வேர்ச்சுவல் பிரச்சார மேடைகள்

அனைத்திலும் ஒரு அங்கமாகிவிட்ட சமூக வலைத்தளங்களின் பங்கு அரசியலையும் தீர்மானிக்கும் நிலை வரை வளர்ந்துவிட்டது! இச்சமூக ஊடகங்களை வேர்ச்சுவல் பிரச்சார மேடைகள் என கூறுவதிலும் தப்பில்லை. டொனால்ட் ட்ரம்ப் தொடங்கி மோடி முதல் எமது கோத்தாபய வரை சமூக ஊடகங்கள் இவர்களின் வெற்றிக்கு பெரும் பங்கினை ஆற்றியுள்ளன. (மோடியின் முதலாவது வெற்றி அதன் பின்னால் நின்றுழைத்த பாரதிய ஜனதா கட்சியின் சமூக ஊடகவல்லுனர்களின் உழைப்பு போன்றன தொடர்பில் பல்வேறு கட்டுரைகளும் ஆய்வுகளும் விமர்சனங்களும் இணையமெங்கும் விரவிக் கிடக்கின்றன….

பகிர:

மத்திய வங்கி ஊழல் : திருடாமல் திருடிய கதை

மத்திய வங்கி ஊழல்! நிறையப்பேரினால் மெல்லப்பட்டாலும், என்ன அது எனக்கேட்டால், பெரிதாக விபரம் வராது, சிதம்பரச் சக்கரத்தை பேய் பார்த்த கதைதான்! மத்திய வங்கிக் கொள்ளை என அரசியல் தரப்பால் விழிக்கப்படும் இவ்வூழல் தொடர்பான கற்பிதங்கள் பெரும்பாலும் பிழையாகவே பொதுமக்களிடையே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது நாட்டிற்கான இழப்புத்தான்! ஊழல்தான்! ஆனால் எப்படியான ஊழல் என்பதில நமக்கும் கொஞ்சம் தெளிவிருக்க வேண்டியது அவசியமாகின்றது. சாதாரண ஒரு வழிப்பறித் திருட்டோ, கத்தலோ அல்ல இது! அது போன்று யோசிக்கவும் முடியாத ஒரு…

பகிர:

இலங்கை : அரசியல் பகடையாட்டம்

கொடுங்கோல் மன்னன் ஒருவனுக்கு தனது இறுதிகாலத்தில் ஒரு ஆசை! “எப்படா இவன் ஒழிவான் எனக் காத்திருக்கும் தன் மக்கள் தான் இறந்த பிறகு தன்னையும் தனது ஆட்சியினையும் புகழ வேண்டும்! ” நடக்கிற காரியமா?? செத்ததும் வெடி வெடித்து கொண்டாட காத்திருக்கும் மக்கள் எப்படி இவனை நல்லவன் என்பர்? நப்பாசைதான்! இருந்தும் மரணத் தறுவாயில் தனக்கு அடுத்து அரியணை ஏறக் காத்திருக்கும் தனது மகனிடம் சொல்லிவிட்டு கண்ணை மூடிவிட்டான்! இப்படி ஒரு சோதனையா? ஏழு கடல் ஏழு…

பகிர:

நிறைவேற்றதிகார ஒழிப்பில் மனம் தளரா விக்கிரமாதித்தன் – ஜேவிபி

20வது தனிநபர் பிரேரணையும் JVP யும்   தனிநபர் பிரேரணையாக நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கான யாப்புச் சீர்திருத்தத்தினை கோரி JVP 20 வது திருத்தத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது. நிறைவேற்றதிகாரமும் தொடர்ச்சியாக ஏமாற்றப்படும் ஜேவிபியும் மற்றொரு புறம். நிறைவேற்றதிகாரத்தை ஒழிப்போம் எனக் கூறி ஆட்சிக் கட்டில் ஏறும் அனைத்து ஜனாதிபதிகளும் அதிகாரம் கைகளிற்கு வந்ததும் அதைக் கிடப்பில் போடும் வரலாறே இலங்கை அரசியலில் காணக் கிடைத்துள்ளது. அதன் நீட்சியாக, JVP இன் இவ்விருபதாவது திருத்தத்தினை ஆதரிக்கப் போவதில்லை என சுதந்திரக்…

பகிர:

நிலமெல்லாம் ரத்தம்

” காஸா பிரச்சினைல இவனுகள் சத்தம் போடாம இருக்கானுகள் பாத்தாயா” அரட்டையில் பேச ஒன்றுமில்லாத சந்தர்ப்பத்தில் நண்பன் ஆரம்பித்தான். “ம்…” என்றிழுத்தேன். பலஸ்தீன் என்றாலே நெஞ்சு நிமிர்த்தி போருக்கு தயாராவன் போல இருந்தது அவனது முக பாவனை! “இந்த இஸ்ரேலிய …….. களின் ப்றொடக்ட் கள மொத்த முஸ்லிம் சமூகமும் புறக்கணிச்சாலே போதும் எலா! அவனுகள்ர மொத்த எகொனமியும் டவுன் ஆகிடும்.” என்றவாறு மேலும் ஏதோ சொல்ல ஆரம்பிக்க, நான் கொஞ்சம் அயர்ச்சியுடன் அவனது பொங்கலை வேடிக்கை பார்க்க…

பகிர:

மக்கள் சேவைக்காக .. உங்கள் நண்பன்

மழை பெய்தால் வீதியே வெள்ளக்காடாகும் பகுதி என்பதால், மாரி என்பது எப்போதும் எங்களுக்கு பிரச்சனைதான், ஏதாவது செய்யமுடியுமா என ஒரு மாரியில் தெரு பெரியவர்கள் சேர்ந்து ஆலோசித்து இறுதியில் அப்போது ஆட்சியில் இருந்த குறுநில மன்னரை சந்திக்கலாம் என முடிவெடுத்துப் பார்க்க சென்றிருந்தோம். ஏக கெடுபிடிகளுக்கு பிறகு, மன்னரின் தரிசனம் கிடைத்தது, சிம்மாசனத்தில் மன்னர் கம்பீரமாக ஒருக்களித்தவாறு உட்கார்ந்திருந்தார், வந்திருந்த குடிமக்களை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் கருமமே கண்ணாக இருந்தார். ஒரு கையில் சிகரட் புகைந்து…

பகிர:

Conspiracy சமைப்பது எப்படி ??

ரொம்ப சிம்பிள்! நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக உருவாகிக் கொண்டிருக்கும் Conspiracy கள் தொடர்பில் இணையம் திணறிக்கொண்டிருக்கின்றது. Reddit போன்ற வலைத்திரட்டிகளில் யார் எவர் என்றே தெரியாத பலரும் கண்ட கேட்ட, ஏன் கேட்காத விடயங்கள் என எதுவெல்லாம் கிடைக்கின்றதோ கிடைப்பதை வைத்து Conspiracy களை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றனர். எந்தவொரு விடயத்தையும் Conspiracy வட்டத்துக்குள் கொண்டுவரும் சாத்தியத்தை இணையம் வழங்குவதாக துறை சார்ந்த்தோர் கூறுகின்றனர். MS Paint உம் ஒரு புகைப்படமும் கொஞ்சம் தான் சொல்லப்போகும்…

பகிர:

வடக்கு – கிழக்கு இணைவின் சாத்தியங்கள்!

ஏதோ நாளை நிகழப் போகும் ஒரு சம்பவம் போல வடக்கு கிழக்கு இணைவு தொடர்பில் செயற்கையான ஒரு பதட்டத்தினையும் போலிக் கருத்துருவாக்கத்தினையும் உண்டாக்க நினைக்கும் “தூய” அறவழிப் போராளிகள் சில விடயங்களை தங்கள் வசதிக்காக மறந்துவிட்டு ஒப்பாரி சொல்கின்றனர். இது தொடர்பில் அவர்கள் கள்ள மௌனம் காக்கும் பல விடயங்களில் பிரதானமானது, 1. இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பின் படி இரு மாகாண இணைவுக்கான சட்ட ஏற்பாடுகள் என்ன?2. ஒற்றையாட்சித் தத்துவத்தை உறுதிப்படுத்தும் அம்சமான ஆளுநருக்குள்ள அதிகாரங்களும் மாகாண…

பகிர:

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைமை!

கலப்புத் தேர்தல் முறையின் நோக்கமே! விகிதாசார தேர்தல் முறை , தொகுதிவாரி தேர்தல் முறை என்பனவற்றில் காணப்படுகின்ற குறையினை ஓரளவுக்கவது நிவர்த்தி செய்து ஜனநாயகத் தன்மையினை பேணுவதும், வாக்குரிமைக்கு மதிப்பளித்தலுமாகும். கலப்புத் தேர்தல் முறைமை – வாக்காளர்களின் தெரிவுகளை துல்லியமாக இல்லாவிட்டாலும் விகிதாசார மற்றும் தொகுதிவாரி தேர்தல் முறையினை விட கூடுதலாக தேர்வு செய்ய உதவுகின்றது. உள்ளூராட்சி முறையில் தற்போது அறிமுகமாகியுள்ள இம்முறை 60:40 என்ற அடிப்படையில் நடைபெற்ற ஒரு தேர்தல் முறை! அதாவது தெரிவு செய்யப்பட்ட…

பகிர:

“மோடி” எனும் விளம்பரப் பண்டம்!

அயல்நாட்டில் 2014ல் நடந்த பொதுத் தேர்தல் தொடர்பில் இன்னும் பல வியாபார வல்லுனர்களும், சந்தைப்படுத்தல் துறை சார்ந்தவர்களும் பேசிக் கொண்டிருக்கின்றனர் என்றால் நம்ப முடிகின்றதா? அரசியலுக்கும் வியாபாரத்துறைக்கும் பல்வேறு இருட்டறைச் சம்பந்தங்கள் இருந்தாலும், வெளிப்படையாக இத்தேர்தல் பேசப்படக் காரணம் – மோடி! 2014 இன் இந்தியப் பொதுத்தேர்தல் அரசியல் என்பதையும் தாண்டி, “மோடி” எனும் அடையாளம் எப்படி ஒரு Brand ஆக இந்திய மக்களிடம் சந்தைப்படுத்தப்பட்டது என்பது இன்றும் பல்வேறு இடங்களில் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றது. கொள்கை, மக்கள் செல்வாக்கு, ஆளுமை…

பகிர: