சந்த்தர்ப்பம் பார்த்திருக்கும் நண்பர் இப்போது சுவாரசியம் இன்றி இருப்பதும் புரிந்தது. ஆச்சரியம்! என்னவென்று கேட்டுவிடவேண்டும். ! பணி முடிந்து போகும் போது மெதுவாக பேச்சுக் கொடுத்தேன்.

“பிறகு எப்படி போகுது கரெனுடனான வேலைகள்?” என்றவாறு கண்ணடித்தேன். ( அவள் பெயர் – கரென்)

நண்பர் கொஞ்சம் பதட்டப்பட்டது போல பிரமை தட்டியது. சுதாரித்துக் கொண்டே,, 

“இல்லை ச்சும்மாதான் கேட்டேன்” என்றேன்.
கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனவர், கொஞ்ச குழப்பமான முகத்துடன் என்னை உற்றுப் பார்த்தார். எதையோ சொல்ல முயற்சித்து முடியாமல் விழுங்குகின்றர் என விளங்கியது.

அதோடு அதை முடித்துவிட்டு நகரத்தொடங்கினோம். 
கொஞ்சநேரத்தின் பின் ஏதோ விழித்துக் கொண்டவர் போல,

“ அவள் எப்போதும் பெர்பியூமுடனே திரிகின்றாள்” என்றார்.

இப்போதுதான் கதையினை ஆரம்பிக்கின்றார் என எண்ணிக்கொண்டு மெதுவாக திரும்பிப்பார்த்தேன். 

“அதனாலென்ன? , அவள் நாகரீகமான பெண். அதானால் இருக்கும்”  இது நான். 

சொல்லிமுடிக்கு முன்,, “ ஆனால் உடுத்திருக்கும் ஜீன்ஸ் க்கு எதற்கு பெர்பியூம்?” சடாரென அவரிடமிருந்து வந்து விழுந்த வார்த்தைகளின் அர்த்தம் புரியாமல் குழம்பினேன்.

அவர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். கண்களில் ஒருவித விசமம் பரவிக்கிடந்தது.
திடீரென பல்ப் எரிந்தது. இதழோரத்தில் புன்னகை ஒன்று எட்டிநிற்க அவரைப்பார்த்தேன். எனக்காக காத்திருந்தவர் போல பெரும் சத்தத்துடன் சிரிக்க தொடங்கினார். நானும் கலந்து கொண்டேன்…

இப்போதெல்லாம், பெர்பியூம் விசிறும் சத்தங்கள் – புன்னகையினை தந்து கொண்டிருக்கின்றன

பகிர:

Leave a Reply