விபத்து : சாவினை இறைத்து வைத்திருக்கும் வீதிகள்

இன்று நண்பகலில் எனது அலுவலகத்திற்கு முன்னுள்ள நெடுஞ்சாலையில் ஒரு விபத்து. அனேகமாக பாகிஸ்தானிய பெண்ணாக இருக்க வேண்டும். வீதியினை கடக்க முயற்சிக்கும் போது, வேகமாக வந்த காரினால் அடிக்கப்பட்டு தூக்கி எறியப்பட்டுள்ளார். சுமார் 15 அடி வரைக்கும் அவரது உடல் தூக்கி எறியப்பட்டுள்ளது. பிழை அப்பெண்மணி மீதுதான். வீதியினை பாதுகப்பற்ற முறையில் கடக்க முற்பட்ட போது நிகழ்ந்த அவலம் இது.இங்கு இவ்வாறான விபத்துக்கள் வழமையாகி விட்டது. பெரும்பான்மையான விபத்துக்கள் இவ்வாறானவையாகத்தான் இருக்கின்றன. அவசர அவசரமாக வீதியினை கடக்க முற்படுவதால்…

பகிர:

கேலிச்சித்திரங்கள்!

காலைப்பரபரப்புக்கள் எல்லாம் முடிந்து கொஞ்சம்ஆசுவாசபடுத்திக்கொள்ளும் அவகாசம் காலை வேளைகளில் ஒரு 10மணியளவில் கிடைக்கும். ஒரு கப் தேனீரோடு, பத்திரிகையினை புரட்டுகின்றநேரம் அது.செய்திகளினை பார்க்கும் முன் நான் பார்க்கின்ற ஒன்று, கார்ட்டூன்கள்/கேலிச்சித்திரங்கள், மிக இயல்பான நகைச்சுவையோடு காணப்படும்அக்காமிக்ஸ் கார்ர்ட்டூன்கள் முழு நாளினையும் இயல்பாக்குவதாக நான்உணர்கின்றேன். எளிய ஆங்கில நடையில் அதில் காணப்படுகின்ற எள்ளல் நினைத்துச்சிரிக்கும்ரகம்.. Garfield, The Wizard of ID, Andy Capp , Calvin and Hobbes, Dilbert என்பன இங்குள்ளபத்திரிகைகளில் வெளிவருகின்ற எனக்குப்பரிச்சயமான காமிக்ஸ்கேலிச்சித்திரங்கள், Nancy என்றொரு காமிக்ஸ் கேலிச்சித்திரம் பற்றியநினைவுகளும் உண்டு.Garfield ஒரு சோம்பேறிப்பூனை, அதன் உரிமையாளச் சிறுவனும் அப்பூனைபோலத்தான். Jon Arbuckle அவனது நாய் Odie என்பவற்றின் அதகளம்தான் Garfieldகாமிக்ஸ். அப்பூனையினால் Jon படும் பாடுகள். அச்சோம்பேறி பூனை அவன்வளர்க்க முனையும் மீனினை லபக்கும் முயற்சிகள், Garfield க்கும் எலிகளுக்கும்இடையிலான நட்பு என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விடயத்துடன் மிகரசனையான ஒரு காமிக்ஸ் இது. தற்போது Garfield ஒரு வியாபார சின்னமாகிபொருளாதார ரீதியிலும் முக்கியம் பெற்றுள்ளதாக தெரிகின்றது. அதேபோலத்தான்  The Wizard of ID, ID எனும்கற்பனை ராச்சியத்தை ஆளும் மன்னர்மற்றும் அவரது பிரதானிகள் எனநகைச்சுவையாய் செல்கின்றாது. இவர்களின்ராச்சியத்தினை எதிர்து போர் புரியும்இன்னுமொரு காட்டுவாசிகள் குழுவ்க்கும்இவர்களுக்குமான போர்கள், மன்னர் மக்களுக்கு விதிக்கும் சட்டதிட்டங்கள், என அனைத்தும் கேலியின் முழு வடிவம். ID மன்னரின் மந்திரவாதியினால்நடாத்தப்படும் பரிசோதனைகள் இன்னும் சிரிப்புத்தருகின்றன. Andy Capp ஒரு சோம்பேறி கணவனும் அவரது மனைவிபற்றிய கேலிச்சித்திரம்.. எப்போதும் பார் தூக்கம்என்றிருக்கும் அவர், வீட்டு வேலை இடைக்கிடையே தனதுஅழகு என்பன பற்றிய கவலை கொள்ளும் அவர் மனிவிஎன செல்கின்றது இது. மனைவி வேலையில் மூழ்கிஇருக்க, அவரோ ஷோபா வில் துன்ங்கிக்கொண்டோகுடித்துக்கொண்டோ இருப்பார். அதோடு இல்லாமல் அவர்கொடுக்கும் கமண்டுகள் சிரிக்க விஅக்கும்.இக்கேலிச்சித்திரங்களை காணும் போது எமதுசமூகத்தின் கணவன் மனிவி உறவு, ஆண் மேலாதிக்கம் பற்றிய சிந்தனைகள்கொஞ்சம் எட்டிப்பார்ப்பதை தவிர்க்க முடியாதுள்ளது. Calvin and Hobbes பற்றி அனைவருக்கும் தெரிந்து இருக்கலாம். Calvin 6 வயது சுட்டி, சுட்டி என்றால், குறும்பு, கொஞ்சம் சோம்பேறித்தனம், சுயநலம், அடாவடி, Creative, சமயோசிதம் என அனைத்தும் கலந்த கலவை. அவனது புலி பொம்மையின் பெயரே Hobbes. அதோடு…

பகிர:

வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள்

வாசிப்பில் கிடைக்கும் அனுபவம் புதிய தலைமுறைக்கு கிட்டவே இல்லை என்பதை விட, அவர்கள் அதை நிராகரித்தே விடுகின்றனர். ஏன் வளர்ந்தவர்களும் கூடத்தான். எமது வாசிப்பின் எல்லை ஒரு சினிமா செய்தியுடனோ, அல்லது அது சார் கிசு கிசுக் களுடனோ… அதையும் தாண்டி என்றால் ஒரு கற்பழிப்பு செய்தி பற்றிய சுவாரசியத்துடனோ முடிந்து விடுகின்றது. இதில் உள்ள இன்னொரு பிரச்சினை என்னவென்றால், உண்மையான வாசகர்களை கண்டு கொள்வது மிக அரிதாக போய்விட்டது. அன்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்ற அவர்கள் தனித் தீவு…

பகிர:

பொதுச்சேவை சத்தமாக நக்கலுடன் எகத்தாளமிட்டுச் சிரித்துக் கொண்டிருந்தது!

அலுத்துக் களைத்து அறை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தேன்.. இருப்பது 6 வது மாடியில் என்பதால், படிக்கட்டுகளைப் பற்றி எப்போதும் எண்ணிப்பார்ப்பதில்லை. (உடம்பு இளைத்தால் என்ன ஆவது!! ) பல நேரங்களில் லிப்டிற்குள் இடம் பிடிப்பதென்பது அக்கரைப்பற்று கல்முனை பஸ்ஸில் சீட் கிடைப்பது போல ரொம்ப அபூர்வம். ஆனால், இன்று ஏனோ யாரும் இல்லை. தனியனாக லிப்டினை எதிர்நோக்கி நின்று கொண்டிருந்தேன்.  வாய் பிளந்து நின்ற லிப்டில் ஏறி, கதவை மூட முயலும் போது, மூச்சிரைக்க இரைக்க ஒரு நடுவயது…

பகிர:

மறுவாழ்க்கைக்காக ஒழச்சிக்கி இரிக்கார்

அஸ்ஸலாமு அலைக்கும்! எங்க ஆளக்க்காணல்ல! “இருக்கம்! கிட்டத்தில ரூம் மாறின! “ ஆ! என்ன கேஸ்? ஏன்!! நீங்க XXXXX ட எலா இருந்த! “ஓவ்! அத கேக்காதங்கோ! எங்கிட ஊராக்கள் இல்ல என்டு அவரோட செட் ஆகி இருந்த, அவர் நமக்கு பாத்தார் ஒருவேல!!” ??? இப்ப XXXXX ஓட இல்லயா? “பாத்த வேலைக்கு இரிக்கிறா இன்னம்?” ?? “ரூம்ல தண்ணி கரண்ட் கட் பண்ணிட்டானுகள்! ரெண்டு நாள் ஒரு மாதிரியா மெனேஜ் பண்ணிட்டம்! மூணாவது…

பகிர:

பெயரில்லா உறவொன்று

அன்று மிக அவசரம் வேலையினை முடிக்க வேண்டும். கம்பியூட்டரில் மூழ்கிக்கொண்டிருந்தேன்.“அண்ணே…..” குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தேன். ஹோட்டலில் துப்பரவுப்பணியில் ஈடுபடும் ஒருவர், வயசு 35 க்கு மேல் இருக்கும். முகத்தில் சோக ரேகை முழுதாக மூடியிருந்தது.என்ன? என்பது போல என்ற பார்வைக்கு, “உங்க ஆபிஷ கிளீன் பண்ண சொல்லி சூப்பர்வைசர் அனுப்பிச்சார்………….” என்றவாறு இழுத்தார். அவரின் பேச்சும் நடைத்தையும் என்னை அசௌகரியப்படுத்தின. வரிக்கு வரி எனக்கு அவர் மரியாதை செய்வது எனக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. “இந்தியாவா??”“ஆமா சார்..”“பெய்ரென்னங்க?”“கண்ணன்…

பகிர:

விபத்து : சாவினை இறைத்து வைத்திருக்கும் வீதிகள்

இன்று நண்பகலில் எனது அலுவலகத்திற்கு முன்னுள்ள நெடுஞ்சாலையில் ஒரு விபத்து. அனேகமாக பாகிஸ்தானிய பெண்ணாக இருக்க வேண்டும். வீதியினை கடக்க முயற்சிக்கும் போது, வேகமாக வந்த காரினால் அடிக்கப்பட்டு தூக்கி எறியப்பட்டுள்ளார். சுமார் 15 அடி வரைக்கும் அவரது உடல் தூக்கி எறியப்பட்டுள்ளது. பிழை அப்பெண்மணி மீதுதான். வீதியினை பாதுகப்பற்ற முறையில் கடக்க முற்பட்ட போது நிகழ்ந்த அவலம் இது. இங்கு இவ்வாறான விபத்துக்கள் வழமையாகி விட்டது.  பெரும்பான்மையான விபத்துக்கள் இவ்வாறானவையாகத்தான் இருக்கின்றன. அவசர அவசரமாக வீதியினை…

பகிர:

நான்தான்…… நான்தான்…….. ஏமாந்த சோணகிரி………

காலையில் அலாரம் அலறும் போது ஆரம்பிக்கும் வெறுப்பினை, எனது மனேஜரின் மீதான வசை பாடலுடன் ஆரம்பித்துவிடுவேன் ஏதோ பள்ளி எழுச்சி போல..  அவர் ஒன்றும் அப்படி மோசமில்லை என்பது போல்த்தான் தோன்றும்.. ஆள் எமகாதகன்.. கொடுத்த வேலையினை சரியாக முடிக்கும் வரை விடமாட்டார் அதன் தீவிரம் கோப்புக்களின் வரிசைக்கிரமம் வரை தொடரும். அதனால் அதிகம் அழுவது (வடிவேலுவைப்போல்….. அவ்…… முடியல..) நானாகத்தான் இருக்கும்.  அன்று வியாழக்கிழமை என்பதால் எல்லோரும் சுறுசுருப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர். வேறொன்றுமில்லை நாளை வெள்ளி அல்லவா…….. அதுதான்… அவசர அவசரமாக வேலைகளினை முடித்து…

பகிர:

இப்போது , அவனது முறை…

நீண்ட நேர போராட்டத்திற்கு பின் அழைப்புக்கு வந்தான் அவன், “குட் மோர்னிங்க் சேர்! ஐ அம் கோலிங்க் ப்ரம் xxxxxxx கம்பனி, இஸ் தேர் எனி செக் போர் அஸ்?” என்ற என் பணிவான குரலுக்கு “ நோ “ என்றவாறு பதிலுக்கு காத்திராமல் தொலைபேசி அறைந்து சாத்தப்பட்டது.நான் ஒரு கணக்காளன். சில வேளைகளில் இது போன்ற சந்தர்ப்பங்கள் எனக்கும் கிட்டிவிடுகின்றன.இது ஒன்றும் புதிதில்லை தான். ஆனாலும் சில வேளைகளில் இவாறான உதாசீனங்கள் ஆயசாத்தைத்தான் தருகின்றன. என்ன…

பகிர:

ஒரு பிரம்மச்சாரியின் விபரீத ஆசை…

திடீரென அன்று ஒரு விபரீத ஆசை ஒன்று தோன்றியது.  தோசை!!!!!!  ஆமாம் தோசை சப்பிட வேண்டும், அதுவும் நானே சுட்டு சாப்பிட வேண்டும்.  இதில் என்ன விபரீதம் என நீங்கள் யோசிக்கலாம். அபுதாபியில் பிரம்மச்சரியாக கண்டதையும் தின்று,ருசி மறந்து, பசிக்காக மட்டும் உண்டு வாழும் ஒரு ஆத்மாவுக்கு இது விபரீத ஆசை இல்லாமல்வேறென்ன?? ஆனா, நாமெல்லாம் ஓடுற ரயில ஒத்தக்கையால அதுவும் இடக்கையாலநிறுத்தின ஆட்கள் அல்லாவா? விடுவமா!!!!!  ஒரு சுப யோக சுப தினமான வியாழன் இரவு, “ ஆபரேசன் ஒப் தோசை “ஆரம்பமானது.  என்னவென்றாலும் நான் மட்டும்தானே. அதான் கோதாவில் குதித்தாயிற்று.தோசை சுட அடுப்பு சட்டி முக்கியமாக நெருப்பு என்பன தேவை என்ற அடிப்படை அறிவு ( ??? )இருந்ததாலும், அவை கிடைக்கக்கூடியதாக இருப்பதால், தோசைக்கு வேறு என்ன தேவை எனமூளையினை கசக்கியதில், தோசை மாவு என்று அசரீரி ஒலித்தது. தோசை மாவு வாங்க, சுப்பர் மார்க்கட்டிற்குள் நுழைந்தால், இன்னும் குழப்பம். வகை வகையா, மாவுகள்எது தோசைக்கு என்பதை யாரிடம் கேட்பது?? தலையினை பிய்க்க தொடங்கும் போது, மார்க்கட் ஊழியர்வந்துவிட்டார். அவரிடம் இப்போ எந்த பாசையில கேட்பது என்ற பிரச்சினை. அனேகமாக அந்த மனிதர்இந்திக்காரராக இருக்க வேண்டும். எனது தோசை ஆசையில் ஹிந்தி ஒரு வில்லனா? எனஎண்ணிக்கொண்டே, எனது ஹிந்தி அறிவினை சபித்துக்கொண்டேன். “ கியா சாப்? “ என்றவரிடம். எனக்கு சொல்ல பதில் இல்லை. பின்ன தோசை மாவு வேண்டும் என்பதை ஹிந்தியில் சொல்ல தெரியவேண்டுமே. ஒரு வழியாக கையால் காலால் நடனமாடி புரியவைத்தபோது,அவன் சிம்பிளா,   “ஹா! தோசா” என்றான்.  அடப்பாவி, இதச்சொல்லவா இவ்வளவு ரிஸ்க் எடுத்தாய் என்ற அவன்கேவலப்பார்வைக்கு பதில் தராமல், தோசை மாவுடன் நடையினைகட்டினேன். தோச மாவு ரெடி, தோசக்கல், அடுப்பு எல்லாம் ரெடி, இனி ஆட்டம் ஆரம்பம். அபுதாபியேஉறங்கிக்கொண்டிருக்கும் ஒரு வெள்ளிக்கிழமை அதிகாலை 10 மணிக்கு ( இங்க வெள்ளி என்றால் இப்பிடித்தான் )எனது தோசை சுடும் படலம் ஆரம்பமானது.வீட்டில் அம்மா தோசை சுடுவதை பார்த்திருக்கின்றேன் என்ற தகுதியினை விட வேறென்ன தகுதிஎனக்கு வேண்டும் – இந்த தோசையினை சுடுவதற்கு. என்ற வேகத்தில் சட்டியினை பற்றவைத்தாயிற்று. மாவும் ரெடி. இனி ஆரம்பிக்க வேண்டியதுதான். என்ன தைரியமா தொடங்கினாலும்கை கொஞ்சம் வெட வெடப்பதை தடுக்க முடியல. ஆனாலும் விர்ரதா இல்ல.. இன்னைக்கு தோசையாநானா? எனப்பார்த்து விடுவது என்ற முடிவுடன், முதலாவது கரண்டி மாவினை எடுத்து கல்லில்விட்டேன்.  ஏதோ பரீட்சை முடிவுக்கு காத்திருக்கும் ஒரு மாணவனின் படபடப்பு. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்… என்ற இசையுடன் மாவு தோசக்கல்லுடன் கதை பேசியது.. “சக்ஸஸ்.”மனதுக்குள் கூவிக்கொண்டேன். நிகழப்போகும் விபரீதம் புரியாமல்.. ஊற்றிய மாவு வட்டம் போலவும் இல்லாமல் .. வேறு எந்தவொரு வடிவம் போலும் இல்லாமல்யூகிக்கவே மிக கஸ்டமான ஒரு வடிவில் இருந்தது. சரி மாவு தோசையாகிவிட்டது என்ற முடிவில்கரண்டியினை விட்டு அதை வெளியே எடுக்க முயற்சித்தேன்… ரொம்ப ரொம்ப ஐக்கியம் போல..கல்லுடன் எனது முதல் தோசை ஒட்டிக்கொண்டது. அடடா. முதல் முயற்சி தோல்வியில் முடிவதா என்ற பதை பதைப்பு தொற்றிக்கொள்ள,தோசையினையும் கல்லினையும் பிரித்துவிடுவது என்ற முடிவில் ஒரு தமிழ் சினிமாவில்லனாகிவிட்டேன்.  கரண்டியினை விட்டு ஒரு எத்து எத்தியதில் பாதி தோசை முன் சுவரில் அப்பிக்கொண்டது. ஊற்றியமாவு அதிகம் அதுதான் பிரச்சினை என ஒரு வழியாக சமாதானப்பட்டுக்கொண்டு, மீதியினையும்கழற்றி முடித்து, ரெண்டாவது ஆட்டத்திற்கு தயாரானேன். மாவினை கலந்து கரண்டியில் அள்ளும் போது, அறையில் இருந்து, “ மச்சான் டைம் போயிட்டு, பள்ளிக்கு போகணும், குளிக்காம அங்க என்னடா பண்றாய்?” கத்திக்கொண்டிருந்தான் நண்பன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் .. அதுக்குள்ள ரைம் போயிட்டா!!!!!!! ஒன்ன கூட முழுசா தோசையா பாக்கல்லியேடா!!!!!!  என்ன கொடுமை இது!!  இனி என்னத்த செஞ்சி.. என்னத்த.. நெடிய பெருமூச்சோடு, மீதி மாவினை, இனி தோசை சுடுவதென்றால் ஒரு நாள் லீவெடுத்துத்தான்சுடுவது என்ற உறுதியோடு தூக்கி கடாசிவிட்டு , பள்ளிக்கு போக தயாரானேன். அன்றைய பகல் பொழுது வழமை போல, பக்கத்து மலையாள சேட்டன்கடை சோற்றோடு இனிதே(!@!#@#@#!#$@$#) முடிந்தது.

பகிர: