என்னைப்பற்றி

நீண்ட பயணம் ஒன்றினை முடித்துவிட்டு, மீதமுள்ள நாளைக் கழிக்க சொந்த ஊர் திரும்பியுள்ள ஒரு சஞ்சாரி!

பொருளியலில் பட்டம் பெற்று கணக்கியலில் அரைகுறையாய் கற்று மீண்டும் பொருளியலில் ஒரு கரை காண மீண்டும் ஏட்டினை கையில் எடுத்துள்ளேன்.

இளங்கலை முடித்தது தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில். விஞ்ஞான முதுமாணியினை ஆரம்பித்துள்ளது – பேராதனைப் பல்கலைக்கழக விவசாய பட்டப்பின் படிப்பு நிறுவகத்தில்

எழுத்தின் மீதும் வாசிப்பும் மீதும் நீண்டகால காதல் உண்டு, அக்காதலை எனக்குள் கடத்திய தந்தையினை நினைவுகூர்ந்தவனாக, பாடசாலைக் காலத்தில், அகில இலங்கைரீதியாக 2001 இல் தமிழ் மொழித் தினத்தில் பெற்ற தங்கப்பதக்கத்தினையும் ஒரு முறை நினைவில் நிறுத்துகின்றேன்.

வலைப்பூக்கள் எழுதுகின்ற பழக்கம் 2008 இலிருந்தே ஆரம்பமான ஒன்று. ஆரம்பத்தில் sarhoon.blogspot.com என்ற வலைப்பூவில் எழுத தொடங்கி பின்னர் சொந்த இணையப்பக்கத்தில் கொஞ்ச நாட்கள் எழுதுவதும் பின்னர் தேங்குவதும் என போய்க்கொண்டிருக்கின்றது.

இனிவரும் நாட்களில் தொடர்ச்சியாக முடிந்த பங்களிப்பினை வழங்க முயற்சிக்கின்றேன்.

வருகை தந்த அனைவருக்கும் நன்றிகள்.! இணைந்திருங்கள்! ( https://www.facebook.com/sarhoon.comm )

தொடர்புகளுக்கும் ஏனைய கருத்துரைகளுக்கும்: