Diploma Mills

எதற்கும் ஒரு முறை பரீட்சியுங்கள் பட்டம் பெற்றது Diploma Mill இலா என! Diploma Mills என்ற வார்த்தை கேட்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும், தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒன்று, இன்று நம்மவர்கள் மத்தியில் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்பினை பெறவும் இருக்கின்ற தொழிலில் தமக்கான வேதனங்களை அதிகரிக்கவும், நிறைய பேர் கல்வித் தகமைகளை இன்னும் கொஞ்சம் கூட்டிக்கொள்ள பல்வேறு வழிமுறைகளையும் தேடி ஓடுகின்றனர். அதில் பெரும்பாலும் நாம் தேர்ந்தெடுப்பது- கஸ்டம் இல்லாமல் காசு கொடுத்தேனும் ஒரு…

பகிர:

மார்க்க தூண்கள்!

வீதிக்குள் இறங்கிய போதே, சத்தம் காதைப் பிளந்து கொண்டிருந்தது! வீட்டிற்கு முன்னால் இருந்த வெறும் வளவில் புறஜக்டர் திரையில் , அகன்ற தாடியும் வார்த்தைகளில் எகத்தாளத்துடனும் மார்க்க அறிஞர் (!) ஒருவர் கத்திக் கொண்டிருந்தார். நான்கு வீதிகள் தாண்டியும் கேட்குமளவிற்கு சத்தம் அந்த இரவின் நிசப்தத்தை குலைத்தவாறு தொடர்ந்தது ஒரு வித அசூசை யினை உண்டு பண்ணினாலும், மார்க்க சொற்பொளிவு என்பதால் என்னையே சமாதானப்படுத்திக் கொண்டேன். ஆனாலும் முன்னால் இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துக்கும் குறைந்தவர்களுக்கு எதற்காக இவ்வளவு…

பகிர:

நிலமெல்லாம் ரத்தம்

” காஸா பிரச்சினைல இவனுகள் சத்தம் போடாம இருக்கானுகள் பாத்தாயா” அரட்டையில் பேச ஒன்றுமில்லாத சந்தர்ப்பத்தில் நண்பன் ஆரம்பித்தான். “ம்…” என்றிழுத்தேன். பலஸ்தீன் என்றாலே நெஞ்சு நிமிர்த்தி போருக்கு தயாராவன் போல இருந்தது அவனது முக பாவனை! “இந்த இஸ்ரேலிய …….. களின் ப்றொடக்ட் கள மொத்த முஸ்லிம் சமூகமும் புறக்கணிச்சாலே போதும் எலா! அவனுகள்ர மொத்த எகொனமியும் டவுன் ஆகிடும்.” என்றவாறு மேலும் ஏதோ சொல்ல ஆரம்பிக்க, நான் கொஞ்சம் அயர்ச்சியுடன் அவனது பொங்கலை வேடிக்கை பார்க்க…

பகிர:

மக்கள் சேவைக்காக .. உங்கள் நண்பன்

மழை பெய்தால் வீதியே வெள்ளக்காடாகும் பகுதி என்பதால், மாரி என்பது எப்போதும் எங்களுக்கு பிரச்சனைதான், ஏதாவது செய்யமுடியுமா என ஒரு மாரியில் தெரு பெரியவர்கள் சேர்ந்து ஆலோசித்து இறுதியில் அப்போது ஆட்சியில் இருந்த குறுநில மன்னரை சந்திக்கலாம் என முடிவெடுத்துப் பார்க்க சென்றிருந்தோம். ஏக கெடுபிடிகளுக்கு பிறகு, மன்னரின் தரிசனம் கிடைத்தது, சிம்மாசனத்தில் மன்னர் கம்பீரமாக ஒருக்களித்தவாறு உட்கார்ந்திருந்தார், வந்திருந்த குடிமக்களை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் கருமமே கண்ணாக இருந்தார். ஒரு கையில் சிகரட் புகைந்து…

பகிர:

விபத்து : சாவினை இறைத்து வைத்திருக்கும் வீதிகள்

இன்று நண்பகலில் எனது அலுவலகத்திற்கு முன்னுள்ள நெடுஞ்சாலையில் ஒரு விபத்து. அனேகமாக பாகிஸ்தானிய பெண்ணாக இருக்க வேண்டும். வீதியினை கடக்க முயற்சிக்கும் போது, வேகமாக வந்த காரினால் அடிக்கப்பட்டு தூக்கி எறியப்பட்டுள்ளார். சுமார் 15 அடி வரைக்கும் அவரது உடல் தூக்கி எறியப்பட்டுள்ளது. பிழை அப்பெண்மணி மீதுதான். வீதியினை பாதுகப்பற்ற முறையில் கடக்க முற்பட்ட போது நிகழ்ந்த அவலம் இது.இங்கு இவ்வாறான விபத்துக்கள் வழமையாகி விட்டது. பெரும்பான்மையான விபத்துக்கள் இவ்வாறானவையாகத்தான் இருக்கின்றன. அவசர அவசரமாக வீதியினை கடக்க முற்படுவதால்…

பகிர:

மறந்து போன கடிதங்கள்!

96, 97 களில் கூட தகவல் தொழில் நுட்பம் மனிதர்களை ஆளத் தொடங்கவில்லை. ஒரு வீட்டில் தொலை பேசி இருக்கின்றது என்பதே – ஒரு வகையான பணக்காரத்தனத்தின் குறியீடு போலத்தான் பார்க்கப்பட்டது. தொலைபேசிக்கான தேவைகள் அப்போது அவ்வளவாக வலியுறுத்தப்படவில்லை. அவசரம் என்றால், தந்தி. அல்லது கடிதம். இதையும் தாண்டினால்த்தான் தொலைபேசி. தொலைபேசினால் அது பற்றிய கதையாடல்கள் குடும்பம் பூராகவும் ஓரிரண்டு வாரங்களுக்கு உலா வரும். அதோடு அது ஒரு ஆடம்பரம் எனும் தோற்றப்பாடும், பெருமையாகவும் வர்ணிக்கப்படுவதுண்டு. தொலைதூர உறவுகளுக்கிடையிலான…

பகிர:

எழுதி ரொம்ப நாளாச்சு………

 எழுதி ரொம்ப நாளாச்சு………தலைப்பை பார்த்ததும் ஏதோ ஓரு பெரிய எழுத்தாளர் / பிரபல பதிவர் போல பீல வுடறான்ன்னு எண்ண வேண்டாம் நண்பர்காள்,,ஒன்னுமில்ல இன்னைக்கு காலைல வேலை விடயமாக பார்ம் ஒன்று நிறப்பும் போது ஏற்பட்ட ஒரு உணர்வுதான்….“ எழுதி ரொம்ப நாளாச்சில்ல….”அதேதான், பேனையினால் எழுதுவதைத்தான் சொல்கின்றேன்…. எல்லாம் கணினி மயமான இன்றைய உலகு, கையினால் எழுதுகின்ற பழக்கத்தினை மறப்பதற்கு தயாராகிக்கொண்டிருக்கின்றதோ என்று எண்ணத்தோன்றுகின்றது. உண்மைதான் இல்லையா..எல்லாம் கணணிமயப்படுத்தப் படுகின்றது / பட்டுக் கொண்டிருக்கின்றது. ஒப்பமிடுவதில் கூட…

பகிர:

வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள்

வாசிப்பில் கிடைக்கும் அனுபவம் புதிய தலைமுறைக்கு கிட்டவே இல்லை என்பதை விட, அவர்கள் அதை நிராகரித்தே விடுகின்றனர். ஏன் வளர்ந்தவர்களும் கூடத்தான். எமது வாசிப்பின் எல்லை ஒரு சினிமா செய்தியுடனோ, அல்லது அது சார் கிசு கிசுக் களுடனோ… அதையும் தாண்டி என்றால் ஒரு கற்பழிப்பு செய்தி பற்றிய சுவாரசியத்துடனோ முடிந்து விடுகின்றது. இதில் உள்ள இன்னொரு பிரச்சினை என்னவென்றால், உண்மையான வாசகர்களை கண்டு கொள்வது மிக அரிதாக போய்விட்டது. அன்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்ற அவர்கள் தனித் தீவு…

பகிர:

மனங்களின் விகாரங்கள்!

பாலர் வகுப்பிலிருந்து படித்து வந்த வாழ்க்கை சமூகம் பற்றிய கற்பிதங்கள், நிஜமான உலகில் பிரவேசித்ததில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து கொண்டே வருகின்றது. அதிலும் இன்றிருக்கும் நிலை இன்னும் பயமாக இருக்கின்றது. மனங்களின் விகாரங்கள் காலையில் கண் விழித்ததில் இருந்து பல்வேறு வடிவங்களில் உலவிக்கொண்டே இருக்கின்றன. செய்திகளை புரட்டினால், மனசு இன்னும் சுருங்கிப் போய் இருக்கும் கவலைகளுடன் உலகம் பற்றிய சிறிய ஒரு வருத்தமும் தொற்றுவதை தவிர்க்க இயலவில்லை. அந்த வருத்தமும் சொந்த கவலை ஒன்று வரும்போது…

பகிர:

Conspiracy சமைப்பது எப்படி ??

ரொம்ப சிம்பிள்! நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக உருவாகிக் கொண்டிருக்கும் Conspiracy கள் தொடர்பில் இணையம் திணறிக்கொண்டிருக்கின்றது. Reddit போன்ற வலைத்திரட்டிகளில் யார் எவர் என்றே தெரியாத பலரும் கண்ட கேட்ட, ஏன் கேட்காத விடயங்கள் என எதுவெல்லாம் கிடைக்கின்றதோ கிடைப்பதை வைத்து Conspiracy களை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றனர். எந்தவொரு விடயத்தையும் Conspiracy வட்டத்துக்குள் கொண்டுவரும் சாத்தியத்தை இணையம் வழங்குவதாக துறை சார்ந்த்தோர் கூறுகின்றனர். MS Paint உம் ஒரு புகைப்படமும் கொஞ்சம் தான் சொல்லப்போகும்…

பகிர: