பேலியோ!

பேலியோ! நீரிழிவு மற்றும் கொலொஸ்ரோல் நோய் என்பதைத்தாண்டி நம்மவர்களின் வாழ்க்கை முறை போலாகிவிட்ட காலகட்டம். இதற்கு காரணம் நமது உணவு முறைகளே என வைத்தியர்களும் சுட்டிக் காட்டுகின்றனர். அதற்கென கூறும் உணவுக்கட்டுப்பாடுகளையும் நாம் கடைப்பிடிப்பதுமில்லை. அவ்வாறு கடைப்பிடித்தாலும் இந்நீரிழிவினை கட்டுப்படுத்தலாமே ஒழிய அறவே இல்லாதொழிக்க முடியாது எனவும் கூறப்படுகின்றது. ஆனால், தற்போது, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி மனிதர்கள் உட்கொண்ட உணவு முறை எனக்கூறப்படும் கொழுப்புணவுகள் மூலமாக நமது ஊழைச் சதைகளை குறைக்க முடிவதோடு, நீரிழிவு கொலொஸ்ரோல்…

பகிர:

நிறைவேற்றதிகார ஒழிப்பில் மனம் தளரா விக்கிரமாதித்தன் – ஜேவிபி

20வது தனிநபர் பிரேரணையும் JVP யும்   தனிநபர் பிரேரணையாக நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கான யாப்புச் சீர்திருத்தத்தினை கோரி JVP 20 வது திருத்தத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது. நிறைவேற்றதிகாரமும் தொடர்ச்சியாக ஏமாற்றப்படும் ஜேவிபியும் மற்றொரு புறம். நிறைவேற்றதிகாரத்தை ஒழிப்போம் எனக் கூறி ஆட்சிக் கட்டில் ஏறும் அனைத்து ஜனாதிபதிகளும் அதிகாரம் கைகளிற்கு வந்ததும் அதைக் கிடப்பில் போடும் வரலாறே இலங்கை அரசியலில் காணக் கிடைத்துள்ளது. அதன் நீட்சியாக, JVP இன் இவ்விருபதாவது திருத்தத்தினை ஆதரிக்கப் போவதில்லை என சுதந்திரக்…

பகிர:

இது நமது 96!

96 “இந்த நொட்டுக்குத்தான் நான் ஒன்ட சைட்டுக்கு வாரல்ல! மண்ணாங்கட்டி! எந்நேரமும் ரோட்டுக்கு பீல்ட் பண்ண அனுப்பினா…” தன் வகுப்புத்தோழனும் அணி கேப்டனுமான அவனிடம் சலித்துக் கொண்டான் இவன். பாதி வளவுக்குள் பின்னேர வேளைகளில் களைகட்டும் கிரிக்கட் கச்சேரி அது..! வீதியும் எங்கள் மைதானத்துக்குள் ஒரு பகுதிதான்! அதற்கப்பாலுள்ள மதில்தான் பவுண்டரி! உடல் பருமன் என்பதாலோ என்னவோ எப்போதும் அவன், இவனைத்தான் எல்லைக்கு அனுப்புவான்.! எரிச்சலுடன் மதிலில் ( பவுண்டரி!! ) கால் குத்தி நின்றவாறு, வேறொரு…

பகிர:

எரிபொருள் விலைச் சூத்திரம் : சிதம்பரச் சக்கரத்தை பேய் பார்த்த கதை

எரிபொருள் விலைப் பொறிமுறை என்று எதை மறைத்து வைத்திருக்கின்றனர்? முந்தி எல்லாம் சும்மா ஏத்திக்கி இருந்தானுகள்!  இப்ப விலைச் சூத்திரமாம்! என்ன கருமமோ? அதச் சொல்லி ஏத்துறானுகள்!! போன்ற புலம்பல்களை சமூக வலைத்தளங்கள் தொடங்கி, தெருமுனைகளில் கூட கேட்கக்கூடியதாக இருக்கின்றது. அந்த சூத்திரத்திற்கு அமைவாக, தற்போது எரிபொருள்களுக்கான விலை மீண்டும் ஏற்றப்பட்டுள்ளது. ஆனாலும் விலைச்சூத்திரத்திற்கு அமைவாக லீற்றருக்கு 11 ரூபாவால் அதிகரிக்க வேண்டிய பொதுப்போக்குவரத்து மற்றும் மீன்பிடிப் படகுகளுக்கு பயன்படுத்தப்படும் வாகன டீசலுக்கான விலையினை மட்டும் உயர்த்தாமல்…

பகிர:

Dollar இன் நாணய மதிப்பிறக்கம் சாத்தியமா? : ஒரு சுருக்கம்!

Myth: US Dollar is money. Fact: Gold & Silver are money. US Dollar is legal tender/debt brought down to low parcels for spending purposes தற்போது சர்வதேசம் எதிர்நோக்கும் பொருளாதார மந்தம் மற்றும் நாணய மதிப்பிறக்கம் போன்றவற்றிற்கு காரணமாக கூறப்படும் அமெரிக்க Dollar ன் பெறுமதி அதிகரிப்பிற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. முக்கியமாக, திடுக்கென சனாதிபதியான ட்ரம்பின் பொருளாதார கொள்கை – உள்நாட்டு கைத்தொழில் துறையினை பலப்படுத்துவது! அதற்காக…

பகிர:

நான் துபாயில்………

அடுக்கப்பட்ட பெட்டிகள் போல பிரம்மச்சாரிகள் வாசம்..அது இங்கு விதிக்கப்பட..உடைகள் மட்டும் அடுக்கும் இடங்கள் விலக்கி எம்மை சுருக்கிகொள்வோம்.உறங்கவும் இளைப்பாறவும் என.. காலைகள் போர்க்களமாய் விடியும்..குளியலறை சாகசங்களுடன்..இடம்பிடிப்பதும்.. அவசரமான நேரக்கரைதலின் பதைபதைபோடும்..உடை தேடி, உதறி, மூட்டை தேடி நசுக்கிபின் ஓரளவு ஒப்பனைகளுடன், சிரிப்பினையும் ஒட்டிக்கொண்டு ஓடுகின்றோம்மேலாளர்களின் முட்டாள்தனங்களுக்கும் சேர்த்து கடி வாங்கவென.. கரைகின்ற பொழுதின் நீள அகலம் தெரியாத ஓர் தருணம் வயிறு தீயாகபசி போக்கும் உணவுடன் பொழுது சாய.. மீண்டும் பயணம் தொடங்கும் குடும்பம், வீடென மாறும்…

பகிர:

CIMA – ஒரு கொடுங்கனவு

90 களின் இறுதியில் CIMA என்பது ஒரு ஆடம்பர பண்டமாகத்தான் பார்க்கப்பட்டது. அதோடு, Prestige Symbol ஆகவும் CIMA இருந்தது. “ CIMA செய்றன்” “ மகன் CIMA செய்றார்” , “ இன்னார்ட மகன் CIMA செய்றானாம் கொழும்புக்கு போறான் “ போன்ற கதையாடல்கள் மிக பிரபலமும். சபைகளில் அங்கீகரிக்கப்பட்டதுமாக இருந்தன. “CIMA செய்றன்” என்பதே ஒரு தகுதியாக நோக்கப்பட்ட அந்தக்காலங்களில், அதை பற்றி கனவுகள் நிறைய என்னைப் போன்ற பொருளாதார ரீதியில் தேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட…

பகிர:

Diploma Mills

எதற்கும் ஒரு முறை பரீட்சியுங்கள் பட்டம் பெற்றது Diploma Mill இலா என! Diploma Mills என்ற வார்த்தை கேட்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும், தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒன்று, இன்று நம்மவர்கள் மத்தியில் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்பினை பெறவும் இருக்கின்ற தொழிலில் தமக்கான வேதனங்களை அதிகரிக்கவும், நிறைய பேர் கல்வித் தகமைகளை இன்னும் கொஞ்சம் கூட்டிக்கொள்ள பல்வேறு வழிமுறைகளையும் தேடி ஓடுகின்றனர். அதில் பெரும்பாலும் நாம் தேர்ந்தெடுப்பது- கஸ்டம் இல்லாமல் காசு கொடுத்தேனும் ஒரு…

பகிர:

மார்க்க தூண்கள்!

வீதிக்குள் இறங்கிய போதே, சத்தம் காதைப் பிளந்து கொண்டிருந்தது! வீட்டிற்கு முன்னால் இருந்த வெறும் வளவில் புறஜக்டர் திரையில் , அகன்ற தாடியும் வார்த்தைகளில் எகத்தாளத்துடனும் மார்க்க அறிஞர் (!) ஒருவர் கத்திக் கொண்டிருந்தார். நான்கு வீதிகள் தாண்டியும் கேட்குமளவிற்கு சத்தம் அந்த இரவின் நிசப்தத்தை குலைத்தவாறு தொடர்ந்தது ஒரு வித அசூசை யினை உண்டு பண்ணினாலும், மார்க்க சொற்பொளிவு என்பதால் என்னையே சமாதானப்படுத்திக் கொண்டேன். ஆனாலும் முன்னால் இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துக்கும் குறைந்தவர்களுக்கு எதற்காக இவ்வளவு…

பகிர:

நிலமெல்லாம் ரத்தம்

” காஸா பிரச்சினைல இவனுகள் சத்தம் போடாம இருக்கானுகள் பாத்தாயா” அரட்டையில் பேச ஒன்றுமில்லாத சந்தர்ப்பத்தில் நண்பன் ஆரம்பித்தான். “ம்…” என்றிழுத்தேன். பலஸ்தீன் என்றாலே நெஞ்சு நிமிர்த்தி போருக்கு தயாராவன் போல இருந்தது அவனது முக பாவனை! “இந்த இஸ்ரேலிய …….. களின் ப்றொடக்ட் கள மொத்த முஸ்லிம் சமூகமும் புறக்கணிச்சாலே போதும் எலா! அவனுகள்ர மொத்த எகொனமியும் டவுன் ஆகிடும்.” என்றவாறு மேலும் ஏதோ சொல்ல ஆரம்பிக்க, நான் கொஞ்சம் அயர்ச்சியுடன் அவனது பொங்கலை வேடிக்கை பார்க்க…

பகிர: