என்னைப் பற்றித் தானே கதைத்தீர்கள்?

” என்னைப் பற்றித் தானே கதைத்தீர்கள்? ” எதிரில் அவர்!

முகாமையாளருடன் வரி தொடர்பான நெடிய கலந்துரையாடலின் பின் இருக்கை நோக்கி வந்த என்னை கேள்வியுடன் வழி மறித்துக் கொண்டு நின்றார்..!

தொழில்நுட்ப பகுதியில் வேலை, ஐம்பதைக் கடந்தும் வேலை..வேலை..! நம் நாடுதான்! பெரும்பான்மை!

வழமையாக எதிர்கொள்ளும் கேள்விதான்! 
இது அவருக்கு ஒரு நோய் போல தொற்றிக் கொண்டிருந்தது..! அவர் காணும் வேளையில் இருவர் உரையாடிக் கொண்டிருந்தால், அவரைப் பற்றியே கதைப்பதாக உருவகப் படுத்திக் கொண்டு அதைப் பற்றியே அனத்திக் கொண்டிருப்பது அவரின் வாடிக்கை! பல நேரங்களில் எரிச்சலை உண்டு பண்ணினாலும் வயதைக் கருதி கட்டுப்படுத்திக் கொள்வேன்!

நிமிர்ந்தேன்! இன்னும் என்னைப் பார்த்துக் கொண்டே நின்றார்.!

பதிலில்லாமல் நகரப் போவதில்லை என்பது தெளிவாக விளங்கியது!

அலுவலக நிலவரம் – மேல்மட்டத்தை அவர்களின் குடும்பத்தைப் பற்றியே நினைக்க நேரமில்லாமல் படுத்திக் கொண்டிருக்க‌ இவரைப்பற்றி நினைக்க அவனுகளுக்கு எங்கே நேரம்? சொன்னால், நான் மறைப்பதாக வாதிடுவார்!!

ஓம் என்பது போல தலையாட்டினேன்..!

அவரிடம் பரபரப்புத் தொற்றிக் கொண்டது!!

“என்ன?? .. என்ன?? என்னைப்பற்றி…” வார்த்தைகள் மூச்சிரைப்புடன் வர..!

“நாம் நேற்று மதியவேளையில் கதைத்துக் கொண்டிருந்தது அவரைப் பற்றியா என விசாரித்தார்” என்றேன்!

முகம் மாற, குழப்பத்துடன் ஏறிட்டார்!

சத்தமாக சிரித்துவிட…

கொஞ்சம் நிம்மதி படர! :”உனக்கு பகடி ..! ” என்றவாறே நகர்ந்தார் அவர்..!

மீண்டும் அரைமணித்தியாலத்தில் இதே கேள்வியுடன் அவர் வருவார் என எனக்குத் தெரியும்!

உலகம் சுழலுவது தன்னைச் சுற்றி மட்டுமே, அனைத்துக் கண்களும் , ஏன் அனைவரின் எண்ணங்களும் என்னைப் பற்றியே என எண்ணும் அங்கிள்களை மாற்றுவது கடினமல்லவா!!

ஒன்றும் செய்ய முடியாது..! சிரித்துவிட்டு கடந்து செல்வதைத் தவிர!!

பகிர:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன