அலுவலக அரசியல் : இருக்கு ஆனா இல்ல!!!!!!!!!!

பலர்மேற்சொன்னஅரசியலுக்குள்அகப்பட்டிருக்கலாம்ஏன்அதைநடத்திக்கொண்டேஇருக்கலாம்என்பங்கிற்குசும்மாஒருபதிவு.

உண்மையில் அரசியலுக்கு என்ன அர்த்தம் என்று எனக்குதெரியாது. ஆனால் இப்போதுள்ள நிலையில் ஒன்று மட்டும்புரிகின்றது- அரசியல் என்றால் முகஸ்துதி செய்து கொண்டேபின்னுக்கு குழி பறிப்பது. ஓரளவு ஒத்துப்போகின்றதா?? அதோடு ,தன்னை மட்டும் முன்னிறுத்த பிறரை பூச்சியமாக்கும்நடவடிக்கையும் அரசியல்தான். ஒத்துக்கொள்கின்றீர்களா?? இந்தவிளக்கங்களை வைத்து தனி மனித நடவடிக்கைகளினை ஓரளவுஉற்று நோக்கினால் ஒன்று புரிகின்றது. அரசியல் அரசியல்…. நவீனஅரசியல் தவிர வேறு எதுவும் இல்லை.

அலுவலகச்சூழலில் இது இப்போது பழக்கப்பட்டஒன்றாகிப்போய்விட்டது. எவ்வளவு அந்நியொன்னியம்காட்டிப்பழகும் சக ஊழியர் மீதும் ஓரத்தில் ஓர் சந்தேகம்இருப்பதை தவிர்க்க முடியாதளவு அரசியல்சூழ்ந்துள்ளது. தோளில் கை போட்டுக்கொண்டுமுதுகின் பின் கத்தி வைத்துக்கோண்டிருக்கும்அபாயகரமான மனிதர்கள் இப்போது அதிகரித்துவிட்டார்கள். அதற்கு அலுவலகத்தினைபொறுத்தவரையில் முக்கிய காரணம்,மேலிடத்திற்கோ, அல்லது தனது மேலாளரிடமோ இருப்பை நிலை நிறுத்துவதற்காகஇருக்கும். 

அனேகமாக அலுவலக அரசியல் நடத்துவோர் தன் மீதான நம்பிக்கை குறைந்தவர்களாக,மற்றவன் தன்னை முந்திவிடுவானோ எனப் பயந்தவர்களாகவே இருக்கின்றனர்.அதோடு, தான் எதிரி என்ற் கருதுவோரை நேரடியாக எதிர் கொள்ளும் துணிச்சல் அற்றநபர்களாகவும் இருக்கின்றனர். இதுதான் மிக அபாயகரமான ஒரு விடயம். எதிரி யார்எனத்தெரியாமல் யாரிடம் போய் மோதுவது? கூடச்சிரித்து சிரித்துப்பேசும் அலுவலகநண்பர்தான் நமது எதிரி என்றால் நம்புவது கஸ்டமாகத்தான் இருக்கும் ஆனால்அதுதான் உண்மையாக கூட இருக்கலாம்.

எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள் மூலமே இதை நான்பதிகின்றேன்.

அலுவலக அரசியலை எவ்வாரு இன்ங்காண்பது என்பது தொடர்பில்நான் பட்டுத்தேர்ந்த சிலவற்றை உங்களுடன் பகிர்கின்றேன்.

எப்போதும் நம்மை சுற்றி ஒரு இறுக்கமான அரண் ஒன்றினைஇட்டுக்கொள்ள வேண்டும். அதற்காக அலுவலகத்தினுள்முறைத்துக்கொண்டு திரிய வேண்டிய அவசியமில்லை. எதைஎதை நமக்குள் அனுமதிக்கலாம் என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும். மற்றவர்கள்அதில் தலையிட அனுமதிக்க கூடாது.

அலுவலக நட்புக்கள் மற்றும் உறவுகளை நமது தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்துகொஞ்சம் தூரத்தில் வைப்பது நல்லது. இரண்டையும் கலந்து விட்டால், நம்மை கவிழ்க்க காத்திருக்கும் நண்பர்களுக்கு (??) பல தகவல்கள் கிடைக்கலாம்.

ரொம்ப நட்பாக தன்னை காட்டிக்கொள்ள முனையும் அலுவலக நண்பர்களினை கொஞ்சம் அச்சத்துடன் நோக்கினால் நலம். உள் குத்து ஏதாவது இருக்கா என முழிச்சிருந்து ஆராய வேண்டும்.

எனது பலவீனம் இதுதான் என நாம் காட்டிவிடுவது அலுவலக அரசியல்வாதிகளுக்கு நம்மை கவிழ்க்கும் வேலையினை இன்னும் இலகுவாக்கிவிடும்.

உதவிகள் கோரும் போது, கொஞ்சம் நிதானித்து கேட்க வேண்டிய ஆளிடம் கேட்கின்றோமா? என்பதிஅ தீர்மானித்து பின்,கேட்கலாம். வேலையோடு தொடர்பான உதவிகள் தவிர்ந்த தனிப்பட்ட உதவிகளினை கேட்கும் போது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

நமது மேலாளர்களோ எஜமானர்களோ எம்மீது வைத்திருக்கும் அபிப்பிராயத்தினை ஒரளவாவது அற்ந்து கொள்ளுவது எமக்கு பலமாக இருக்கும். அதற்கேற்ப எம்மை மேலும் புதுப்பித்துக்கொள்ளலாம். அதோடு அவர்கள் மீதான , வேலை மீதான விருப்பினை அடிக்கடி வெளிப்படுத்துவது இன்னும் சிறப்பு.

எனக்குத்தெரிஞ்சது நான் பட்டறிந்தது இவைகள்தான். அதோட, உங்களுக்கு எதிரா ஒரு அரசியல் போய்க்கொண்டிருக்கின்றது தெரிந்தால், சுதாரித்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு நோ அகிம்சை. நம்மளும் முழு நேர அரசியல்வாதியாகி விட வேண்டியதுதான்!!!!!!! பின்ன நமக்கு மகாத்மா பட்டம் வாங்கவா ஆசை? அப்புடி இருந்தாலும் தந்துடுவானுகளா என்ன??? கச்சைய இறுக்கி கட்டிக்கி கோதாவுல குதிங்க பாஸ்!!!!!!!!!!!!

பகிர:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன