நான் துபாயில்………

அடுக்கப்பட்ட பெட்டிகள் போல பிரம்மச்சாரிகள் வாசம்..அது இங்கு விதிக்கப்பட..உடைகள் மட்டும் அடுக்கும் இடங்கள் விலக்கி எம்மை சுருக்கிகொள்வோம்.உறங்கவும் இளைப்பாறவும் என.. காலைகள் போர்க்களமாய் விடியும்..குளியலறை சாகசங்களுடன்..இடம்பிடிப்பதும்.. அவசரமான நேரக்கரைதலின் பதைபதைபோடும்..உடை தேடி, உதறி, மூட்டை தேடி நசுக்கிபின் ஓரளவு ஒப்பனைகளுடன், சிரிப்பினையும் ஒட்டிக்கொண்டு ஓடுகின்றோம்மேலாளர்களின் முட்டாள்தனங்களுக்கும் சேர்த்து கடி வாங்கவென.. கரைகின்ற பொழுதின் நீள அகலம் தெரியாத ஓர் தருணம் வயிறு தீயாகபசி போக்கும் உணவுடன் பொழுது சாய.. மீண்டும் பயணம் தொடங்கும் குடும்பம், வீடென மாறும்…

பகிர:

ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..

அன்புள்ள அம்மாவுக்கு, நான் நலமாய் உள்ளேன். நீ எப்படி இருக்கின்றாய்? நீ நலமாய் இருக்க மாட்டாய் என்பது எனக்குத்தெரியும் அதனால்த்தான் எப்படி இருக்கின்றாய் என கேட்டேன். நான் எப்போதும் நலமாய்த்தான் இருக்கின்றேன் இருந்திருக்கின்றேன் உன் தயவால்.. அதனால் எனது ஆரோக்கியத்துக்கு ஒன்ரும் குறைவில்லை.. ஆனாலும் உன்னை நினைத்தால்தான் தொண்டைவரி எதுவோ வந்து என்னை சுவாசிக்க முடியாமல் செய்துவிடுகின்றது. அம்மா, நீ இல்லாத ஒரு உலகில் இப்போது நான் ஓரளவு நான் வாழப் பழகிவிட்டேன்.. ஆனாலும் நீ இன்னும்…

பகிர:

நட்புக்கள் இப்போதும் உண்டு, ஆனாலும் அன்றையது போலில்லை

நண்பர்கள் உலகம் ஒரு உணர்வுக்கலவையால் ஆனது. ஒரே குறுப்பில்பல்வேறுபட்ட நடத்தைக்கோலங்களுடனும் பண்புகளுடனும் நண்பர்கள்இருப்பார்கள். ஆனாலும் அவர்கள் அனைவருக்கும் பொதுவாக இருப்பது – நட்பு. எனது கல்லூரி வாழ்க்கையிலும் ஒரு நட்பு வட்டம் உருவானது. அது எங்களதுராகிங்க் காலத்தில் உண்டானது. ஒவ்வொருவரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில்இணைந்து கொண்டவர்கள். ஆனால் கல்லூரி முடியும் வரை ஒன்றாகவேஇருந்தோம். அதன் பின் ஆளுக்கொரு திசையாக சிதறிப்போனது வேறு கதை.இப்போது ஒவ்வொருவரும் எங்கெங்கோ? சிலர் தொடர்பெல்லைக்கு அப்பால் கூட.. விடுமுறைக்காக ஊருக்கு செல்லும் காலங்கள் மிக மிக சுவாரசியத்தினையும்உற்சாகத்தினை ஏற்படுத்துவதாக ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் இப்போது மிகசலிப்பாகவும், எப்படா இந்த விடுமுறை முடியும் மீண்டும் ஓடி விடலாம்எனத்தோன்றுகின்றது. இதற்கும் காரணம் நண்பர்களே. முன்பு, ஊருக்குப்போனால் எல்லோரும் ஊரில் இருப்பார்கள், முழ் நாளும் அவர்களுடனே பொழுதுபோகும், எங்களுக்கென்று ஒரு மரத்தடி , பக்கத்தில் ஒரு பெட்டிக்கடை, பேச பைநிறைய விசயங்கள், பழங்கதைகள் என காலம் போவதே தெரியாது. இதுவும்சலித்தால், வண்டி எடுத்துக்கொண்டு கிளம்பினால், ஐந்தாம் கட்டை வாய்க்காலில்ஒரு குளியல். பின் திரும்பி அங்குள்ள வயல் கடையில் சுடச்சுட பிட்டு… ஆஹா….அது ஒரு வசந்த காலம். இப்போது , விடுமுறைக்கு செல்கின்ற வேளைகளில்ஊரில் யாருமில்லை. மரத்தடி பெட்டிக்கடை,வாய்க்கால் எல்லாம் இன்னொரு குழுவால்முற்றுகை இடப்பட்டிருக்கும். முன்பு தூங்க மட்டும்பிரிந்த அதே நண்பர்கள் இப்போது , சொந்த சொந்தவேலைகள் பிரச்சினைகளுடன், எங்காவது வீதியில்கண்டால் கூட, வந்தது பற்றி, போவது பற்றியும்இன்ன பிற வழமையான வினாக்களுடன் அந்தஐந்து நிமிட சந்திப்பு நிறைவுறும். போகும் போதுநிச்சயமாக, “மச்சான் ப்றியா ஒரு நாளைக்குகதைப்போம். கட்டாயம் வாறன்” என்றுசொல்லுவான். ஆனால் நிச்சயமாக நடக்காது.பிறகென்ன நாம் வீட்டில் மோட்டினைபார்த்துக்கொண்டு படுத்திருந்துவிட்டு, பெட்டியைஇரண்டு நாட்கள் முன்பு கட்ட வேண்டியதுதான். ஆனால் உண்மையில் இது யதார்த்தம். வாழ்க்கையின் ஒவ்வொரு படிகளிலும்உண்டாகும் மாற்றங்கள் மனிதர்களினை வேறு திசைக்கு இழுத்துச்சென்றுவிடுகின்றது. அதிலிருந்து யாரும் தப்ப முடியாது எனினும் , மாறுகின்ற வேகத்தில்சில ஏற்ற இறக்கங்கள் காணப்படலாம். அதுதான் என்னைப்போன்ற சிலரைதொல்லைப்படுத்துகின்றது. இப்போது எனது குழாமில் திருமணம் எனும் அபாயத்திற்குள் ( @#!!#@ )அகப்படாமல் இருக்கும் ஒரே ஒரு ஆத்மா நான் மட்டுமே! அதனால் என்னால் முன்புஎப்படி இருந்தேனோ அப்படியே இருக்க முடிகின்றது. பின்னிரவில் வீடு செல்லமுடிகின்றது , விரும்பியவாறு சுற்ற முடிகின்றது என எல்லாம் ..கிறது.  ஆனால்நண்பர்களின் நிலை அவ்வாறில்லை, திருமணம் முடித்தவன் , 9 மணி என்பதைஏதோ ஒரு மிரட்சியுடந்தான் நோக்குவான். பிந்திப் போனால் என்ன தண்டனைகிடைக்குமோ அவனுக்கு நான் அறியேன். ஆனால், இப்போது அவனுக்கானநிகழ்ச்சி நிரல்களில் அவனது மனைவி மற்றும் அது சார்ந்த விடயங்கள் மட்டுமேஉள்ளன. இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்று. அவனுக்கு மனைவி என்பதுபோல.. எப்படி என்றாலும் – நட்புக்கள் இப்போதும் உண்டு, ஆனாலும் அன்றையதுபோலில்லை.

பகிர:

கேலிச்சித்திரங்கள்!

காலைப்பரபரப்புக்கள் எல்லாம் முடிந்து கொஞ்சம்ஆசுவாசபடுத்திக்கொள்ளும் அவகாசம் காலை வேளைகளில் ஒரு 10மணியளவில் கிடைக்கும். ஒரு கப் தேனீரோடு, பத்திரிகையினை புரட்டுகின்றநேரம் அது.செய்திகளினை பார்க்கும் முன் நான் பார்க்கின்ற ஒன்று, கார்ட்டூன்கள்/கேலிச்சித்திரங்கள், மிக இயல்பான நகைச்சுவையோடு காணப்படும்அக்காமிக்ஸ் கார்ர்ட்டூன்கள் முழு நாளினையும் இயல்பாக்குவதாக நான்உணர்கின்றேன். எளிய ஆங்கில நடையில் அதில் காணப்படுகின்ற எள்ளல் நினைத்துச்சிரிக்கும்ரகம்.. Garfield, The Wizard of ID, Andy Capp , Calvin and Hobbes, Dilbert என்பன இங்குள்ளபத்திரிகைகளில் வெளிவருகின்ற எனக்குப்பரிச்சயமான காமிக்ஸ்கேலிச்சித்திரங்கள், Nancy என்றொரு காமிக்ஸ் கேலிச்சித்திரம் பற்றியநினைவுகளும் உண்டு.Garfield ஒரு சோம்பேறிப்பூனை, அதன் உரிமையாளச் சிறுவனும் அப்பூனைபோலத்தான். Jon Arbuckle அவனது நாய் Odie என்பவற்றின் அதகளம்தான் Garfieldகாமிக்ஸ். அப்பூனையினால் Jon படும் பாடுகள். அச்சோம்பேறி பூனை அவன்வளர்க்க முனையும் மீனினை லபக்கும் முயற்சிகள், Garfield க்கும் எலிகளுக்கும்இடையிலான நட்பு என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விடயத்துடன் மிகரசனையான ஒரு காமிக்ஸ் இது. தற்போது Garfield ஒரு வியாபார சின்னமாகிபொருளாதார ரீதியிலும் முக்கியம் பெற்றுள்ளதாக தெரிகின்றது. அதேபோலத்தான்  The Wizard of ID, ID எனும்கற்பனை ராச்சியத்தை ஆளும் மன்னர்மற்றும் அவரது பிரதானிகள் எனநகைச்சுவையாய் செல்கின்றாது. இவர்களின்ராச்சியத்தினை எதிர்து போர் புரியும்இன்னுமொரு காட்டுவாசிகள் குழுவ்க்கும்இவர்களுக்குமான போர்கள், மன்னர் மக்களுக்கு விதிக்கும் சட்டதிட்டங்கள், என அனைத்தும் கேலியின் முழு வடிவம். ID மன்னரின் மந்திரவாதியினால்நடாத்தப்படும் பரிசோதனைகள் இன்னும் சிரிப்புத்தருகின்றன. Andy Capp ஒரு சோம்பேறி கணவனும் அவரது மனைவிபற்றிய கேலிச்சித்திரம்.. எப்போதும் பார் தூக்கம்என்றிருக்கும் அவர், வீட்டு வேலை இடைக்கிடையே தனதுஅழகு என்பன பற்றிய கவலை கொள்ளும் அவர் மனிவிஎன செல்கின்றது இது. மனைவி வேலையில் மூழ்கிஇருக்க, அவரோ ஷோபா வில் துன்ங்கிக்கொண்டோகுடித்துக்கொண்டோ இருப்பார். அதோடு இல்லாமல் அவர்கொடுக்கும் கமண்டுகள் சிரிக்க விஅக்கும்.இக்கேலிச்சித்திரங்களை காணும் போது எமதுசமூகத்தின் கணவன் மனிவி உறவு, ஆண் மேலாதிக்கம் பற்றிய சிந்தனைகள்கொஞ்சம் எட்டிப்பார்ப்பதை தவிர்க்க முடியாதுள்ளது. Calvin and Hobbes பற்றி அனைவருக்கும் தெரிந்து இருக்கலாம். Calvin 6 வயது சுட்டி, சுட்டி என்றால், குறும்பு, கொஞ்சம் சோம்பேறித்தனம், சுயநலம், அடாவடி, Creative, சமயோசிதம் என அனைத்தும் கலந்த கலவை. அவனது புலி பொம்மையின் பெயரே Hobbes. அதோடு…

பகிர:

Conspiracy சமைப்பது எப்படி ??

ரொம்ப சிம்பிள்! நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக உருவாகிக் கொண்டிருக்கும் Conspiracy கள் தொடர்பில் இணையம் திணறிக்கொண்டிருக்கின்றது. Reddit போன்ற வலைத்திரட்டிகளில் யார் எவர் என்றே தெரியாத பலரும் கண்ட கேட்ட, ஏன் கேட்காத விடயங்கள் என எதுவெல்லாம் கிடைக்கின்றதோ கிடைப்பதை வைத்து Conspiracy களை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றனர். எந்தவொரு விடயத்தையும் Conspiracy வட்டத்துக்குள் கொண்டுவரும் சாத்தியத்தை இணையம் வழங்குவதாக துறை சார்ந்த்தோர் கூறுகின்றனர். MS Paint உம் ஒரு புகைப்படமும் கொஞ்சம் தான் சொல்லப்போகும்…

பகிர:

முரளி காலத்து அரசியல் ஆசை!

அரசியலில் எதையாவது வெட்டிமுறிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுவதும் அதை நடைமுறைப்படுத்த சில பல சம்முவ அக்கறை குத்துக்கரணங்களை அடிப்பதும் சகஜம்தான் அதற்கு – உள்ளே உள்ள ஆசையினை உரிய இடத்தில் கொட்டி பெற வேண்டியதைப் பெற்று, அமோக ஆதரவுடன் உள்ளூராட்சி தொடங்கி பாராளுமன்றம் வரை போய்க்கொண்டே இருக்கலாம்! முடியுமென்றால், சனாதிபதியாகக் கூட முயற்சிக்கலாம்! ( காசா பணமா? முயற்சிதானே! ) ஆனால் நடப்பதோ வேறு, நேரடியாக சொல்லவும் தயக்கம்! குறிப்பால் சொல்வதிலும் ஒரு பயம்! இருந்தும்…

பகிர:

பொஸ்! கொஞ்சம் வெலகுறயளா

கடற்கரைவீதி!மோட்டார் வாகனங்கள் பின்னிப் பிணைந்து கிடந்தன! வாகனநெரிசல்! ஒரு நீண்ட தலைமுறை இடைவெளியினை உணரக் கிடைத்த தருணம் எனக்கு வாய்த்தது!வித விதமான மோஸ்தர்களில் ஆடை அலங்காரம் தொடங்கி சிகை அலங்காரம் மற்றும் தாடி என நமது இளைஞர்களின் அதீத வளர்ச்சி ஒரு புறம் என்றால், வாயிலிருந்து வருகின்ற வார்த்தைகளின் நெடி மறுபுறம்! இடம் பொருள் ஏவல் என எதுவுமில்லாமல் சரளமாக…! “பொஸ்! கொஞ்சம் வெலகுறயளா?” என்ற குரல் கேட்டு திரும்பினேன்! தெரிந்த ஒரு பதின்ம வயது இளைஞன்! அரைக்…

பகிர:

நீங்க சொல்றது வேறவா

அருகில் உள்ள அலுவலகம் ஒன்றில் பாதுகாப்பு கடமையில் நமது நாட்டைச் சேர்ந்த ஒருவர் பாதுகாப்பு கடமையில் இருக்கின்றார். காணும் போது குசலம் விசாரிப்பதும், நாட்டு நிலமை பற்றி எதையாவது கதைப்பதும் வழமை.! இப்போதெல்லாம் ஆளைக் கண்டால் தெறித்தோடும் நிலை! காரணம் – MLM ( Multi Level Marketing ) யாரோ நம்நாட்டு பெரும்பான்மை ஒருவன் இழுத்துவிட்டிருக்கின்றான், காசு கொட்டும் என ஆசை வார்த்தைகள் வேறு. 1500 திர்ஹம்களுக்கு அழகு சாதனப் பொருட்களை ஆளின் தலையில் கட்டிவிட்டான்….

பகிர:

பணம்!

இப்றாலெப்பைக்கு அவர் சொந்தம்!! திரும்ப திரும்ப யோசித்தும்.. சொந்தம் தான்!! உறுதிப்படுத்திக் கொண்டான்! சிறுவயதில், ஓரளவு அறிமுகம் இருந்தது! நெருங்கிய சொந்தமென்றாலும், ஓரளவுதான் அறிமுகம்! காரணம்.. மிக எளிது! பணம் பறித்த குழியில் இப்றாலெப்பை இருக்க அது பறித்தப் போட்ட மேட்டில் அவர் இருந்தார்! அதனால், இப்றாலெப்பை எல்லாம் அவர் + அவர் குடும்பத்திற்கு பொருட்டே இல்லை! உயிருள்ள ஏதாவது ஒன்றென மட்டும் அவர்கள் அவனை கணித்திருப்பர். காலம் சுழல, இதோ இன்று – வலிமா ஒன்றில் அவரைக் கண்டதும்…

பகிர:

பெயரில்லா உறவொன்று

அன்று மிக அவசரம் வேலையினை முடிக்க வேண்டும். கம்பியூட்டரில் மூழ்கிக்கொண்டிருந்தேன்.“அண்ணே…..” குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தேன். ஹோட்டலில் துப்பரவுப்பணியில் ஈடுபடும் ஒருவர், வயசு 35 க்கு மேல் இருக்கும். முகத்தில் சோக ரேகை முழுதாக மூடியிருந்தது.என்ன? என்பது போல என்ற பார்வைக்கு, “உங்க ஆபிஷ கிளீன் பண்ண சொல்லி சூப்பர்வைசர் அனுப்பிச்சார்………….” என்றவாறு இழுத்தார். அவரின் பேச்சும் நடைத்தையும் என்னை அசௌகரியப்படுத்தின. வரிக்கு வரி எனக்கு அவர் மரியாதை செய்வது எனக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. “இந்தியாவா??”“ஆமா சார்..”“பெய்ரென்னங்க?”“கண்ணன்…

பகிர: