நீங்க சொல்றது வேறவா

அருகில் உள்ள அலுவலகம் ஒன்றில் பாதுகாப்பு கடமையில் நமது நாட்டைச் சேர்ந்த ஒருவர் பாதுகாப்பு கடமையில் இருக்கின்றார். காணும் போது குசலம் விசாரிப்பதும், நாட்டு நிலமை பற்றி எதையாவது கதைப்பதும் வழமை.! இப்போதெல்லாம் ஆளைக் கண்டால் தெறித்தோடும் நிலை! காரணம் – MLM ( Multi Level Marketing ) யாரோ நம்நாட்டு பெரும்பான்மை ஒருவன் இழுத்துவிட்டிருக்கின்றான், காசு கொட்டும் என ஆசை வார்த்தைகள் வேறு. 1500 திர்ஹம்களுக்கு அழகு சாதனப் பொருட்களை ஆளின் தலையில் கட்டிவிட்டான்….

பகிர:

மறுவாழ்க்கைக்காக ஒழச்சிக்கி இரிக்கார்

அஸ்ஸலாமு அலைக்கும்! எங்க ஆளக்க்காணல்ல! “இருக்கம்! கிட்டத்தில ரூம் மாறின! “ ஆ! என்ன கேஸ்? ஏன்!! நீங்க XXXXX ட எலா இருந்த! “ஓவ்! அத கேக்காதங்கோ! எங்கிட ஊராக்கள் இல்ல என்டு அவரோட செட் ஆகி இருந்த, அவர் நமக்கு பாத்தார் ஒருவேல!!” ??? இப்ப XXXXX ஓட இல்லயா? “பாத்த வேலைக்கு இரிக்கிறா இன்னம்?” ?? “ரூம்ல தண்ணி கரண்ட் கட் பண்ணிட்டானுகள்! ரெண்டு நாள் ஒரு மாதிரியா மெனேஜ் பண்ணிட்டம்! மூணாவது…

பகிர:

பணம்!

இப்றாலெப்பைக்கு அவர் சொந்தம்!! திரும்ப திரும்ப யோசித்தும்.. சொந்தம் தான்!! உறுதிப்படுத்திக் கொண்டான்! சிறுவயதில், ஓரளவு அறிமுகம் இருந்தது! நெருங்கிய சொந்தமென்றாலும், ஓரளவுதான் அறிமுகம்! காரணம்.. மிக எளிது! பணம் பறித்த குழியில் இப்றாலெப்பை இருக்க அது பறித்தப் போட்ட மேட்டில் அவர் இருந்தார்! அதனால், இப்றாலெப்பை எல்லாம் அவர் + அவர் குடும்பத்திற்கு பொருட்டே இல்லை! உயிருள்ள ஏதாவது ஒன்றென மட்டும் அவர்கள் அவனை கணித்திருப்பர். காலம் சுழல, இதோ இன்று – வலிமா ஒன்றில் அவரைக் கண்டதும்…

பகிர:

பெயரில்லா உறவொன்று

அன்று மிக அவசரம் வேலையினை முடிக்க வேண்டும். கம்பியூட்டரில் மூழ்கிக்கொண்டிருந்தேன்.“அண்ணே…..” குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தேன். ஹோட்டலில் துப்பரவுப்பணியில் ஈடுபடும் ஒருவர், வயசு 35 க்கு மேல் இருக்கும். முகத்தில் சோக ரேகை முழுதாக மூடியிருந்தது.என்ன? என்பது போல என்ற பார்வைக்கு, “உங்க ஆபிஷ கிளீன் பண்ண சொல்லி சூப்பர்வைசர் அனுப்பிச்சார்………….” என்றவாறு இழுத்தார். அவரின் பேச்சும் நடைத்தையும் என்னை அசௌகரியப்படுத்தின. வரிக்கு வரி எனக்கு அவர் மரியாதை செய்வது எனக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. “இந்தியாவா??”“ஆமா சார்..”“பெய்ரென்னங்க?”“கண்ணன்…

பகிர:

விபத்து : சாவினை இறைத்து வைத்திருக்கும் வீதிகள்

இன்று நண்பகலில் எனது அலுவலகத்திற்கு முன்னுள்ள நெடுஞ்சாலையில் ஒரு விபத்து. அனேகமாக பாகிஸ்தானிய பெண்ணாக இருக்க வேண்டும். வீதியினை கடக்க முயற்சிக்கும் போது, வேகமாக வந்த காரினால் அடிக்கப்பட்டு தூக்கி எறியப்பட்டுள்ளார். சுமார் 15 அடி வரைக்கும் அவரது உடல் தூக்கி எறியப்பட்டுள்ளது. பிழை அப்பெண்மணி மீதுதான். வீதியினை பாதுகப்பற்ற முறையில் கடக்க முற்பட்ட போது நிகழ்ந்த அவலம் இது. இங்கு இவ்வாறான விபத்துக்கள் வழமையாகி விட்டது.  பெரும்பான்மையான விபத்துக்கள் இவ்வாறானவையாகத்தான் இருக்கின்றன. அவசர அவசரமாக வீதியினை…

பகிர:

நான்தான்…… நான்தான்…….. ஏமாந்த சோணகிரி………

காலையில் அலாரம் அலறும் போது ஆரம்பிக்கும் வெறுப்பினை, எனது மனேஜரின் மீதான வசை பாடலுடன் ஆரம்பித்துவிடுவேன் ஏதோ பள்ளி எழுச்சி போல..  அவர் ஒன்றும் அப்படி மோசமில்லை என்பது போல்த்தான் தோன்றும்.. ஆள் எமகாதகன்.. கொடுத்த வேலையினை சரியாக முடிக்கும் வரை விடமாட்டார் அதன் தீவிரம் கோப்புக்களின் வரிசைக்கிரமம் வரை தொடரும். அதனால் அதிகம் அழுவது (வடிவேலுவைப்போல்….. அவ்…… முடியல..) நானாகத்தான் இருக்கும்.  அன்று வியாழக்கிழமை என்பதால் எல்லோரும் சுறுசுருப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர். வேறொன்றுமில்லை நாளை வெள்ளி அல்லவா…….. அதுதான்… அவசர அவசரமாக வேலைகளினை முடித்து…

பகிர:

அரசியலும் பெருவணிகமும்

அமேரிக்கா தொடங்கி இந்தியா வரை பெரு வணிக நிறுவனங்கள்தான் அரசியலை மறைமுகமாக செய்கின்றன. யார் ஆட்சிக்கு வந்தால் நமக்கு சாதகம் என்பதை கணித்து உரிய கட்சிகளுக்கு நிதியினை வாரி வழங்குவதில் இப்பெரு வணிக நிறுவனங்கள் ஒரு போதும் பின் நிற்பதில்லை. இரு கட்சிமுறை உள்ள‌ அமெரிக்காவில் பகிரங்கமாக கட்சிகள் நிதி சேகரிப்பதற்கான வழிமுறைகள் காணப்படுகின்றது. அங்கு சேகரிக்கப்படும் நிதி தொடர்பிலான தணிக்கைச் சட்டங்கள் நடைமுறைகள் காணப்படுகின்றன. இருந்தும் அங்குள்ள சட்ட திட்டங்களையும் தாண்டி மறைமுக நிதிதிரட்டல்கள் தொடர்பிலும்…

பகிர:

என்னைப் பற்றித் தானே கதைத்தீர்கள்?

” என்னைப் பற்றித் தானே கதைத்தீர்கள்? ” எதிரில் அவர்! முகாமையாளருடன் வரி தொடர்பான நெடிய கலந்துரையாடலின் பின் இருக்கை நோக்கி வந்த என்னை கேள்வியுடன் வழி மறித்துக் கொண்டு நின்றார்..! தொழில்நுட்ப பகுதியில் வேலை, ஐம்பதைக் கடந்தும் வேலை..வேலை..! நம் நாடுதான்! பெரும்பான்மை! வழமையாக எதிர்கொள்ளும் கேள்விதான்! இது அவருக்கு ஒரு நோய் போல தொற்றிக் கொண்டிருந்தது..! அவர் காணும் வேளையில் இருவர் உரையாடிக் கொண்டிருந்தால், அவரைப் பற்றியே கதைப்பதாக உருவகப் படுத்திக் கொண்டு அதைப் பற்றியே…

பகிர:

அலுவலக அரசியல் : இருக்கு ஆனா இல்ல!!!!!!!!!!

பலர்மேற்சொன்னஅரசியலுக்குள்அகப்பட்டிருக்கலாம், ஏன்அதைநடத்திக்கொண்டேஇருக்கலாம். என்பங்கிற்குசும்மாஒருபதிவு. உண்மையில் அரசியலுக்கு என்ன அர்த்தம் என்று எனக்குதெரியாது. ஆனால் இப்போதுள்ள நிலையில் ஒன்று மட்டும்புரிகின்றது- அரசியல் என்றால் முகஸ்துதி செய்து கொண்டேபின்னுக்கு குழி பறிப்பது. ஓரளவு ஒத்துப்போகின்றதா?? அதோடு ,தன்னை மட்டும் முன்னிறுத்த பிறரை பூச்சியமாக்கும்நடவடிக்கையும் அரசியல்தான். ஒத்துக்கொள்கின்றீர்களா?? இந்தவிளக்கங்களை வைத்து தனி மனித நடவடிக்கைகளினை ஓரளவுஉற்று நோக்கினால் ஒன்று புரிகின்றது. அரசியல் அரசியல்…. நவீனஅரசியல் தவிர வேறு எதுவும் இல்லை. அலுவலகச்சூழலில் இது இப்போது பழக்கப்பட்டஒன்றாகிப்போய்விட்டது. எவ்வளவு அந்நியொன்னியம்காட்டிப்பழகும் சக ஊழியர் மீதும் ஓரத்தில் ஓர் சந்தேகம்இருப்பதை தவிர்க்க முடியாதளவு அரசியல்சூழ்ந்துள்ளது. தோளில் கை போட்டுக்கொண்டுமுதுகின் பின் கத்தி வைத்துக்கோண்டிருக்கும்அபாயகரமான மனிதர்கள் இப்போது அதிகரித்துவிட்டார்கள். அதற்கு அலுவலகத்தினைபொறுத்தவரையில் முக்கிய காரணம்,மேலிடத்திற்கோ, அல்லது தனது மேலாளரிடமோ இருப்பை நிலை நிறுத்துவதற்காகஇருக்கும்.  அனேகமாக அலுவலக அரசியல் நடத்துவோர் தன் மீதான நம்பிக்கை குறைந்தவர்களாக,மற்றவன் தன்னை முந்திவிடுவானோ எனப் பயந்தவர்களாகவே இருக்கின்றனர்.அதோடு, தான் எதிரி என்ற் கருதுவோரை நேரடியாக எதிர் கொள்ளும் துணிச்சல் அற்றநபர்களாகவும் இருக்கின்றனர். இதுதான் மிக அபாயகரமான ஒரு விடயம். எதிரி யார்எனத்தெரியாமல் யாரிடம் போய் மோதுவது? கூடச்சிரித்து சிரித்துப்பேசும் அலுவலகநண்பர்தான் நமது எதிரி என்றால் நம்புவது கஸ்டமாகத்தான் இருக்கும் ஆனால்அதுதான் உண்மையாக கூட இருக்கலாம். எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள் மூலமே இதை நான்பதிகின்றேன். அலுவலக அரசியலை எவ்வாரு இன்ங்காண்பது என்பது தொடர்பில்நான் பட்டுத்தேர்ந்த சிலவற்றை உங்களுடன் பகிர்கின்றேன். எப்போதும் நம்மை சுற்றி ஒரு இறுக்கமான அரண் ஒன்றினைஇட்டுக்கொள்ள வேண்டும். அதற்காக அலுவலகத்தினுள்முறைத்துக்கொண்டு திரிய வேண்டிய அவசியமில்லை. எதைஎதை நமக்குள் அனுமதிக்கலாம் என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும். மற்றவர்கள்அதில் தலையிட அனுமதிக்க கூடாது. அலுவலக நட்புக்கள் மற்றும் உறவுகளை நமது தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்துகொஞ்சம் தூரத்தில் வைப்பது நல்லது. இரண்டையும் கலந்து விட்டால், நம்மை கவிழ்க்க காத்திருக்கும் நண்பர்களுக்கு (??) பல தகவல்கள் கிடைக்கலாம். ரொம்ப நட்பாக தன்னை காட்டிக்கொள்ள முனையும் அலுவலக நண்பர்களினை கொஞ்சம் அச்சத்துடன் நோக்கினால் நலம். உள் குத்து ஏதாவது இருக்கா என முழிச்சிருந்து ஆராய வேண்டும். எனது பலவீனம் இதுதான் என நாம் காட்டிவிடுவது அலுவலக அரசியல்வாதிகளுக்கு நம்மை கவிழ்க்கும் வேலையினை இன்னும் இலகுவாக்கிவிடும். உதவிகள் கோரும் போது, கொஞ்சம் நிதானித்து கேட்க வேண்டிய…

பகிர:

பிள்ளையார் பிடிக்கப் போய்…..

மகனைப்பற்றிய கவலை போடியாரை அரித்துக்கொண்டே இருந்தது. “இவனை என்ன செய்வது? சுட்டுப்போட்டாலும் வருதில்லியே!!” என எண்ணிக்கொண்டே கடை வீதிப்பக்கம் வண்டியினை உருட்டிக்கொண்டிருந்தார். “ எத்தன பிரயத்தன்ங்கள் , முயற்சிகள் …. சே! ஒன்றிலும் இவன் தேறின பாடில்லை..” என அலுத்தவாறே தனக்குள் முணு முணுத்துக்கொண்டார்.. வண்டி, நணபர் மம்மாக்கரின் கடை முன்னே நின்றது. “என்ன மகண்ட யோசினையோ?..” என சிரித்தவாறே போடியாரை நோக்கினார் மம்மாக்கர். “ஓண்டாப்பா. உனக்கு தெரியாததா! இவன் ஏ எல் எடுத்துட்டான். ஆனா இன்னும் இந்த…

பகிர: